திங்கள், 5 ஆகஸ்ட், 2019
வியாழன், 1 ஆகஸ்ட், 2019
படித்ததில் பிடித்தது......(சிந்தித்து பாருங்கள்)
மண்ணை வச்சி பொண்ணு செஞ்ச
காலம் மாறி போயாச்சி....
பொண்ணு வித்து மண்ணு வாங்கும்
காலத்துக்கு வந்தாச்சி.....
விளை நிலமா இருந்த மண்ணை
வெறு நிலமா போட்டாச்சி.....
விதை நெல்லு போட்ட மண்ணில்
விஷம் எடுக்க துணிந்தாச்சி......
பாட்டி சொன்ன வைத்தியம் எல்லாம்
முக நூலில் போட்டாச்சி.....
வைத்தியம் சொன்ன பாட்டியோட முகம் கூட .....
மறந்து போயாச்சி.....
விவசாயம் வேணுமுன்னு குறும் படமும் பாத்தாச்சி.....
விவசாயி ஆக மட்டும் .....
யார் மனமும் மறுத்தாச்சி......
என்னுடைய வாழ்க்கையை மாற்றிய கவிதை......!!!
தோற்றால் புலம்பாதே
"போராடு"
கிண்டலடித்தால் கலங்காதே
"மன்னித்துவிடு"
தள்ளினால் தளராதே
"துள்ளியெழு"
நஷ்டப்பட்டால் நடுங்காதே
"நிதானமாய் யோசி"
ஏமாந்து விட்டால் ஏங்காதே
"எதிர்த்து நில்"
"""""வெற்றி நிச்சயம்""""
தமிழை ...தாய்யோடு ...ஒப்பிடல்
ஐம்பெரும் காப்பியங்களை போல் எனக்காகவே வாழும் தாயே..... நான்கு வேதங்களில் சொல்ல தவறிய
நற் செயல்களை கூட.......
என் நல்வாழ்விற்காக கற்றுக்
கொடுத்த தாயே....
முக்கனியை போல் நானும் சிறப்பாக
வாழ வேண்டும்........
என்று .....
தான் எனக்கு கனி என்று
பெயர் வைத்தாயோ........
உன் இரு பாதம் தொட்டு வணங்கி
சொல்கிறேன்.....
தாயே என் ஓர் உயிர் நீ தான்
என்று........!!!!!!!
சனி, 27 ஜூலை, 2019
இணையத்தின் காலம்..!!!!
இணையத்தின் காலம் இது....!!!!!
💐💐💐💐💐💐💐💐💐💐💐
தண்ணீரை விட
உணவை விட
அவசியத்
தேவையாகிவிட்டது
இணைய இணைப்பு...!!!!
கைப்பேசியின் சிறிய சதுரத்திற்குள்
அடங்கிவிட்டது
நம் வாழ்விடம்....!!!
வைஃபையின் தயவில்
மயக்கத்தை
அனுபவமாக்குகிறது
நம் வாழ்வு....!!!!
குறுந்தகவலுக்கேற்ற சொற்களோடு
குறுகிவிட்டது
நம் மொழி....!!!
பீட்சாவும் பர்கரும்
இலவச இணைப்பான
அந்நிய குளிர்பானங்களோடு
வீட்டு வாசலுக்கே வருவதால்
மழை வெயில்
மாறி வருவதைப் பற்றி
நமக்கு
எந்தக் கவலையுமில்லை....!!!!
நிஜத்தில் வாழ்வதை விட
நிழல் உலகான
இணையத்தில்
இனிமை காணப் பழகி விட்டோம்...!!!
நம்மை ஒரு படி தாண்டி
அயல் தேசத் தோழர்களோடு
மெய்நிகர் விளையாட்டில் கலந்துகொண்டு
ஆவேசமாய்
கூச்சலிடுகிறார்கள் நம் குழந்தைகள்.... !!!
கணவன் ஓர் அறையிலும்
மனைவி ஓர் அறையிலும்
மடிக் கணினியில்
உலகின் ஏதேதோ
மூலைகளுக்குப் பயணம்போய்
குடும்ப பாரம் சுமக்கிறோம்...!!!!!!
களைத்துப் போய்
அதிகாலையில் கண்ணயர்கையில்
கிழக்கே உதிப்பது
மெய்நிகர் சூரியன் அல்ல
சுட்டெரிக்கும் சூரியன் என்பதை
உணர்வதில்லை நாம்
குளிர் சாதன வசதியால்...!!!!!!
நம் பருவங்களை உறிஞ்சி
பசுமைகளைக் கருக்கும்
புவியின் வெப்பமோ..
நம் நதிகளைச் சுரண்டி
நவீன நகர்களை எழப்பும்
புதிய பொருளாதாரமோ...
புரிந்துவிடாமல்
விலகா இருளை இழுத்து வந்து
விதைக்கிறது
நம் பகல் தூக்கம்.....!!!!!!!
மீண்டு
கண் விழிக்கையில்
தண்ணீரும் உணவும்
கணிணித்திரையில்
மெய்நிகர் காட்சிகளாக மட்டும் இருக்கும்...!!!!!!!
தீராப் பசியோடும்
முடிவிலாத் தவிப்போடும்
அலைந்து கொண்டிருப்போம் நாம்
பாளம் பாளமாய் வெடித்த
விவசாய நிலங்களை
வெறித்தபடி
தலைமுறை சாபங்களை
சுமந்தபடி....!!!!
💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐