ஞாயிறு, 2 டிசம்பர், 2018

சாதிகள் வேண்டாம்

இந்த சமூதாயம்

சலவைத் தொழிலாளியின் உழைப்பை ஏற்றுக்கொள்கிறது.
ஆனால்
அந்த சலவைத் தொழிலாளியை ஏற்றுக் கொள்வதில்லை.

இந்த சமுதாயம்
முடிவெட்டுபவரினுடைய உழைப்பை ஏற்றுக் கொள்கிறது.
ஆனால்
முடிவெட்டுபவரை ஏற்றுக் கொள்வதில்லை.

இப்படித்தான்
ஒவ்வொரு சாதியை சார்ந்தவர்களின் உழைப்பை மட்டும் ஏற்றுக் கொண்டு விட்டு
மனிதர்களை ஒதுக்கி வைக்கிற கேடு கெட்ட சமுதாயம் இது.

சாதியின் பெயரால் எத்தனை காதல்கள் முளைக்கையிலே கிள்ளியெறியப் படுகிறது.

வேறு சாதியை சார்ந்தவர்களை திருமணம் செய்து கொண்டால் கொலை செய்து விட்டு அதற்கும் பெயர் வைக்கிறார்கள் ஆணவக்கொலை என்று.

இந்த உலகத்தில் இருக்கின்ற ஒவ்வொருவரையும் படைத்தவர் பிரம்மன் என்றால்
பிரம்மனின் சாதி தானே நாம் அனைவரும்.

இந்த உலகம் ஆதாம் ஏவாலின் வழி தோன்றியது என்றால் நாம் அனைவரும் ஆதாம் ஏவாலின் சாதி தானே.

எங்கிருந்து வந்தது இத்தனை சாதிகள்...

ராவணனின் ஆட்சியில் கூட மக்கள் ஓரளவு சமமாய் நடத்தப்பட்டனர்.

ராமனின் ஆட்சியே தொழில் அடிப்படையில் மக்களை பிரித்தனர்.
அன்று தொழில் சாதியாய் மாறியது.
இன்று சாதி தொழிலாய் மாறியிருக்கிறது.

சாதிகள் இல்லையடி பாப்பா என்று கரும்பலகையில் எழுதி சொல்லிக் கொடுத்து விட்டு
சாதிச் சான்றிதழ் எங்கே என்று கேட்கின்ற சமூகத்தில் வாழ்கிறோம்.


சாதிகளை கடந்தும் இன்று மனிதர்கள் சாதித்து கொண்டிருக்கிறார்கள்.

இவர் தொட்டால் தீட்டு
பார்த்தால் தீட்டு
படித்தால் தீட்டு என்றார்கள்.

அப்படிப்பட்ட அம்பேத்கர் தான் அரசியலமைப்பு சாசனத்தையே தீட்டினார்.

யாருடைய கை படக்கூடாது என்று நினைத்தார்களோ அவருடைய கை பட்டதனால் தான் வைகையே சுத்தமானது.

சாதனைக்கு பின் சில நேரங்களில் சாதி மறைந்து விடுகிறது.

 இளைஞர்களுடைய நட்பு சில சமயங்களில் சாதியை எதிர்க்கிறது.
சில சமயங்களில் எரிக்கிறது.

வாக்கு செலுத்தும் போது பயன்படாத சாதி
வாழ்வதற்கு மட்டும் பயன்படுகிறது.

 ஒன்றை மட்டும் நாம் கவனத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.
நாம் சாதிக்காக பிறந்தவர்கள் அல்ல.
சாதிக்கப் பிறந்தவர்கள்.

 இந்த பதிவை நான் எழுதுவதற்க்குக் காரணம்.
பரியேறும் பெருமாள் திரைப்படத்தின் ஒரு வசனம்.

நீங்க நீங்களா இருக்குற வரையும் நாங்க நாயா இருக்க வேண்டியது தான்.

இந்த வசனம் தான்.
மாற்றம் நம்மிலிருந்து தொடங்கட்டும்.

வியாழன், 29 நவம்பர், 2018

பனை மரம்🌴🌴🌴🌴

     



   சமீபத்தில் ஏற்பட்ட கஜா புயலின் பாதிப்பால் பல லட்சம் தென்னை மரங்கள் பாதிக்கப்பட்டது என்பதை கேள்விப்பட்டோம் ஆனால் நமது மாநில மரமான பனையின் நிலை என்ன ஆனது????
      நமது நாட்டின் மாநில மற்றும் நெய்தால் திணைக்கு உரிய மரம் தான் பனை மரம். இது வளர பல ஆண்டுகள் ஆகுமாம். இம்மரத்தின் வேர்கள் மிகவும் ஆழமாகவும் இதன்  தண்டு வளைந்து கொடுக்கும் தன்மை உடையது. அதனால் புயல் காற்றை எதிர் கொள்ளும் அளவிற்க்கு சக்தி கொண்டது. மேலும் புயல் காற்றின் வேகத்தை குறைக்கும் தன்மையும் இதில் உள்ளது. இந்த மரங்கள் முன் காலத்தில் கடல் கரையில் அதிகம் இருந்ததாக கூறப்படுகிறது ஆனால் இப்போது செங்கல் சூளையில் தான் அதிகம் காணப்படுகிறது காரணம் இதன் பயன் தெரியாதது தான். முன் காலத்தில் நுங்கு மரங்கள் அதிகம் இருந்ததால் தான் நுங்கம்பாக்கம் என்று பெயர் வந்தது என்று ஆய்வியல் அறிஞர் பலர் கூறுகின்றனர். மொத்தம் 30 வகையான பனை மரங்கள் உள்ளன ஆனால் நம் நாட்டில் 3 வகையான மரங்கள் மட்டுமே அதிகம் உள்ளது. பனை மரம் உள்ள இடத்தில் மண் வளமும் நீர் வளமும் சிறந்து விளங்கும்.  எனவே இந்த பனையின் பலன் அறிந்து இந்த மரத்தின் வளர்ச்சியை அதிக படுத்த வேண்டும்.

செவ்வாய், 20 நவம்பர், 2018

சாதிகள் இல்லையடி பாப்பா ☠️☠️


 

சாதி என்னும் கூட்டிற்குள் மறைந்து இருக்கும் மனிதனே விழித்திரு     
உன் பிறப்புக்கு உதவ ஒரு மருத்துவச்சியும்
உனது ஆடைகளை சுத்தம் செய்ய ஒரு சலவை காரனும்
உனக்கு உணவு வழங்க ஒரு விவசாயியும்
உன் அறிவை வளர்க்க ஒரு  ஆசானும்
உன் திருமனத்திற்கு ஒரு துணையும்
நீ இறந்தபின் உன்னை தூக்கி செல்ல எட்டு கால்கள் மட்டும் தான் தேவை

சாதி என்னும் முகமூடி அணிந்து திரியும் மானுடமே இதை புரிந்துகொள்
விழித்துக்கொள்

போலி செய்திகள் 🗞️🗞️

 
         

     இன்று whatsupp ல் பகிர படும் செய்திகளில் பாதி செய்தி போலியான செய்தி என்பது தற்போதய bbc யின் அறிக்கையில் தெரிவிக்க  பட்டு உள்ளது.                       தற்போது ஊடகங்களில் மஹாமேரு என்ற ஒரு பூ இமயமலையில் 400 வருடங்களுக்கு ஒரு முறை மட்டுமே பூக்கும் என்று தவறான செய்தி பரப்ப படுகிறது. ஆனால் குறிஞ்சி மலர் மட்டும் தான் அதிகபட்சமாக 12 ஆண்டுகுளுக்கு ஒரு முறை பூக்கும் எனவும் அதற்கான காரணமே இன்னும் தெரியவில்லை என்கிறார்கள் தாவரவியல் நிபுனர்கள். எனவே ஒரு செய்தியை பகிரும் முன்பு அதன் உண்மை தன்மையை ஆராய்ந்த பிறகு பகிரவும்.

சனி, 17 நவம்பர், 2018

குழவியின் ஏக்கம்

பண்டிகை நாட்களில் எல்லாம் குழந்தைகள் குற்றவாளிகளாக மாற ஆசை படுகிறார்கள்.
அப்போதாவது தனது தந்தை தன்னுடன் இருப்பார் எனும் நம்பிக்கையில்.
தந்தைகள் காவலர்களாய்  இருப்பதால்.