ஞாயிறு, 10 ஜனவரி, 2016

அம்மா

அம்மா






அ – உயிர்

ம் – மெய்

மா – உயிர் மெய்

அம்மா என்ற சொல்லுக்கு இத்தனை அழகான பொருள் தமிழைத் தவிர வேறு எந்த மொழியிலும் இல்லை.உலகிலேயே மிக அழகான சொல் என்றால் அம்மாதான்! எந்த உயிரை எடுத்துக் கொண்டாலும் தன்னலமற்ற ஒரு உறவு என்றால் அம்மாதான். இதை நன்கு அறிந்த ஒரு அறிஞன்,

தெய்வம் பூமிக்கு வருவதில்லை

தாயைப் பதிலுக்கு அனுப்பி வைத்தான்.

என்று கூறினார். தன்னலமான பிள்ளைகளைப் பார்த்திருப்போம். ஆனால் தன்னலமான அன்னையை எங்கும் பார்த்திருக்கமாட்டோம்.

யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் – திருமூலர்

நான் பெற்ற துன்பம் என்னோடு போகட்டும் – அம்மா

தனக்காக வாழாமல் தன் குடும்பத்தின் மகிழ்ச்சிக்காக தன் வாழ்நாளையே அர்ப்பணிப்பவள் தான் அன்னை என்னும் அன்புள்ளம் கொண்டவள். பணத்திற்காக வெளியூர் சென்று பணிபுரியும் மகனைப் பெற்ற தாய் கண்ணீர் மல்க எழுதிய கவிதையை ஒரு நூலில் படித்தேன். அக்கவிதை,

மகனே…

நீ பிறந்த அன்று

தோட்டத்தில் வைத்தோம்

ஒரு தென்னங்கன்று

எங்கள் வியர்வையில்

நீ உயர்ந்தாய்

நாங்கள் வார்த்த தண்ணீரில்

தென்னை வளர்ந்தது

எங்கோ இருந்து நீ ஈட்டும் பணம்

உனக்கு இன்பம் தருகிறது

இங்கே இருக்கும் தென்னை மரம்

எங்கள் இருவருக்கும்

சுக நிழலும் சுவை நீரும் தந்துதவுகிறது

ஒருநாள்……

நீ ஈ மெயிலில் மூழ்கியிருக்கும்போது

எங்களை ஈ மொய்த்த செய்தி வந்து சேரும்

இறுதிப் பயணத்தில்

நீ இல்லாமற் போனாலும்

தென்னை ஓலை

எங்கள் கடைசி மஞ்சமாகும்!

ஒரு அன்னையின் தவிப்பை அழகாக கூறுகிறது இக்கவிதை. ஆயிரம் பேர் நம்மிடம் அன்புகாட்டினாலும் அன்னைப் போல வருமா? பிள்ளை தன்னுடைய அன்பைப் பிரதிபலிக்காவிடினும், தாய் அதைப் பொருட்படுத்தமாட்டாள். தாயையோ தாயன்பையோ அலட்சியப்படுத்தாதீர்கள். தாயின் மனதை புண்படுத்தாதீர்கள். தாய் பாசத்தின் வேர்களினால்தான் பாரதத்தின் பண்பாட்டு மரம் பூத்துக் குலுங்குகிறது. அந்த வேர்களை யாரும் வெட்டிவிடாதீர்கள்.   


சனி, 9 ஜனவரி, 2016

சிந்தனை மன்றம்

08.1.16 அன்று நடைபெற்ற சிந்தனை மன்றத்தில் மாணவிகள் கவிதை, பாடல், பொது அறிவுச் செய்திகளைப் பகிர்ந்து கொண்டனா்.



அறிவுக் களம்

வணக்கம் அம்மா,

7.1.16 வியாழன் அன்று நடைபெற்ற அறிவுக்களம் நிகழ்வில் இயற்பியல் துறைப் பேராசிரியை  கே.வனிதா அவா்கள் அடிப்படை அறிவியல் என்ற தலைப்பில் உரையாற்றினாா்.

வெள்ளி, 8 ஜனவரி, 2016

இயற்கை ..!!


இயற்கை..!!!

இறைவனின் படைப்பிலே

இயற்கையும்

ஓர் அற்புதப் படைப்புதான்..!!!

பூமியை அழகுபடுத்தும் ஓர்

அற்புத சாதனம் இயற்கை..!!

கோடையின் கொந்தளிப்பும்

குளிரின் நடுக்கமும்

கொண்டது இயற்கை..!!

மழைக்காலத்தில் செழுமையும்

கோடைக்காலத்தில் வறட்சியும்

மாறி மாறி கட்டித்தழுவும்

ஓர் அற்புத நிகழ்வு இயற்கை..!!

வானிற்கே வர்ணமிடும் வானவில்;

இரவிற்கு கோலமிடும் நட்சத்திரம்;

இருட்டிற்கு வெள்ளையடிக்கும் நிலா;



பசுமைக்கு உயிரிடும் மரங்கள்;எனப்

பல புதுமைகள் கொண்டது இயற்கை..!!

மனித வாழ்க்கையின் நம்பிக்கை இயற்கை..!!

இயற்கை வளம்காத்து

இறைவனடி சேர்வோம்..!!!

மனிதனே..!!!


மனிதனே..!!


மனிதனாய் இருக்கத் தெரிந்து கொள்

மரியாதை கிடைக்கும்..!!

தோழனாய் இருக்கத் தெரிந்து கொள்

நட்பு கிடைக்கும்..!!

ஒற்றுமையாய் இருக்கத் தெரிந்து கொள்

ஒருமைப்பாடு கிடைக்கும்..!!

பாசமாய் பழகத் தெரிந்து கொள்

பாராட்டுக் கிடைக்கும்..!!

பொறுமையாய் இருக்கத் தெரிந்துகொள்

பெருமை கிடைக்கும்..!!

பகைவனை மன்னிக்கத் தெரிந்துகொள்

புகழ் கிடைக்கும்..!!

இறைவனை வணங்கத் தெரிந்துகொள்

அருள் கிடைக்கும்..!!

நம்பிக்கையாய் உழைக்கத் தெரிந்துகொள்

நினைத்தது கிடைக்கும்..!!


முயற்சியின் இலக்கு..!!


முயற்சியின் இலக்கு..!!


உங்களால் பறக்க முடியவில்லையா..??ஓடுங்கள்..

உங்களால் ஓட முடியவில்லையா..??நடங்கள்..

உங்களால் நடக்க முடியவில்லையா..??தவழுங்கள்..

ஆனால் எதையும் செய்தாலும் உங்கள்

இலக்கை நோக்கி நகர்ந்து கொண்டே இருங்கள்..!!!

முயற்சி செய்  இலக்கை அடையலாம்..!!

முயற்சிக்கானப் பயிற்சியைச் செய்

வெற்றி நிச்சயம்..!!

அ.ப.ஜெ.அப்துல் கலாமுக்கு சமர்பணம்..!!


அ.ப.ஜெ.அப்துல் கலாமுக்கு சமர்பணம்..!!!


விண்வெளியில் விண்கலன்களை ஏவின கைகள்

இன்று விண்ணிற்கே சென்றது ஏனோ..!!

நாங்கள் இழந்தது விஞ்ஞானி அல்ல

இந்திய தேசத்தின் விஞ்ஞானம்..!!

இது அழுகை அல்ல

இன்று பிறந்த குழந்தைகளின் குமுறல்..!!

இந்தியாவை இமயத்திற்கு கொண்டு சென்ற நீ

இமயத்தைக் காட்டிலும் உயரமான இடத்திற்கு

சென்றது ஏனோ..!!

நீ இல்லாத தேசத்தில்

நாங்கள் எவ்வாறு வாழ்வோம்..??

உன்னுடைய காலத்தில் நாங்கள் வாழ்ந்தது

எங்கள் பாக்கியம்-உன்னை காணமுடியாமல்

போனதோ எங்கள் துர்பாக்கியம்..!!

உன் முடியோ அழகு-நீ எடுத்துவைக்கும்

ஒவ்வொரு அடியும் அற்புதம்..!!

அப்துல் கலாம் என்ற பெயர் சூட்டியதும்

நீதான்..!!!

கோவிலுக்கு சென்று இந்தியா என்ற

பெயரில் அர்ச்சனை செய்ததும் நீதான்..!!

இதுவே தேசத்தின் மீது நீ வைத்த நேசத்தை

பரைசாற்றுகிறது..!!!

பாரத தேசத்தில் ஒரு கலாம் -இனி

பார்க்கமுடியுமா..??மற்றொரு கலாம்..!!

உன்னத மாமனிதனே உனக்கு நிகர் நீயே..!!

கடல் அளவு கூட போதாது உன்னை போற்ற

எவர் இருக்கிறார் உன்னை தூற்ற..??

விண்வெளி கூட உன் காலடியில்

நாளைய இந்தியா யார்கையில்..??

இராமேஷ்வரம் புனிதத்துவம் அடைந்தது உன்னால்..!!

உலகம் இராமேஷ்வரத்தை அறிந்ததும் உன்னால்..!!

இந்தியாவுக்கு விடியல் எந்நாள்..??

உன் கனவுகள் நனவாக போவது எந்நாள்..??

உதித்தெழுவோம் உனக்காக நாளைய

நாளைய இந்தியா நமக்காக..!!

வாழ்க கலாம்..!!வளர்க இந்தியா..!!

2020-லோ வளர்ந்த இந்தியா..!!

கட்டாயம் நிறைவேறும்..!!