சனி, 12 மார்ச், 2016

ஐடிஐ, டிப்ளமோ முடித்தவர்களுக்கு விவசாயத்துறையில் டெக்னீசியன் பணி..!!


மத்திய விவசாயத் துறையில் காலியாக உள்ள டெக்னீசியன் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Image result for srfmtti.dacnet.nic.

பணி: Technical Assistant - 02

சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,800

வயதுவரம்பு: 18 - 27க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: Agricultural Engineering பிரிவில் டிப்ளமோ முடித்து 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Senior Technician - 07

சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,400

வயதுவரம்பு: 18 - 27க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: Mechanic Agricultural Machinery, Mechanic Motor Vehicle, Mechanic Tractor, Mechanic Diesel Engine, Electrician டிரேடில் ஐடிஐ முடித்து 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 21.03.2016

மேலும் விண்ணப்பிக்கும் முறை, வயதுவரம்பு சலுகை, தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://srfmtti.dacnet.nic.inஎன்ற இணையதளத்தை பார்க்கவும்.

டிப்ளமோ, பட்டதாரிகளுக்கு இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் பணி..!!


இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் 2016 -2017-க்கு நிரப்பப்பட உள்ள 29 Junior Quality Control Analyst, Junior Engineering Assistant பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Image result for iocl
     மொத்த காலியிடங்கள்: 29
 பணி: Junior Engineering Assistant -IV-23           

1. Pwer & Utilities - 03                                              

2. Instrumentation - 05

3. Mechanical - 08

4. Production - 07

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் பிட்டர் தொழிற்பிரிவில் ஐடிஐ, இயற்பியல், வேதியியல், கணிதம் போன்ற பிரிவுகளில் பி.எஸ்சி பட்டம், பொறியியல் துறையில் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், இன்ஸ்ட்ரூமென்டேசன் மற்றும் கன்ரோல், கெமிக்கல் போன்ற பிரிவுகளில் டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயதுவரம்பு: 05.02.2016 தேதியின்படி 18 - 26க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.100. மற்ற பிரிவினர்களுக்கு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை: https://www.iocl.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான அனைத்து சான்றிதழ் நகல்களிலும் சுயசான்று செய்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

Chief Human Resource Manager, IOCL (Bongaigaon Refinery), Post Office – Dhaligaon, District – Chirang, Pin code – 783385.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி:28.03.2016

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.iocl.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.

வாசகா் வட்டம்



11.03.16 அன்று மாலை 3.00 மணிக்கு வாசகா் வட்டம் நடைபெற்றது மாணவிகள் தாம் படித்த நூல் குறித்து விமா்சனம் செய்தனா்.

லியோனார்டு ஃபிபொனாஸி


          



     லியோனார்டு ஃபிபொனாஸி இத்தாலி நாட்டில் பைசா நகரின் புகழ்பெற்ற அரசு அதிகாரி குடும்பமான பொனாஸி குடும்பத்தில் பிறந்தார்.  இவரது தந்தை அரசு அமைச்சராகப் பொறுப்பு வகித்தவர் ஆவார்.  அல்ஜீரியா நாட்டில் “புகியா” என்னும் இடத்தில் அமைந்திருந்த “பிஸா காலனி” என்ற இத்தாலி அமைப்பையும் நிர்வகித்து வந்தார்.
     லியோனார்டு ஃபிபொனாஸி தனது தந்தைக்கு உதவியாக கணக்கு வழக்குகளில் ஈடுபட்டு வந்தார்.  தொழில் ரீதியாக அவர் பல இடங்களுக்குச் சென்று வந்தார்.  குறிப்பாக மத்திய தரைக்கடல் பகுதிகளுக்குச் சென்று வந்தார்.
     எகிப்பு, சிசலி, சிரியா போன்ற பல்வேறு நாடுகளுக்கும் பயணம் செய்தார்.  அப்போது அந்நாட்டில் பயன்படுத்தப்பட்டு வந்த எண்களோடு, ரோம் எண்களையும் ஒப்பிட்டு பல ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார்.
     மற்ற நாடுகளில் உள்ள எண்முறைகளைவிட இந்தியாவில் பயன்படுத்தும் ஒற்றை வடிவமுள்ள எண்களே எளிதான எண் வடிவம் என்பது லியோனார்டு ஃபிபொனாஸியின் கருத்தாகும்.
     லியோனார்டு ஃபிபொனாஸியின் இக்கருத்துக்குப் பின் இந்தியாவிலுள்ள எண்களின் வடிவங்களிலும் சில மாற்றங்கள் ஏற்பட்டன.  நாம் இன்று அவ்வகை எண்களின் வடிவங்களைத்தான் பயன்படுத்தி வருகிறோம்.
      இந்துக்களின் தசம எண் (Decimal) முறைகளையும் இவா் பாராட்டியுள்ளார்.
     1202ஆம் ஆண்டு “லிபெல் அபாசி” என்னும் கணிதம் பற்றிய நூலை லத்தீன் மொழியில் எழுதினார்.  அதன் பிறகு 1220ஆம் ஆண்டு “செயல்முறை ஜியோமிதி” என்னும் நூலையும் தன் தாய்மொழியான லத்தீன் மொழியிலேயே எழுதியுள்ளார்.  இந்நூலில் இந்திய அல்ஜீப்ரா, எண் கணிதம் பற்றிய குறிப்புகள் அடங்கியுள்ளன.
     லியோனார்டு ஃபிபொனாஸி கண்டுபிடித்த மற்றொரு முக்கிய தொடர் எண் வாிசை 1, 1, 2, 3, 5, 8, 13, 21,……. என்ற எண் வரிசையாகும்.
     இத்தொடர் எண்களை வரிசை அடிப்படையில் F1, F2, F3, …….. என்று குறிப்பிடலாம்.
     இத்தொடரில் முதல் இரண்டு எண்களும் 1 ஆகும்.  மூன்றாவது எண் முதல் இரண்டு எண்களின் கூட்டுத் தொகை ஆகும்.  நான்காவது எண் மூன்றாவது, இரண்டாவது எண்களின் கூட்டுத்தொகையாக அமையும்.  இப்படியாக இந்த தொடர் எண் வரிசை சென்று கொண்டிருக்கும்.
     F1 = 1,     F2 = 1
     F3  = F2+F1 = 3
இப்படியாக,
     Fn = Fn-1 + Fn-2
பிபொனாஸி தேற்றம் 1
     ஃபிபொனாஸி தொடரில் தொடர்ந்து வரும் இரண்டு எண்களுக்குப் பொதுவான பண்புகள் ஏதும் இல்லை.  அவை முழு எண்களாக அமைந்திருக்கும்.  உதாரணம் – 13, 21.
பிபொனாஸி தேற்றம் 2  
      F1 + F2 + F3 + ………Fn = Fn+2 – 1
உதாரணமாக, n=6 என்றால்,
     F1 + F2 + F3 +…….. F6 = 1+1+2+3+5+8 = 20   
     Fn+2 – 1 = 21-1 = 20
பிபொனாஸி தேற்றம் 3
      Fn-1 × Fn+1 – Fn2 = (-1)n
உதாரணமாக, n=6 என்றால் 
      Fn-1 × Fn+1 – Fn2 = F5 × F7 – F62 = 5×13-82
                                        =65- 64 =1 (or) = (-1)6
                   
குறிப்பு - படித்ததில் பிடித்தது.
நூல் - உலக கணித மேதைகள் 


வெள்ளி, 11 மார்ச், 2016

'போட்டோஷாப்' தமிழன்..!!

ல்யாணம், காது குத்து முதல் ஃபேஸ்புக் வரை பல அலப்பறைகளையும், அட்ராசிட்டிகளையும் உண்டாக்க மிக முக்கிய காரணம் போட்டோஷாப். தொழில்நுட்ப துறையில் மிகப்பெரிய சக்சஸுக்கு காரணம் இந்த  போட்டோ ஷாப் சாப்ட்வேர் தான். அப்துல் கலாமுடன்,  மகேந்திர சிங் தோனியுடன், நடிகர் ரஜினிகாந்துடன், கூகுள் 'சுந்தர் பிச்சை' உடன் என யாருடன் வேண்டுமானாலும் நாம் இணைந்து நிற்கும்படியான புகைப்படம் ரெடி பண்ண போட்டோஷாப் தான் உதவி புரியும்.
அடோப் நிறுவனத்தின் போட்டோஷாப்  சாப்ட்வேர் தான் முதன் முதலில் வெகுஜன மக்கள் பயன்படுத்தும் விண்டோஸ் ஓ.எஸ்.-ல் வந்து இன்றளவும் டாப்பில் இருக்கிறது. ஒவ்வொரு முறை போட்டோஷாப் இயக்கும்போதும், சீதாராமன் நாராயணன் என்ற பெயர் வரும். யார் இந்த சீதாராமன் நாராயணன் என்று என்றைக்காவது  நீங்கள் தேடியிருக்கிறீர்களா?
அவர் வேறு யாரும் இல்லை, நமது  தஞ்சாவூர்காரர் தான். போட்டோஷாப்பில் புரட்சியை ஏற்படுத்தியவர். இன்றைக்கு நாம் பயன்படுத்தும் போட்டோஷாப்பை உருவாக்கியவர்களில் முக்கியமானவர் இவர். சமீபத்தில் தமிழகம் வந்திருந்த அவருடன் சில நிமிடங்கள் உரையாடியதில் இருந்து சில துளிகள் இங்கே.


தமிழ்நாடு ஓவர் டூ போட்டோஷாப் எப்படி சாத்தியமானது?

கும்பகோணம் அடுத்துள்ள ஸ்ரீவாஞ்சியம் தான் என் சொந்த ஊர். வளர்ந்தது எல்லாம் மெட்ராஸில் தான். சென்னை சாந்தோம் பள்ளியில் தான் எஸ்.எஸ்.எல்.சி. படிச்சு முடிச்சேன். பிறகு, திருச்சி என்.ஐ டி-யில் மெக்கானிக்கல் இன்ஜினீயரிங்  முடிச்சேன். 1980களில், அப்போது தான் கம்ப்யூட்டர் வளர்ச்சி அடுத்தகட்ட நிலைக்கு தாவிக்கொண்டு இருந்தது. மெக்கனிக்கல் படிச்சாலும் எனக்கு கம்ப்யூட்டர் மேல் இருந்த மோகம் அடங்கவில்லை.
அந்த காலகட்டத்தில் கம்ப்யூட்டர் சைன்ஸ் குரூப்பே கிடையாது. வெளிநாடுகளில் தான் படிக்க வேண்டும் என்ற நிலை. அப்பாவும், அம்மாவும் கவர்மென்ட் வேலையில் இருந்தார்கள். எனக்கு 4 சகோதரிகள் மற்றும் ஒரு சகோதரன். கணினி மேல் இருந்த ஆர்வத்தில் பி.இ. முடிச்சவுடனே அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழகத்திற்கு அப்ளை செஞ்சேன்.
மெரிட்டில் சதர்ன் இல்லினோயிஸ் பல்கலைக்கழகத்தில் இடம் கிடச்சுது. ஆனால் மெக்கானிக்கல் படிக்க தான் சீட் கொடுத்தாங்க. அதனால, வேற வழியில்லாம எம்.எஸ். மெக்கானிக்கல் பண்ணிட்டு  பிறகு எம்.எஸ். கம்ப்யூட்டர் சயின்ஸ் படிச்சேன். அதன் பிறகு கிறிஸ்டல் கிராஃபிக்ஸ் நிறுவனத்தில் 3டி கிராபிக்ஸ் செய்யும் வேலையில் இருந்தேன். அடுத்த இரண்டு வருடத்தில் அடோப் நிறுவனத்தில் பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டேன்.

இன்றைய நவீன முறையில் பயன்படுத்தப்படும் போட்டோஷாப் மென்பொருளை எப்படி கட்டமைத்தீர்கள்?

தாமஸ் நோல், ஜான் நோல் என்ற இருவரும் தான் உலகிலேயே முதன் முதலில் கருப்பு-வெள்ளை படங்களை ஸ்கேன் செய்ய 'பார்னி ஸ்கேன்' என்ற சாப்ட்வேரை வடிவமைத்தார்கள். பின்னர் அந்த சாப்ட்வேரை அடோப் நிறுவனத்திற்கு அவர்கள் விற்று விட்டார்கள். விண்டோஸ் நிறுவனம், அதன் இயக்க மென்பொருளுக்கு ஏற்றவாறு போட்டோஷாப்  சாப்ட்வேரை மாற்ற அடோப் நிறுவனத்திற்கு அழைப்பு விடுத்தது.
அடோப்பின் முயற்சிகள் தோற்றுபோய் கொண்டிருந்த சமயத்தில் நானும், பீட்டர் மெரில் இருவரும் இணைந்து பல கட்ட சோதனைகளுக்கு பிறகு விண்டோசில் சி ++ மொழி உதவியுடன் நிரல் எழுதி வெற்றிகரமாக இயக்க வைத்தோம். அப்போது அது வரவேற்பை பெற்றாலும், மிக பெரிய அளவில் பயன்பாட்டுக்கு வரவில்லை.
டிஜிட்டல் கேமரா வந்த பிறகு தான் ஒரு மாபெரும் தாக்கத்தை அது உலகம் முழுவதும் ஏற்படுத்தியது. நாங்கள் முதன் முதலில் விண்டோசில் பயன்படுத்தப்படும் போட்டோஷாப் 2.5ஐ உருவாக்கி ஏறக்குறைய 22 ஆண்டுகள் ஆகிவிட்டது. இப்போதும், என் தலைமையிலான குழு ஒவ்வொரு வெர்சனிலும் புது புது மாற்றங்களை கொண்டுவந்து கொண்டே இருக்கிறோம் .

Image result for சீதாராம நாராயணன் போட்டோ சாப்

இன்றைய தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி  பிரமிப்பாக இருக்கிறதே . மாணவர்கள் சி++ கற்றுக்கொண்டு இருக்கும்போதே ஆண்ட்ராய்ட் வந்துவிட்டதே... மாணவர்கள் எப்படி அப்டேட் செய்து கொள்வது? 

நாம் பேசும் மொழி போல தான் கணினி மொழியும். கணினி மொழிகளில் ஏதாவதொன்றை நன்றாக கற்று தேர்ச்சி பெறுபவர்களுக்கு பிரச்னை இல்லை. ஆனால், சி, சி++, ஜாவா. ஆண்ட்ராய்ட் என  எல்லாவற்றையும் அரைகுறையாக கற்றுக்கொள்வதே பிரச்னை. எந்த வழியில் ஒரு பிரச்னைக்கு தீர்வு கண்டுபிடிக்க போகிறோம் என்பது முக்கியமல்ல, எப்படி தீர்வு கண்டுபிடிக்க போகிறோம் என்பதே முக்கியம். இதை புரிந்துகொண்டால்போதும். சி++, ஜாவா, ஆண்ட்ராய்ட் என எதை கற்றாலும் நன்றாக கற்று அதிலேயே தீர்வை கண்டுபிடிக்கலாம். புரோக்ராம் நீளம் கொஞ்சம் கூட குறைய இருக்கலாம் அவ்வளவு தான்.

மொபைல் போன்களில் போட்டோஷாப் பயன்பாடு வெற்றி பெறவில்லையே ஏன்?

மொபைல் போன் தொடு திரைகளில் நாம் தொட்டு நகர்த்தும் துல்லியம் போய்விடுகிறது. பெரும்பாலும் ஆண்ட்ராய்டு தொழில்நுட்ப போன்களில் ஸ்டிக் பயன்படுத்தப்படுவதில்லை, ஸ்டிக் பயன்படுத்தினாலும் கூட கணிப்பொறியில் கிடைக்கும் துல்லியம் கிடைக்காது. ஏர் பிளாட்பார்மில் ஆண்ட்ராய்ட் போன்களில் நாங்கள் வெளியிட்டுள்ள அப்ளிகேஷனும் போதிய வரவேற்பு பெறவில்லை. ஆனால் நம்பிக்கை இழக்கவில்லை. விரைவில் கணினியில் பயன்படுத்தும் அதே போட்டோஷாப்பை மொபைலிலும் கொண்டு வருவோம். வெயிட் அண்ட் சீ என்றார்.

தமிழன்  தமிழின் ஓசையை உலகளவில் பரப்பி உள்ளனர்.இதை அறிந்துக் கொண்டு பெருமை அடைவோம் நாம் தமிழன் என்றும் தமிழ் நம் தாய்மொழி என்றும் தலை நிமிர்ந்து நிற்கலாம்..!!
நன்றிகள் பல நான் இதை அறிந்துக் கொள்ள உதவியது விகடன் செய்தித்தாள்..