செவ்வாய், 10 அக்டோபர், 2017

சகோதரன்

ஏனோ
தெரியவில்லை,,,
இந்த
பிரபஞ்சத்தையே
வெற்றி
கொண்டது
போல
எனக்குள்
ஒரு
ஆனந்தம்
உன்னுடன்
நடக்கையில்....

# சகோதரன் #

----மு. நித்யா.

குரு

நீ
கண்கலங்க
வைக்க
வேண்டும்....
அவரை
வேதனைபடுத்தி
அல்ல...
உன்
வெற்றி
மாலைகளால்.....

# குரு #

மு. நித்யா.

தாயின் கைகள்

உன்
கைகளால்
உண்ணும்
போது
தான்
உணர்ந்தேன்,,,
அமிர்தத்தின்
சுவை
என்னவென்றே......

# தாயின் கைகளால் #

----மு. நித்யா.

வேலைவாய்ப்பு

நீ
மட்டுமே
தனக்கு
கிடைத்த
வாய்ப்பாக
எண்ணி,,
தன்
திறமையையும்
சுற்றியிருக்கும்
வாய்ப்புகளையும்
இழந்து
வருகிறது
என்
இளையதலைமுறை......

# வேலைவாய்ப்பு # Placement

-----மு. நித்யா.

கல்வி

மதிப்பெண்
எடுக்க
சொல்லி
தந்த
நீ
இன்று
மறந்துபோனாயே,,
என்
இனத்திற்கு
சிந்திக்கும்
பழக்கத்தை
சொல்லிதர....

# கல்வி #

----மு. நித்யா.

கையெழுத்து

என்ன அழகு...!!
செதுக்கினாயோ
இல்லை
எழுதினாயோ
தெரியவில்லை...,,
சிற்பியே
வியந்து
விட்டான்,,
உன்
எழுத்து
வடிவம்
பார்த்து.....

# கையெழுத்து #

மு. நித்யா.

காடுகள்

மனிதா....
உன் இனம்
வசதியாக வாழ
என் இனத்தை
அழிக்க
தொடங்கிவிட்டாயே...
மறந்து விட்டாயோ,,,,
உன் இனம்
உயிருடன்
வாழ்வதற்கே
நான் தேவை
என்பதை....

# காடுகள் #

மு. நித்யா.

கிளி

நீண்ட
நாள்
சிறைபிடித்து
வைத்ததால்
என்னவோ
தெரியவில்லை,,,
நீ
என்னை
விடுவித்தும்
மறந்து போனேன்
பறப்பதற்கு......

# கிளி #

----மு. நித்யா.

புத்தகம்

உன்னை
புரட்டி
பார்த்தவர்கள்
எல்லோரும்,,,
புரட்டி
போடுகிறார்கள்
உலகையே....

# புத்தகம் #

மு. நித்யா.

நிலா

நாளை இரவு
மீண்டும்
வருகிறேன் என்று
சொல்லிவிட்டு
சென்றாய்......
நானோ
உன்
வருகைக்காக
காத்திருந்தேன்.....
ஆனால் நீயோ,,
வரவே
இல்லை..
அப்போது தான்
உணர்ந்தேன்
இன்று
அமாவாசை
என்பதை......

# நிலா #

மு. நித்யா.

மழை

கதிரவன்
தாக்கத்தால்
வாடி
இருந்த
செடிகள் கூட,,
இன்று
உன்
வருகையால்
புன்னகையில்
பூத்து
குலுங்குகிறது..

# மழை #

---மு நித்யா.

மின்னல்

தீப்பொறி
போல
வந்து
போவது
ஏனோ
கண்ணிமைக்கும்
நேரம்.....
உன்
தாக்கம்
என்னவோ
பலமணி
நேரம்.....

# மின்னல் #

----மு. நித்யா.

மொட்டுகள்

தேன் குடிக்கும்
வண்டுகளுக்கு கூட
தெரிந்திருக்கிறது,,
இதழ்
விரியும் நேரம்
எப்போது என்று ...
நானோ
அது தெரியாமலே
காத்துக்கொண்டு
இருந்தேன்
என்னையும் மறந்து....

# மொட்டுகள் #

----மு. நித்யா.