நீருக்கு பஞ்சமில்லை..... மான்போல் துள்ளி ஓடும் நதியில்......
ஜொளிக்கும் நட்சத்திரமாய் வாழும்
மீன்கள்-ஏனோ.....
துள்ளி குதித்து தாவும்.... மீனை வர்ணிக்க வந்தேன்.......
நீல நதியில் வசிக்கும்.....
வண்ண மீன்களே.....!!
என்னிடம் உரையாட வா!!!
உன்னிடம் விளையாட வருகிறேன்..!
என் மனதில் ஏக்கம் ஏனோ...
முத்துகளைப் போல்
குவிந்து கிடக்கின்றது...!!
பல வண்ணங்களை கொண்ட
உன் மேனியை நேசித்தேன்.....
வசிப்பாயா என்னுடன் ? வினவ வந்தேன்
சட்டென்று தடுமாற்றம் படைதேன்....
உன்னை அழைத்துச் செல்ல
மறுக்கிறது என் மனம்... நீ வசிக்கும் உம் இடமே
உன் மகிழ்ச்சிக்கு காரணம்....
நீல நதியில் - நீ !!
துள்ளி விளையாடும்
மகிழ்ச்சியை உன்னிடம் இருந்து
பறிக்கமாட்டேன்......
உன் மகிழ்ச்சியை உன்னிடம் தந்து
உன் மகிழ்ச்சியை கண்டு
நான் மகிழ்ச்சி அடைகிறேன்
கண்ணே !!! Yamini. R I - B. Sc., CDF KSRCASW