செ.வைசாலி. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
செ.வைசாலி. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 3 மார்ச், 2016

செல்லினம் பதிவிறக்க வழிமுறைகள்..!!

செல்லினத்தை உங்கள் ஆண்டிராய்டு கருவிகளில் பதிவிறக்கம் செய்வதற்கான வழிமுறை:
IMG_4575
1. Play Store செயலியைத் திறந்து Sellinam என்று தேடுக.
2. Install எனும் கட்டத்தைத் தொட்டவுடன் சில செயல்களுக்கான அனுமதிகளைக் கேட்கும்போது ‘Accept’ எனும் கட்டத்தைத் தொடுக.
3. செல்லினம் உங்கள் கருவியில் பதியப்பட்டவுடன், ‘Open’ எனும் கட்டம் தோன்றும், அதனைத் தொடுக.
4. செல்லினத்திற்கான அமைப்புச் செயல் தொடங்கும். Get Started எனும் கட்டத்தைத் தொட்டு, அதன்பின் தோன்றும் ‘Enable in Settings’ கட்டத்தைத் தொடுக.
5. உள்ளீட்டு முறைகள் வரிசையாகத் தோன்றும். அதில் செல்லினம் ‘ON’ செய்யப்பட்டிருக்க வேண்டும். இதனை உறுதி செய்தவுடன் முந்தைய திரைக்குச் செல்க.
6. இப்போது Switch Input Methods எனும் கட்டம் தோன்றும். அதனைத் தொட்டு செல்லினத்தை உங்கள் இயல்பான உள்ளீட்டு முறையாகத் தெரிவு செய்க.
7. இப்போது ‘Select Keyboards’ எனும் கட்டம் தோன்றும். இதனைத் தொட்டு, உங்களுக்கு விருப்பமான உள்ளீட்டு முறையைத் தெரிவு செய்க.
குறிப்பு: ஹுவாவே, ஆசுஸ் முதலிய கருவிகளை வைத்திருப்போருக்கு தமிழ் உள்ளீட்டு முறைகள் தோன்றா. ஆங்கிலமும் மலாய் மொழி உள்ளீட்டு முறைகள் மட்டுமே தோன்றும். உங்கள் கருவியில் அவ்வாறு இருந்தால், இந்தப் பதிவைக் காண்க: Issues with Sellinam on Huawei, Asus and other devices.
9. இனி உங்கள் ஆண்டிராய்டு கருவியில் உள்ள குறுஞ்செய்தி, வாட்சாப், மின்னஞ்சல், வைபர், முகநூல், டிவிட்டர் முதலிய செயலிகளில் ஆங்கிலத்தில் உள்ளிடுவதைப் போலவே தமிழிலும் உள்ளிடலாம்.
10. உங்கள் கருவியில் ஆங்கில உள்ளீட்டுக்காக சுவைப் போன்ற மற்ற முறைகளைப் பயன்படுத்தினால், அவற்றுக்குச் சென்று தமிழுக்காக மீண்டும் செல்லினத்துக்கு வந்துவிடலாம். லாலிபாப் (Lollipop) பதிப்பை வைத்திருப்போர், விசைமுகத்தின் கீழ் உள்ள விசைப்பலகைச் சின்னத்தைத் தொட்டு மற்ற உள்ளீட்டு முறைகளுக்குச் செல்லலாம். அதே சின்னத்தைக் கொண்டு செல்லினத்திற்கும் திரும்பி வரலாம்.  கிட்கெட், செலிபீன் பதிப்புகளை வைத்திருப்பவர்கள், செல்லினத்தில் உள்ள ‘மு’ சின்னத்தை சற்றுநேரம் அழுத்தி (long press), உள்ளீட்டுமுறைகளுக்கான பட்டியலைக் காணலாம்.
இதனை செய்து பார்த்து பயன் பெறவும் நண்பர்களே.இந்த பகிர்வு என் கல்லூரியில் இருக்கும் மாணவிகளுக்கு இருக்கும் பிரச்சனைக்கு உதவியாக இருக்கும் என்பதால் இணையத்தில் தேடி பகிர்ந்துள்ளேன்.அவர்களுக்கும் இதை இப்பொழுது படித்துக் கொண்டிருக்கும் தங்களுக்கும் உதவியாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
நன்றி.

ஞாயிறு, 28 பிப்ரவரி, 2016

புதியவர்களுக்கான லேப்டாப் டிப்ஸ் ..!!





தொடர்ந்து மடிகணினியை உபயோகித்துவரும் பயனாளர்களுக்கு ஒரு நியாயமான  சந்தேசம் வரும்.அது தங்களது மடிகணினியை ஷட்டௌன் செய்யாமல் மூடி வைக்கும்பொழுது sleep mode இதற்கு செல்ல வேண்டுமா..?? hibernate ஆக வேண்டுமா..??அல்லது எதுவுமே ஆகக் கூடாதா..??shut down  ஆக வேண்டுமா..?? இதில் ஏதாவது ஒரு வசதிக்கு நமது மடிக்கணினியை மாற்ற என்ன செய்ய வேண்டும் ..??


விண்டோஸ் taskbar system tray இல் உள்ள battery ஐகானை வலது க்ளிக் செய்து power option லிங்கை க்ளிக் செய்யுங்கள்.



இப்பொழுது திறக்கும் திரையில் இடது பிரிவில் உள்ள choose what closing the lid does என்ற லிங்கை  க்ளிக் செய்து கொள்ளுங்கள் இதில் sleep  வசதி உகந்தது.சில சமயங்களில் திரை அவசியப்படாமல் ஏதாவது பாடல்களை கேட்க வேண்டுமென்றால்  do nothing  வசதியை தேர்வு செய்து கொள்ளலாம்.

இந்த டிப்ஸ்-ஐ நான் செய்து பார்த்துவிட்டேன் இப்பொழுது நீங்களும் செய்து பார்த்து பயன்பெறுங்கள் ..நன்றி..!!

இணைய வசதி இல்லாமலும் கூகுள் மேப்பை பயன்படுத்தலாம்!

Image result for கூகுள் மேப் படம் தமிழ்

கூகுள் நிறுவனத்தினால் வழங்கப்படும் சேவைகளுள் ஒன்றான கூகுள் மேப் சேவையின் ஊடாக மில்லியன் கணக்கானவர்கள் பயன்பெறுகின்றனர்.
தற்போது iOS மற்றும் Android சாதனங்களில் பயன்படுத்தும் கூகுள் மேப் அப்பிளிக்கேஷனுக்கான புதிய பதிப்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதில் இணைய வசதி இல்லாத நிலையிலும்(Offline Navigation) இச்சேவையினை பயன்படுத்தக்கூடிய வசதி தரப்பட்டுள்ளது.
இது தவிர அமெரிக்கா மற்றும் கனடா போன்ற நாடுகளில் கேஸ் விலையினை அறிந்துகொள்ளக்கூடிய வசதியும் இந்த அப்பிளிக்கேஷனில் உள்ளடக்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.
மேலும் இந்த அப்பிளிக்கேஷனை iTunes, Play Store ஆகிய தளங்களிலிருந்து தரவிறக்கம் செய்து பயன்படுத்தலாம்.
Image result for கூகுள் மேப் படம் தமிழ்

வெள்ளி, 12 பிப்ரவரி, 2016

உலக வானொலி தினம்..!!






நவீன உலகில் டிவி,மொபைல்,ஸ்மார்ட்போன்.ஐ.பேட் மற்றும் இன்டர்நெட் என பல வழிகளில் தகவல் தொடர்பு சாதனங்கள் அதிகரித்துவிட்ட போதிலும் வெகுஜன ஊடகத்தின் முன்னோடியாக திகழ்வது வானொலி தான்.

இத்தகைய அரிய கண்டுப்பிடிப்பை இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்ற இத்தாலியைச் சேர்ந்த குலீல்மோ மார்க்கோனி என்பவர் கண்டறிந்தார்.


தகவலை மக்களிடம் விரைவாக கொண்டு சேர்ப்பதில் வானொலியின் பங்கு மிகவும் அளப்பரியதாகும்.இன்று உலகம் முழுவதும் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட வானொலி நிலையங்கள் உள்ளன.

முந்தைய காலங்களில் பேரிடர் குறித்த தகவல்கள், போர் அறிவிப்புகள் போன்றவற்றை விரைந்து அளித்தது வானொலி என்றால் அது மிகையாகாது.

அத்தகைய வானொலியின் சிறப்புகள் மற்றும் சேவைகளை மேம்படுத்தும் விதமாக 2012-ம் ஆண்டு ஐ.நாவால் பிப்ரவரி 13-ம் தேதி உலக வானொலி தினம் அனுசரிக்கப்பட்டு கொண்டாடப்பட்டு வருகிறது.


இத்தினத்தின் நோக்கம் என்னவென்றால் குறைந்த செலவில் தகவல்களை பரப்பி ஒலிபரப்பாளர்களிடையே ஒத்துழைப்பை ஏற்படுத்தி வானொலி வலையமைப்புக்களை ஊக்கப்படுத்துவதே ஆகும்.

புதன், 10 பிப்ரவரி, 2016

தமிழால் சொல்ல முடியும் எண்களின் பெயர்..!!



==தமிழில் கீழ்வாய் எண்கள்==



* 15/16 = 0.9375 = முக்காலே மூன்று வீசம்

* 3/4 = 0.75 = முக்கால்

* 1/2 = 0.5 = அரை

* 1/4 = 0.25 = கால்

* 1/5 = 0.2 = நால்மா/நான்மா

* 3/16 = 0.1875 = மூன்று வீசம்

* 3/20 = 0.15 = மூன்றுமா

* 1/8 = 0.125 = அரைக்கால்

* 1/10 = 0.1 = இருமா

* 1/16 = 0.0625 = வீசம்

* 1/20 = 0.05 = மா

* 3/64 = 0.046875 = முக்கால் வீசம்

* 3/80 = 0.0375 = முக்காணி

* 1/32 = 0.03125 = அரை வீசம்

* 1/40 = 0.025 = அரை மா

* 1/64 = 0.015625 = கால் வீசம்

* 1/80 = 0.0125 = காணி

* 3/320 = 0.009375 = அரைக்காணி முந்திரி

* 1/160 = 0.00625 = அரைக் காணி

* 1/320 = 0.003125 = முந்திரி

* 3/1280 = 0.00234375 = கீழ் முக்கால்

* 1/640 = 0.0015625 = கீழ் அரை

* 1/1280 = 0.00078125 = கீழ்க் கால்

* 1/1600 = 0.000625 = கீழ் நால்மா

* 3/5020 = 0.000597609 = கீழ் மூன்று வீசம்

* 1/2560 =0.000390625 = கீழ் அரைக்கால்

* 1/3200 = 0.0003125 = கீழ் இருமா

* 1/5120 = 0.000195312= கீழ் மாகாணி

* 1/6400 = 0.00015625 = கீழ் மா

* 3/25600 = 0.000117187 = கீழ் முக்காணி

* 1/12800 = 0.000078125 = கீழ் அரைமா

* 1/25600 = 0.000039062 = கீழ்க்காணி

* 1/51200 = 0.000019531 = கீழ் அரைக்காணி

* 1/102400 = 0.000009765 = கீழ் முந்திரி}

*1/2,150,400= இம்மி

*1/23,654,400= மும்மி

*1/165,580,800= அணு

*1/1,490,227,200= குணம்

*1/7,451,136,000= பந்தம்

*1/44,706,816,000= பாகம்

*1/312,947,712,000= விந்தம்

*1/5,320,111,104,000= நாகவிந்தம்

*1/74,481,555,456,000= சிந்தை

*1/1,489,631,109,120,000= கதிர்முனை

*1/59,585,244,364,800,000= குரல்வளைப்பிடி

*1/3,575,114,661,888,000,000= வெள்ளம்

*1/357,511,466,188,800,000,000= நுண்மணி

*1/2,323,824,530,227,200,000,000= தேர்த்துகள்