ஒரு
நாள் ஒருவர் கடற்கரையோரம் நடந்துகொண்டிருந்தார்.அவர் நடந்துசெல்கையில் கடலில் ஒரு படகு முழுக்க பயணிகள் அனைவரும் படகு தடுமாரி தத்தளித்துக்கொண்டிருந்தனர்.அந்த படகு தண்ணீரில் மூழ்கியது,அனைத்து பயணிகளும் தண்ணீரில் விழுந்தன.அவர்களுக்கு நீச்சல் தெரியாத காரணத்தால்,ஒருவர் பின் ஒருவர் மூழ்க தொடங்கினர்.அதனை இவர் கரையிலிருந்து எதுவும் செய்ய இயல முடியாத நிலையில் நின்று பார்த்தார்.
அன்று மாலை இந்த சோக செய்தியை தனது நண்பர்களுடன் பகிர்ந்தார்.அனைவரும் அந்த செய்தி கேட்டு வருத்தமடைந்தனர்.அதனைப் பார்த்த மனிதர்``கடவுள் ஒரு பாவியை தண்டிக்க அத்தனை அப்பாவிகளையும் ஏன் தண்டிக்கிறார்?’’,என்று கேட்டார்.இதனை செல்லிக்கொண்டிருக்கையில், அவர் காலில் ஒரு எறும்பு கடித்து அப்பொழுது ஆத்திரத்தில் அங்கிருந்த அனைத்து எறும்புகளையும் மிதித்து தள்ளினார்.அப்பொழுது கடவுள் அவர் முன் தோன்றி``பாரு நீ உன்னை கடித்த ஒரு எரும்பை மட்டுமல்லாமல் ஏனைய எறும்பை மிதித்து தண்டிக்கிறாய்? என்னை குறைசொல்லும் முன் உன் நடவடிக்கையைப் பார்’’ என்று கூறினார்.பின் அவன் தனது தவறை உணர்ந்தான்.
(தரவு)
டைனி டாட் பெட் டைம் ஸ்டோரீஸ்
***இந்த தொகுப்பிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டதுதான் எனது படைப்பு.இதனை படித்ததன் தாக்கம் இந்த மொழிபெயர்பு.நன்றி