வெள்ளி, 4 மார்ச், 2016

தமிழ் எழுத்துரு தந்த முன்னோடிகளில் முதன்மையானவர்..!!


புதிதாக வந்திருக்கும்ஐபோன் 6’-ல் தமிழில் தட்டுவது நமக்கு இன்றைக்கெல்லாம் சர்வ சாதாரணமாக இருக்கிறது. ஆனால், 30 வருடங்களுக்கு முன் கணினிக்குள் தமிழைக் கொண்டுவரும் கனவு சாத்தியமாவது அத்தனை எளிதாக நடக்கவில்லை. உலகின் வெவ்வேறு மூலைகளில் இருந்த, விரல் விட்டு எண்ணிவிடக் கூடிய எண்ணிக்கையிலான தமிழ் இளைஞர்கள் சிலர் அதற்கான முயற்சியில் இறங்கியிருந்தனர். அர்ப்பணிப்பு மிக்க அசாதாரணமான உழைப்பினால் இறுதியில் அதைச் சாத்தியமாக்கினர்; ‘யூனிகோடு' வரை கூட்டிவந்தனர். அவர்களில் ஒருவர் முத்து நெடுமாறன். கணினிக்குத் தமிழ் எழுத்துரு தந்த முன்னோடிகளில் முதன்மையானவர். மலேசியத் தமிழர்.


Image result for முத்து நெடுமாறன்
Image result for முத்து நெடுமாறன்


முரசு அஞ்சல் புதிய பதிகையில் சில குறிப்பிடத்தக்க புதிய தொழில்நுட்ப மேம்பாடுகளை முத்து நெடுமாறன் புகுத்தியுள்ளார்.இதுக் குறித்து அவர் கூறியது,
முதல்நிலைப் பதிப்பில் ‘அஞ்சல்’ மற்றும் ‘தமிழ் 99’ விசைமுகங்கள் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளன. முழுநிலைப்பதிப்பில் ஏற்கனவே உள்ள அனைத்து விசைமுகங்களும் வழக்கம்போல் இயங்கி வரும்.
செல்லினத்தின் 4.0ஆம் பதிகையில் சேர்க்கப்பட்டுள்ள புதிய ‘அஞ்சல்’ விசைமுகம் இரண்டு பதிப்புகளிலும் சேர்க்கப்பட்டுள்ளது.

Image result for முத்து நெடுமாறன்

முரசு அஞ்சல் இலவசப் பதிப்பில் ‘இணைமதி’ எழுத்துரு இணைக்கப்பட்டுள்ளது. மிக அழகிய வடிவிலான இந்த எழுத்துரு ஆப்பிள் கருவிகளிலும், எச்.டி.சி ஆண்டிராய்டு கருவிகளிலும், மெக்கிண்டாஷ் கணினிகளிலும் இயல்பாகச் சேர்க்கப்பட்டுள்ள எழுத்துரு.
விண்டோசுக்கான இலவச முரசு அஞ்சல் பதிகையில் இந்த எழுத்துரு சேர்க்கப்பட்டதன் வழி அதிகப் புழக்கத்தில் உள்ள அனைத்துக் கருவிகளிலும் கணினிகளிலும் ‘இணைமதி’ தமிழ் எழுத்துகளை அழகாக வழங்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த இணைமதியம் எழுத்துருவைக் கருப் பொருளாகக் கொண்டுதான் இன்றைய நிகழ்ச்சிக்கும் “இணைமதியம்” என்ற தலைப்புப் பெயர் சூட்டப்பட்டது.

Image result for முத்து நெடுமாறன்
விண்டோஸ்  இயங்குதளத்தை எல்லா நிலைகளிலும் பயன்படுத்தும் அனைத்துக்  கணினிகளிலும், கையடக்கக் கருவிகளிலும் இனி முரசு அஞ்சல் மென்பொருளை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தும் வண்ணம் புதிய பதிகை மேம்படுத்தப்பட்டுள்ளது.
சில அனைத்துலக இயங்கு தளங்களில் தமிழ் மொழி இயல்பாகவே இலவசமாகப் பயன்படுத்தும் வண்ணம் அமைக்கப்பட்டிருந்தாலும், அவற்றில் குறிப்பாக ‘லதா’ போன்ற அழகு குறைந்த எழுத்துருக்கள்,சரியான முறையில் அமையவில்லை என்பதைக் கருத்தில் கொண்டுதான் தாங்கள் முரசு அஞ்சல் மென்பொருளை அனைவருக்கும் இலவசமாகவே வழங்கும் அதிரடி முடிவை எடுத்ததாகவும் முத்து நெடுமாறன் தெரிவித்தார்.
அதேவேளையில் தமிழ் ஆர்வலர்கள் ஆர்வத்துடன் தமிழ் மொழியைக் கணினியில் பயன்படுத்துவதற்கு அதன் விலை ஒரு தடையாக இருக்கக் கூடாது என்ற எண்ணத்தோடும், கணினிகளிலும், கையடக்கக் கருவிகளிலும் உலகம் எங்கிலும் தமிழின் பயன்பாடு மேலும் அதிகரிக்க வேண்டும் என்ற நல்ல நோக்கத்தோடும் தாங்கள் மேற்கொண்ட முடிவுதான் அனைவருக்கும் முரசு அஞ்சல் மென்பொருளை இலவசமாக வழங்கும் முடிவு என்றும் முத்து நெடுமாறன் அறிவித்தார்.

Image result for முத்து நெடுமாறன்

இவர் தான் தமிழ் எழுத்துருக்களை  தந்த முன்னோடிகளில் ஒருவராக இருந்த முதல்  தமிழர்  என்பதில் பெருமிதம் கொள்ளலாமே..!!

தொழில்நுட்ப உலகம்

                           
Image result for சூரியசக்தி மின் நிலையம்
     உலகின் மிகப்பெரிய சூரியசக்தி மின் நிலையம் 

      உலகின் மிகப்பெரிய சூரியசக்தி மின்நிலையம் முழுமையாக செயல்பாட்டிற்கு வந்துள்ளது.
      மின்தேவையை சூரிய சக்தியைக் கொண்டு ஈடுக்கட்டும் முயற்சியில் உலகநாடுகள் மும்முரம் காட்டி வருகின்றன.அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் உலகின் பிரமாண்ட சூரியசக்தி மின்நிலையம் நிறுவப்பட்டு வந்தது.’இவான்பா சோலார் எலக்ட்ரிக் ஜெனரேட்டிங் சிஸ்டம்’ என்று இந்த மின்திட்டத்திற்கு பெயர் சூட்டப்பட்டு உள்ளது.
      பிரபல தனியார் நிறுவனங்களான என்.ஆர்.ஜி.,கூகுள் மற்றும் ‘பிரைட்சோர்ஸ் எனர்ஜி’போன்றவை, கடந்த 2011-ம் ஆண்டு பிரமாண்ட முயற்சியை சாதிக்கும் களத்தில் இறங்கின. இந்த திட்டத்திற்காக சுமார் 2.2 பில்லியன் டாலர் செலவிடப்பட்டது.3,500 ஏக்கர் நிலப்பரப்பில் ‘சோலார் பேனல்’கள் நிறுவப்பட்டன. 3 அலகுகளாக மின்சாரம் பெறும்வகையில் இது செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது.
     உலகின் மிகப்பெரிய சூரியசக்தி மின்நிலையமாக இது செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இங்கிருந்து 392 மெகா வாட்ஸ் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. இது அமெரிக்காவின் மின் உற்பத்தியில் மூன்றில் ஒருபாகம் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் 1 லட்சத்து 40 ஆயிரம் குடும்பங்களுக்கு மின்சாரம் வினியோகிக்கலாம்.
     சூரியஒளி தென்படும் இடத்தை நோக்கி சோலார் தகடுகளை திருப்பி வைத்து மின்சாரம் தயாரிக்க முடியும்.மேலும் 3 பிரமாண்ட கொதிநீர் கலன்களும் இங்கு நிறுவப்பட்டுள்ளது. சூரியசக்தி தகடுகளில் உள்ள  1 லட்சத்து 73 ஆயிரத்து 500 கண்ணாடிகள் எதிரொளிக்கும் வெப்ப ஆற்றலைக்கொண்டு இந்த கொதிகலன்களை கொதிக்க வைத்து மின்சாரம் தயாரிக்கிறார்கள். இது கூடிதலாக 259 மெகா வாட் மின்சாரம் ஒப்பந்தப்படி பிற இடங்களுக்கு வினியோகம் செய்யப்படுகிறது.

தொகுக்கப்பட்ட விவரங்களின் முகடு

Image result for முகடு


           தொகுக்கப்பட்ட விவரங்களின் முகடு
இம்முறையில் முகடு கண்டறிய விவரங்களை ஏறுவரிசையில் எழுத வேண்டும். அதில் பெரிய மதிப்புக் கொண்ட பிரிவு, முகட்டுப் பிரிவு எனப்படுகிறது. இதில் உள்ள மாறியின் மதிப்பு முகடு எனப்படும்.
கூலி                                250       300      350       400     450     500
தொழிலாளர்களின்
எண்ணிக்கை
                   10   15   16    12   11   13

கூலி                   தொழிலாளர்களின் எண்ணிக்கை

250                  10

300                  15

350                    16

400                  12

450                  11

500                  13

மேற்கண்ட அட்டவணையில் இருந்து மிகப்பெரிய நிகழ்வெண் 16 ஆகும். இதற்கு ஏற்ற மாறியின் மதிப்பு 350
                           
                             முகடு = 350

வெப்பநிலை     36 32.4 34.6 36.9 38.7 40
நாட்களின்       7   2   6   4   8   3 முகடு காண்க

எண்ணிக்கை

வியாழன், 3 மார்ச், 2016

தட்டைப்பாதங்கள் தரும் வேதனை

           தட்டைப்பாதங்கள் தரும் வேதனை


முன்னுரை


      பாதங்களில் என்ன வேதனை இருக்கப் போகிறது என நீங்கள் நினைக்கலாம். அதிலும் கூட பல பிரச்சனைகள் இருக்கிறது.
மனிதனின் பாதங்கள் இரண்டுக்கும் வித்தியாசம் இருக்கிறது. உடல் வலிமை உள்ளவர்களை சேர்த்துக் கொள்ளும் ராணுவம் கூட 
தட்டையான பாதம் கொண்டவர்களுக்கு தடி போடுகிறது. ஏன்?

பிறந்த குழந்தைக்கு இருக்கும் தட்டைப்பாதம்

     பிறந்த குழந்தையின் பாதத்தை தொட்டுப்பாருங்கள். அதன் வடிவம் தட்டையாகத்தான்  இருக்கும். குறைந்தபட்சம் 2 வயது வரை இந்த தட்டைப் பாதம் நீடிக்கும். 7 வயதுக்குள் 95 சதவீதக் குழந்தைகளுக்கு கீழ் பாதத்தின் நடுப்பகுதி உள்பக்கமாக வளையத் தொடங்கும். நம் அனைவரின் பாதவகளும் ஒரே மாதிரியான அமைப்பில் இருப்பதில்லை. பல வடிவங்களில், பல அளவுகளின் காணப்படும். சொல்லப்போனால் ஒருவரின் வலது பாதத்துக்கும் இடது பாதத்துக்கும் இடையே கூட ஓரளவு வித்தியாசம் இருக்கிறது

நெகிழ்ந்து கொடுக்கும் தட்டைப்பாதம்

    சிலருக்கு நிற்கும் போது உடலின் எடை பாதத்தில் விழுவதால் பாதம் சற்று தட்டையாகத் தோன்றும். அவர்களே உட்கார்ந்தாலோ, படுத்தாலோ பாதத்தின் நடுப்பகுதி சமத்தாக உட்புறம் வளைந்து சாதரணமாக மாறிவிடும். இது நெகிழ்ந்து கொடுக்கும் தன்மையுள்ள தட்டைப் பாதம், பாதத்தின் இயல்பான வடிவத்தை காக்கும் தசைநார்கள் தொய்ந்து போயிருப்பதால் இந்நிலை ஏற்படுகிறது. தட்டையான பாதம் கொண்டவர்களுக்கு தினசரி வேலைகளில் பிரச்சனை இருக்காது. அவசரமாக ஓடிப்போய் ஏறிக் கொள்வதில் கூட சிரமம் இருக்காது. ஆனால், நீண்ட நேரம் நின்று கொண்டே வேலை பார்த்தால் பாதத்தில் குடைச்சல் ஏற்படும். தவிர ஓட்டப்பந்தய வீரராக வருவது கடினம்  இதனால்தான் ராணுவத்தில் இவர்களுக்கு வேலை தருவதில்லை

இறுகிய தட்டைப்பாதம்

      தட்டைப்பாதத்தில் எந்த வேதனையும் இல்லையென்றால் இது குறித்து அலட்டிக் கொள்ள வேண்டியதில்லை. அதுபோலவே லேசான வலி அவ்வப்போது ஏற்பட்டு சரியானலும் கவலைப்படத் தேவையில்லை. ஆனால், மருத்துவர்களுக்கும், நோயாளிகளுக்கும் சிக்கலைத் தரக்கூடிய தட்டைப்பாத வகையும் உண்டு. அதை இறுகிய தட்டைப்பாதம் என்கிறார்கள். இவர்களுக்கு பின் பாதத்துக்கும், நடுப்பாதத்துக்கும் இடையே உள்ள எலும்புகள் பிறப்பிலேயே இணைந்து ஒருவித எலும்புப் பாலம் போல் ஆகிவிடும். அங்கு நெகிழ்வுத் தன்மைக் குறைந்து அதன் காரணமாகவும் தட்டைப்பாதம் உண்டாகலாம்.

முடிவுரை

     தட்டைப் பாதம் கொண்டவர்களுக்கு அதிக வலி ஏற்பட்டால் அதற்கென்று இருக்கும் காலணிகளை அணிந்து கொள்ளலாம். அதிலும் பயன் கிடைக்காவிட்டால் பாதத்தின் வெளிப்புறமும், உட்புறமும் அசைவைக் குறைக்கும் வகையில் சிகிச்சை செய்வதே நல்லது. இதையும் 15 வயதுக்கு மேல் செய்வதே சிறந்தது. அப்போதுதான் பாதம் முழுவளர்ச்சி அடைந்திருக்கும்.


தினம் ஒரு தகவல்




பறக்கும் சைக்கிள்



       பெரிய நகரங்களில் வாகனங்களில் செல்வது சாகசம் நிறைந்த ஒன்றாக மாறி வருகிறது.சைக்கிளில் செல்வதுகூட முடியாத ஒன்றாக உள்ளது.போக்குவரத்தில் சிக்கித்தவிக்கும் அந்த நேர்த்தில், அப்படியே பறந்து போனால் எப்படி இருக்கும் என்ற எண்ணம் பலருக்கும் தோன்றும். அப்படியொரு எண்ணம்தான் லேரிநீல் என்பவருக்கும் தோன்றியது.அந்த விளைவாக பறக்கும் சைக்கிளை கண்டுபிடிக்க அவர் விரும்பினார். டெக்சாஸ் மாநிலத்தின் அரோரோ பகுதியை சேர்ந்த இவரது விடாமுயற்சியில் உருவானதுதான் பறக்கும் சைக்கிள்.
       இந்த சைக்கிளை தயாரிக்க லேரிநீலுக்கு பல வருடங்கள் தேவைப்பட்டன. ஏகப்பட்ட தடைகளை கடக்க வேண்டியிருந்தது இடையில் கண்டுபிடிப்பு நின்றுவிடுமோ என்று கூட பயந்தார்.ஆனாலும் எதற்கும் கலங்காமல், தளராத மனதுடன் போராடி இருதியில் கண்டுபிடித்துவிட்டார்.
       பறக்கும் சைக்கிளை தரையிறக்கிய பின் அதன் இறக்கைகளை மடக்கி சாலைகளில் சாதாரணமாக செல்வதற்கு ஏற்ப மாற்றுவதுதான் மிகவும் கடினமாக இருந்தது . இந்த பறக்கும் சைக்கிளுக்கு'சூப்பர் ஸ்கை சைக்கிள்' ஏன்று பெயர் வைத்தார்.இதன் பவர் 582சிசி. இது 68அங்குலம் நீளமுள்ள இருகைகளை கொண்டுள்ளது. மணிக்கு 56 கிலோமீட்டர் வேகத்தில் பறக்கும். இதை இறக்குவதற்கு 20 அடி நீளம் கொண்ட சமதளம் இருந்தால் போதும். அதிக பட்ச வேகம் மணிக்கு 104 கிமீ. ஒருமுறை எரிபொருள் நிரப்பினால் 5 மணி நேரம் பறக்கலாம். இந்த விலை 46ஆயிரம் பவுண்ட் இந்திய மதிப்பில் ரூ.37 லட்சத்து 46 ஆயிரத்து 750. இந்த சூப்பர் சைக்கிளை எல்லோரும் ஓட்டிவிட முடியாது. இதை ஓட்டுவதற்கு விமான பைலட் லைசென்சும் தரையில் ஓட்டுவதற்கு டிரைவிங் லைசென்சும் வேண்டும். 'பட்டர்பிளை ஏர் கிராப்ட்' என்ற நிறுவனம் இதன் தயாரிப்பு உரிமையை பெற்றுள்ளது. இதை அதிக அளவில் உற்பத்தி செய்வதற்கான பேட்டன்ட் உரிமையை அமெரிக்கா வழங்கியுள்ளது.
        இந்த சூப்பர் ஸ்கை சைக்கிள் வேண்டும் என்று இப்போதே பல நாடுகளில் இருந்து ஆர்டர்கள் குவிந்து வருகின்றன். எல்லைப் பாதுகாப்பு படைக்கு இது மிகவும் உதவியாக இருக்கும் என்பதால் டெக்சாஸ் மாகாண ராணுவம் இந்த சைக்கிளுக்கு நிறைய ஆர்டர் கொடுத்துள்ளது.