வெள்ளி, 17 ஜூன், 2022

தந்தையர் தினம்

 தாய் என்பவள் 

பத்து திங்கள் 

வாழ்க்கையை தியாகம் செய்வாள்.. 

தந்தை என்பவன் 

வாழ்க்கையையே தன் பிள்ளைக்காக

 தியாகம் செய்வான்....                                                    ஹேமா.அ  2.B.COM KSRCASW

வெறுமை

 எப்போதும் முடிவதில்லை...!

இயந்திரமாய் வாழ்ந்து முடித்த பின்பும்!
இதயம் நிரம்பாத செயற்கை வாழ்வின்!
வெறுமைகள்....                                                        ச.கலாதேவி 1-bsc CS  KSRCASW

வியாழன், 16 ஜூன், 2022

மனது

 பயணம் கொண்டேன்....

விடியல் நோக்கினேன் ....!

இன்னும் எத்தனை பாதைகள் ?..

நீண்ட பயணம் போல் தோன்றும் வண்ணம்....

நினைத்தது போதும் விடியலை நோக்கி ஓடி என்றது மனது......!! 

                                                                                - Vaishnavi. A 1st BBA   KSRCASW

இசையை வீழ்த்தி

வண்ண விடியலே

மெல்லிய இதழில் 

மெல்லிசையோ...!!

வரும் வேளையிலே...!! 

தென்றலில் மிதக்கும் 

நீ...!!

இன்று யவரால் 

சிறையிடப் படுவாயோ...??

இசையை வீழ்த்தி..!!                                    - Yamini. R 1st B. Sc., CDF    KSRCASW                                                           

தந்தையின் கரம்

 கை விட மாட்டான்;என்ற நம்பிக்கையோடு, 

நான் பிடித்த முதல் ஆண்மகனின் கரம்"

என் தந்தையின் கரம்"

   
                                        -    A. Sowndarya 1st B. Com.  KSRCASW