சனி, 16 ஏப்ரல், 2016

பங்குச் சந்தையில் ஏற்ற இறக்கங்கள் எப்படி..??

அன்புடையீருக்கு வணக்கம்,

கடந்த வாரம் பங்குச் சந்தையில்  ஈடுபடுவர்களை பற்றி பார்த்தோம்.இப்பொழுது  பங்குச் சந்தையில் எவ்வாறு ஏற்ற இறக்கங்கள் ஏற்படுகிறது என்பதை பற்றி காணலாம்.


Image result for share market up and down

  1. நாட்டில் நிலவும் அரசியல் / பொருளாதாரச் சூழ்நிலைகள் (நிதி நிலை அறிக்கை வெளியிடப்படுதல், வரவு செலவுத்திட்டம்)
  2. மத்திய வங்கி/நிதி அமைச்சகம் கொண்டுவரும் சில நெறிமுறைகள்/கட்டுப்பாடுகள் அல்லது சில விதிமுறைகள் விலக்கப் படுதல் (தொழிற்கொள்கை குறித்த அறிவிப்புகள், வெளிநாட்டு முதலீட்டுக்கான சட்ட திட்ட வரவுகள் முதலியன)
  3. உலகச் சந்தையில் பல்வேறு காரணங்களால் ஏற்படும் மாற்றங்கள் (அமெரிக்க வங்கிகளின் மோசமான நிலைமை, உலகப் பொருளாதாரத் தொய்வு)
  4. நிறுவனங்களின் காலாண்டு/ஆண்டு அறிக்கைகள் வெளியிடப் படுதல் அல்லது அந்நிறுவனங்கள் குறித்த சில தகவல்கள் (லேமன் நிறுவனம், சத்யம் நிறுவனம் )
  5. சில சமயம் எதிர்பாராத, பொய்யான வதந்திகள் கூட பங்குச் சந்தை நிலவரத்தை பாதிக்கின்றன.(யூக வியாபாரம் செய்பவரில் சிலர், இத்தகைய தவறான தகவல்களை வேண்டுமென்றே பரப்பி லாபம் காண முயல்வதாகவும் சில சமயங்களில் குற்றச்சாட்டு எழுகிறது)

காளையும் கரடியும்.

Image result for share market up and down

                    பங்குச் சந்தையில் பங்குகளின் விலை ஏறுமுகமாக இருப்பின் அதைக் காளைச் சந்தை (Bull Market)எனவும், வீழ்ச்சியடையும்பொழுது கரடிச் சந்தை(Bear Market) எனவும் கூறுவது வழக்கம். ஏன் தெரியுமா? காளை வேகமாகத்தாக்கக் கூடியது என்றும் கரடி மந்தமானது என்றும் கருதப் படுகிறது. எனவே, பங்கு விற்பனை சூடு பிடித்து, விலைகள் ஏறுகையில் அது காளைச் சந்தை எனவும், பங்குகளின் விலைகள் சரிந்து, விற்பனை மந்தமாகும்பொழுது அது கரடிச் சந்தை எனவும் அழைக்கப் படுகிறது.

                 சிலர் "Bull speculative" என்ற ஃபிரஞ்சு வார்த்தையில் இருந்து தோன்றியது எனவும், லண்டனில் கரடித்தோல்களை விற்பவர்கள், கரடிகளைப் பிடிப்பதற்கு முன்பே அதற்கு விலை பேசிவிடுவது வழக்கம் என்பதால், short sellingஐக் குறிக்க கரடிச் சந்தை என்ற சொல் பயன்படுத்தப் பட்டது எனவும், பொதுவாக சந்தை சரியும்பொழுதுதான் Short Selling செய்வது வழக்கம் என்பதால், சந்தையின் வீழ்ச்சியடையும்பொழுது அது கரடிச் சந்தை என வழங்கப்படுகிறது எனவும் கருதுகின்றனர்.
பொதுவாக, பணவீக்கம் குறைவாகவும், நாட்டின் பொருளாதாரம் சீராகவும், உற்பத்தி உயர்ந்தும் இருக்கும்பொழுது காளைச் சந்தைப் போக்கு நிலவுகிறது. இதற்கு நேரெதிரானது கரடிப் போக்கு. இப்போக்கு நிலவுகையில் நாட்டில் வேலையின்மையும், பணவீக்கமும் காணப் படுகிறது.


இந்த வாரம் காளை கரடி பற்றி அறிந்தோம்.அடுத்த வாரம் பங்குகளில்  எப்படி முதலீடு செய்யலாம் என்று சில வழிமுறைகளை காணலாம்.நன்றி.

4 கருத்துகள்:

  1. காளையையும், கரடியையும் இணைத்த விதம் அருமை சகோ வாழ்த்துகள் பயனுள்ள பதிவை தொடர்கிறேன்

    பதிலளிநீக்கு
  2. நல்ல கட்டுரை சகோதரி...
    தொடருங்கள்.

    பதிலளிநீக்கு