வெள்ளி, 2 ஜூன், 2017

திங்க் பிப்போர் யூ ஸ்பீக்

                                        
ஒரு நாள் ஏழை  மரவெட்டி ஒருவரின் வீட்டிற்கு தேவதை வந்தாள் அவள் அவர்களிடம்``நீங்கள் வெகு நாட்கள் கடினமாக உழைத்துவிட்டீர்கள் முன்று வரங்கள் என்னிடம் கேளுங்கள்’’என்றாள்.கணவன் மனைவி இருவரும் சிந்திக்கத்தொடங்கினர்.அவரது மனைவி``நாம் நிறைய பணம் கேட்போம்’’ அல்ல பிறகு அந்த திருடர்கள் நம் பணத்தை கொள்ளை அடித்துவிடுவார்கள் என்றனர்.ஆகையால் நாங்கள் சிந்தித்து கூறுகிறோம் என்று கூறிவிட்டனர்.



            அன்று அடுப்படியில் அமர்ந்து என்ன கேட்கலாம் என்று சிந்தித்துக்கொண்டிருந்தனர்.மனைவி சொன்னாள்``நமக்கு உண்ண கோழி கிடைத்தால் நன்றாக இருக்கும் தட்டில் தானாக கோழி வரவேண்டும் என்று யோசனை கூறினாள்.மரவெட்டி நீ ஒரு வரத்தை வீணாக்கிவிட்டாய் என்றார்.இப்பொழுது அவர் ``போ அவளது மூக்கில் ஒட்டிக்கொள் என்றார்.பிறகு அந்த கோழி மூக்கில் தொத்திய பின் அந்த ஜோடி பயந்துவிட்டனர்.உடனடியாக நாங்கள் இந்த சிக்கலில் இருந்து விடுபட வேண்டும் என்று கூறினர்.பின்பு மூன்று வரங்களும் தீர்ந்தன.
தரவு
                                    டைனி டாட் பெட் டைம் ஸ்டோரிஸ்

தி க்ரோஸ் வான்டிடி

Image result for காகம்

காகம் ஒன்று தனது நிறத்தை பற்றி கவலைப்பட்டுக்கொண்டே இருந்தது. எப்பொழுதுமே ``நான் கருப்பாக உள்ளேன்,பார்க்க அசிங்கமாக உள்ளேன்!’’ என்று புலம்பிக்கொண்டே இருந்தது.

            ஒரு நாள் மயில்கள் காகம் தங்கி இருக்கும் மரத்தடியில் வந்து உலாவிக்கொண்டு இருந்தன.பின்பு அவை சென்றிருந்த சில இடங்களில் இறகுகள் கிடந்தன.அதனை பார்த்து மீண்டும் மனம் வருந்தியது காகம்.அந்த இறகுகளை எடுத்துக்கொண்டு தனது நண்பனான குரங்கிடம் சென்றது.அதனின் உதவியுடன் தனது உடம்பில் சிறகுகளை பொருத்திக்கொண்டது.பின்னர் அந்த மயில் கூட்டத்திற்கு சென்று இப்பொழுது நானும் தங்களைப்போன்று தான் என்னையும் தங்களின் கூட்டத்திற்குள் சேர்த்துக்கொள்ளுங்கள் என கூறியது. ஆனால் அந்த மயில் கூட்டம் கோபம் கொண்டு அதனை விரட்டி விட்டது. காகத்தின் கூட்டமும் ``நீ என்னவாவாக இருக்கிறாய் என்பதில் பெருமைபடவில்லை’’ஆகையால் அந்த காகம் தனிமையிலேயே வாழ்ந்தது.
                                தரவு
                                    டைனி டாட் பெட் டைம் ஸ்டோரிஸ்

தி மாஜிகல் பாட்





Image result for பேராசை
ஒரு நாள் ஒரு மனிதனும் அவனுடைய மனைவியும் தோட்டத்தில் விதைகளை விதைக்க தோன்டிக்கொண்டிருந்தபோது,ஒரு பானை தட்டுப்பட்டது.அவர்கள் அதனை வெளியே எடுத்தனர்.உள்ளே பார்க்கும்போது கோடாரி பானைக்குள் விழுந்தது.அதனை வெளியே எடுக்கும்போது கையோடு இன்னொன்று வந்தது.அதிலிருந்து `` அப்படியானால் ஒன்று போட்டால் இரண்டாக கிடைக்கிறது இதில்’’ என்று அறிந்தனர்.

            பின்பு அதிலிருந்து நிறைய பணம் போட்டு பணத்தை ஈட்டனர். ஒரு நாள் அவன் மனைவி பணத்தை எடுக்கும்போது உள்ளே விழுந்துவிட்டாள்.அவளை வெளியே எடுக்கும்போது இன்னொரு மனைவி வந்தாள்.அவளை வெளியே எடுக்கும்போது இன்னொருவள் வந்தாள். மொத்தம் பத்து மனைவி இறுதியில் வந்தாள்.ஆகையாள் பேராசை என்றுமே பெரு நஷ்டம் ஏற்படுத்தும்.         
        தரவு
                                    டைனி டாட் பெட் டைம் ஸ்டோரிஸ்

ஞாயிறு, 28 மே, 2017

நல்லதை விதைப்போம்..



நாம் என்ன விதைக்கிறோமோ அதை தான் நாளை அறுவடை செய்ய போகிறோம் என்பதை உணர்ந்தால் இன்று நீதியா..? ஆட்சியா..? மாட்டு இறைச்சியா..? கார்ப்பரேட்டா..? பணமா..?  நடிகனா..?  தலைவனா..? தலைமையா..? என்ற பேச்சுக்கு இடமில்லாமல் இருக்கும்.

இன்றைய அரசியல் கட்சிகள் நாட்டை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்வதாக தெரியவில்லை.
மக்களால் மக்களுக்காக மக்களே தேர்தெடுப்பது மக்களாட்சி என்ற நிலைமாறி பணத்தால் மக்களே பணத்துக்காக நாட்டை கட்சிகளுக்கு விற்றது என்ற நிலையில்  இன்றைய (பண)ஆட்சிமுறை.

காமராசர் போன்ற மாமனிதன் விதைத்து சென்ற நல்லாட்சிக்கு இன்றைய சமூகம் செயற்கை உரங்களை தூவிக் கொண்டு வருகிறது. இதன் விளைவு நமக்கும் நமது தலைமுறைக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை அறியாத பேதமை மக்கள் தங்களின் அறியாமையை உணர முற்படுவதில்லை.

ஐந்நூறு ரூபாய்க்கும் ஒரு குவாட்டரும் ஒரு பிரியாணியும் இதற்கு ஆசைப்பட்டு குறிப்பாக இலவசம் என்பதற்கு அடிமையாகி தனது ஓட்டையும் உரிமையும் விற்பனை செய்து விட்டு இப்போது ஆட்சி சரியில்லை தலைமை சரியில்லை அரசு செயல்படவில்லை என்று குற்றம் சாட்டி வருகிறார்கள்.. ஆனால் இதில் என்ன வேடிக்கை என்றால் தன்னை தானே விலைக்கு விற்பனை செய்துவிட்டு என் ஓட்டு என் உரிமை என்று பேசிக்கொண்டு இருப்பது தான்.

ஒற்றுமையே பலம் என்றனர் ஆனால் நமக்குள்ளேயே ஒற்றுமை இல்லை.யாதும் ஊரே யாவரும் கேளீர் என்றனர் ஆனால் அண்டை மாநிலத்தில் இருந்து தண்ணீர் கூட தருவதற்கு தயாராக இல்லை. ஒன்றே குலம் ஒருவனே தெய்வம் என்றனர் ஆனால் பள்ளிக்கூடங்களில் சாதிச் சான்றிதழ் கேட்கிறார்கள்.விவசாயம் இந்தியாவின் முதுகெலும்பு என்றனர் ஆனால் நிலங்கள் எல்லாம் கார்ப்பரேட் நிறுவனத்திற்கு என்கிறார்கள்.விளை நிலங்கள் விலை நிலங்களாக உள்ளது.

அரசு மற்றும் அரசியல்வாதிகளிடம் நான் கேட்டுக் கொள்வது  கல்வி மருத்துவம் தண்ணீர் மின்சாரம் இவைகளை இலவசமாக வழங்குங்கள் நாடு செழிப்புடன் இருக்கும்.குறிப்பாக தாய்மொழிக் கல்வியை கட்டாயமாக்க வேண்டும்.

நமது பாட்டன் பாரதியின் எண்ணங்கள் படி எல்லா துறைகளின்  அறிவும் தமிழில் இருக்க வேண்டும் என்பதை நிஜமாக்க வேண்டும். கலாமின் தொலைநோக்கு படி அறிவியலும் தொழில்நுட்பங்களும் அழகுற தமிழில் எழுதப்பட வேண்டும்.

சிந்தியுங்கள் எனது உறவுகளே இதுவரை நமது மூளை பிறரின் கட்டுப்பாட்டில் செயல்பட்டது போதும்.இந்தியா 2020 என்றார் எனது கலாம் ஐயா இன்று அவர் இல்லையென்றாலும் அவரின் நம்பிக்கை விதைகள் நாம் தான் என்பதை உணர வேண்டும். இந்தியா வல்லரசு அவரின் இலட்சியம் இந்தியா நல்லரசு இதுவே நமது முதல் இலட்சியமாக இருக்க வேண்டும்.

நல்லாட்சி மலர்ந்திட நல்ல தலைமையை உருவாக்கிட நல்லரசு அமைத்திட உங்களில் ஒருவராக நான்.

வைசாலி செல்வம்.

சனி, 20 மே, 2017

வெளியே வா...




கோழிக்குஞ்சாக உன்னை
அடைக்காத்தது போதும்..
வெளியே வா ஒரு கழுகு குஞ்சாக..
உன்னை ஒரு வட்டத்தில் சுழலும்
பந்து போல சுழல வைக்க பார்க்காதே..
வெளியே வா சதம் அடிக்கலாம்..
மனிதன் என்ற  ஆணுக்குள் உன்னை சிறைப்பிடித்ததை மறந்திடு..
வெளியே வா மனிதியாக..
பெண்ணே உன் பெண்மை எனும் சிறகுகளை வலிமையாக்கி
விண்ணில் பறக்கலாம் வெளியே வா..
இன்னும் உன்னை அறியாமை என்ற நிலைக்குள் தள்ளி விடாதே..
ஆணுக்கு நிகராக பெண்களும் வளர்ச்சி அடைந்து வரும் தலைமுறையில்
தான் நீ  இருக்கிறாய்..
அன்று நம் பாரதி கண்ட கனவை
இன்று நிறைவேற்றலாம் துணிவோடு.. நிமிர்ந்த நன்னடை கொண்ட பெண்ணாக வெளியே வா நீயாக..
சுதந்திர உலகில் நீ மட்டும் ஏன் உன்னை விடுதலை செய்ய மறுக்கிறாய்..
பேதைமை விடுத்து வெளியே வா..
வாகை சூடலாம் பெண்ணே..
வெளியே வா..