ஞாயிறு, 19 பிப்ரவரி, 2017

உருவாக்கியவர்கள்


உருவாக்கியவர்கள்:

  1. இந்திய தேசிய ராணுவம் – நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்
  2. அரவிந்தர் ஆசிரமம் – அரவிந்த கோஷ்
  3. ராமகிருஸ்ண இயக்கம் - சுவாமி விவேகானந்தர்
  4. சர்வதேச இயக்கம் – ஆச்சார்ய வினபா பவே
  5. சாரணர் இயக்கம் – ராபர்ட் பேடன் பவுல்
  6. ஹோம் ரூல் இயக்கம் – அன்னி பெசன்ட்
  7. அரிமா சங்கம் – மெற்வின் ஜோன்ஸ்
  8. செஞ்சிலுவைச் சங்கம் – ஹென்றி டூனான்ட்
  9. பிரம்ம சமாஜம் – ராஜாராம் மோகன் ராய்

வெள்ளி, 17 பிப்ரவரி, 2017

உணர்வுகள்...!!!


Image result for smiley face

                      
          அனைவருக்கும் வணக்கம். என் பெயர் சுஹாசினி மகேந்திரன். நான் வலைப்பதிவில் எழுதும் முதல் கட்டுரை இது தான். உணர்வுகள் என்ற தலைப்பு சற்று வித்தியாசமானது தான்.
                        உணர்வுகள் உள்ளவர்கள் மனிதர்கள், அந்த உணர்வுகளை அடக்கி ஆளத் தெரிந்தவர்கள் மாமனிதர்கள். எல்லா உணர்வுகளையும் சரி சமமாக எடுத்துக் கொண்டால் பிரச்சனை என்பதே இல்லை.
                        இதற்கு ஒரு உதாரணம் கூற ஆசைப்படுகிறேன். ராமகிருஷ்ண பரமஹம்சர் தன் இறுதி நாட்களை எண்ணிக் கொண்டிருந்த தருணம் அது. அவரைக் காணச் சென்ற சுவாமி விவேகானந்தர் தன் குருவிடம் சில கேள்விகளைக் கேட்கிறார்.
                        அதில் முதலாவது. மக்கள், கடவுள் எனக்கு மட்டும் ஏன் துன்பத்தைத் தருகிறார்? என்று துன்பம் வரும் வேளையில் கவலை கொள்கிறார்களே அது ஏன்? என்று கேட்க, அப்போது ராமகிருஷ்ணர் சொல்கிறார், மக்கள் தனக்கு இன்பம் வரும் போது கடவுள் ஏன் எனக்கு மட்டும் இன்பம் தருகிறார் என்று வினவுவதில்லை. ஆனால் துன்பம் வரும் வேளையில் மட்டும் அக்கேள்வியை எழுப்புகிறார்கள். இதற்குக் காரணம் அவர்கள் எந்த உணர்வையும் சரிசமமாக எடுத்துக் கொள்வதில்லை என்பதே.
             மேலும் அவர் கூறியதாவது, தங்கம் நெருப்பில் பட்டு உருகும் போது அது மிளிர ஆரம்பிக்கும். அது போலத் தான் மனிதனும் துன்பங்களை அடையும் போது தான் வாழ்வில் உயர்ந்த நிலையை அடைவான்.
             துன்பம் வரும் வேளையில் இதுவும் கடந்து போகும் என்று மனதில் கொள்வதே சிறந்தது.



  

திறமைக்கான வரவேற்பு அழைப்பிதழ்..!!


கே.எஸ்.ஆர் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வருகிற 24.02.2017 அன்று வணிகவியல் மற்றும் வணிகக் கணினிப்பயன்பாட்டியல் துறை இணைந்து நடத்த இருக்கும் சாணக்கியா என்ற தலைப்பில் வினாடி வினாப் போட்டி நடைபெறவுள்ளது.வணிகவியல் துறையைச் சார்ந்த இளங்கலை மூன்றாமாண்டு பயிலும் மாணவிகள் மட்டுமே இப்போட்டியில் பங்கேற்கலாம்.போட்டியின் இறுதியில் பரிசுத் தொகையும், சான்றிதழும்  வழங்கப்படும்.

போட்டிகளுக்கான குறிப்பு; மாணவிகளுக்கு மட்டுமே அனுமதி உண்டு.தேநீர் வழங்கப்படும்.

முன்பதிவிற்கான கடைசி தேதி ; 21.02.2017


அனுமதி இலவசம்..   

                                         

வியாழன், 16 பிப்ரவரி, 2017

டாக்டர் பாஸ்டஸ்

 டாக்டர் பாஸ்டஸ்
                                          -கிருஸ்டோபர் மார்லோவ்

டாக்டர் பாஸ்டஸ் என்று நான் படித்த கதை எனக்குள் இருக்கும் பல குணங்களை வெளிக்கொனர உதவியது.இக்கதையில் ஜான் பாஸ்டஸ் என்பவர் ``விட்டன்பர்க்’’ என்ற நகரத்தில் பிறந்த மாபெறும் பல்துறை சார்ந்த மேதை.உலகில் இருக்கும் அனைத்து துறைகளையும் படித்து பின்னர் ``நீக்ரோமான்சீ’’ என்று சொல்லப்படும் கடவுளுக்கு எதிரான மாயக்கலையை கற்க முடிவு செய்தார்.தன் நன்பர்களின் உதவியால் அந்த கலையையும் அவர் கற்றார்.பின்பு அந்த மாயக்கலையை வைத்து கடவுளுக்கு எதிராக செயல்படும் ``லுசீஃபர்’’ என்ற பாதாலஉலக தலைவனுடன் 24வருடங்களுக்கு தன் ஆவியை அடமானம் வைத்தார்.அந்த ஒப்பந்தத்தின்படி 24வருடங்களுக்கு இவர் நினைத்தது போல வாழ்வின் அனைத்து இன்பங்களையும் அனுபவிக்களாம்.ஆனால் 24வருடங்களுக்கு பிறகு தன் உயிரை லுசீபரிடம் ஒப்படைக்க வேண்டும்.நாட்கள் உருண்டோடின, ஃபாஸ்டசும் தனக்கு பிடித்த செயல்களை செய்தார்.பின்பு, நாட்கள் வாழ்வின் எல்லையை நோக்கி நகரும்போது அவருக்கு வாழ ஆசை பிறந்தது.ஆனால்,இருதிநாளன்று அவரது உயிர் பேய்களால் கவரப்பட்டது.
            இந்த கதையை சிறிது வேறு வழியில் சிந்தித்துப் பாருங்கள், நமக்கு இப்படி ஒரு அர்ய வாய்ப்பு கிடைத்தால் நாம் என்ன செய்வோம்?.நான் என்ன செய்வேன் என்றால், ஃபாஸ்டசுக்கு மெபிஸ்டோபிலிஸ் என்ற கோய் உதவியால் பல காரியங்கள் அவர் மனமகிழ்ச்சிக்காக நிகழ்த்தினார்.எனக்கு அந்த வாய்பு கிட்டினால் மெபிஸ்டோபில்ஸ் உதவியுடன் அழிந்து போன அரிய தமிழ் புத்தகங்களை கண்டு எடுத்திருப்பேன்.இங்கிலிஸ் படிச்சாலும் தமிழச்சி!!!                
                                          (தரவு)
டைனி டாட் பெட் டைம் ஸ்டோரீஸ்

***என்ற தொகுப்பிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டதுதான் எனது படைப்பு.இதனை படித்ததன் தாக்கம் இந்த மொழிபெயர்பு.நன்றி

ஃப்ரூட்ஸ் ஆப் லோபர்

    ஃப்ரூட்ஸ் ஆப் லோபர்
மீன் பிடிக்கும் குழூ ஒன்று கடலுக்குல் சென்றனர்.அந்த குழுவின் தலைவர் வயதில்,அறிவில் மற்றும் புத்தியுடையவரும் ஆவார்.எப்போழுதுமே அவர்களை நல்வழியிலேயே செலுத்துவார்.கடலில் தன்னுடைய பரந்து விரிந்த வலையை விரித்தனர்.அதனை வெளியே எடுக்கும்போது அவர்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை.இது போன்று இரண்டு முதல் மூன்று முறை வலையை வீசினர்.அப்போழுதும் இவ்வாறே வெறும் வலை கிடைத்தது.ஆனாலும் அந்த குழுத் தலைவர் திரும்பத் திரும்ப முயற்ச்சி செய்ய கூறினார்.இந்த முறை அவர்களுக்கு சின்ன மீன்கள் சிறிதும் கடற்பாசிகளுமே நிறைய கிடைத்தது,அவையும் தூக்க கனமாக இருந்தது.
இருப்பினும் தலைவர் அந்த சிறியளவு மீன்களையும் படகுக்குள் கொட்டிவிட்டு பின் மறு முறை வீசுங்கள் என்று கூறினார்.
      அவர்கள் படகுக்குள் கொட்டும்போது,ஒரு பெட்டி கிடைத்தது.அதில் நிறைய பொற்காசுகளும் மாணிக்கங்களும் பல வகையான முத்துக்களும் இருந்தன.அவற்றை தன் வீரர்களுக்கு சரிசமமாக பிரித்துக்கொடுத்தார் அனைவரும் மகிழ்ச்சியாக வீடு திரும்பினர்.அதன்மூலம் ஒரு வேலையை திருத்தமாக செய்து முடிக்கும் வறையில் அதனை கைவிடக்கூடாது என்று அறிய முடிக்றிது.
                                                                  (தரவு)
டைனி டாட் பெட் டைம் ஸ்டோரீஸ்
***என்ற தொகுப்பிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டதுதான் எனது படைப்பு.இதனை படித்ததன் தாக்கம் இந்த மொழிபெயர்பு.நன்றி