ஞாயிறு, 27 நவம்பர், 2016

தி தாங்ஃப்பூல் ஈகில்

                                             தி தாங்ஃப்பூல் ஈகில்
மரவெட்டி ஒருவருக்கு ஒருநாள் காட்டில் வித்தியாசமான சத்தம் கேட்டது. பறவை வேடன் ஒருவன் மரத்தடியில் வலையை விரித்து அதன்மேல் தானியங்களைத் தூவிக் கொண்டிருந்தான்.துரதஸ்டவசமாக ஒரு கழுகு அதில் மாட்டிக்கொண்டு, உதவிக்காக கத்திக்கொண்டிருந்தது.உடனே, சத்தம் கேட்ட இந்த மரவெட்டி அதனை விடுவித்தார்.கழுகும் அவருக்கு நன்றி கூறி அங்கிருந்து சென்றது.


      சில நாட்களுக்கு பிறகு அதே மரவெட்டி ஒரு மணல்திட்டில் அமர்ந்து உணவு உட்கொண்டுக்கொண்டிருந்தான்.சில செடிகளும் மரங்களும் அவனுக்கு நிழல் தந்தன.திடீரென ஒரு கழுகு அந்த உணவை பறித்து சென்றது.தனது உணவை காப்பாற்ற தாண்டி குதித்தான்.அவன் காப்பாற்றிய அதே கழுகுதான் இந்த காரியத்தை செய்தது.அந்த கழுகு வேடனிடம் ``ஐயா உங்களுக்கு பின்னே ஒரு விசப்பாம்பு தங்களை கொத்த காத்திருந்தது.அதிலிருந்து தங்களை காப்பாற்றவே இப்படி செய்தேன்.ஏனெனில்,தங்களுக்கு நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்.’’என்றது.

                                                      (தரவு)
டைனி டாட் பெட் டைம் ஸ்டோரீஸ்
***என்ற தொகுப்பிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டதுதான் எனது படைப்பு.இதனை படித்ததன் தாக்கம் இந்த மொழிபெயர்பு.நன்றி


சனி, 26 நவம்பர், 2016

தி கோல்டன் ஐடல்

                                                            தி கோல்டன் ஐடல்
 ஒரு பெரிய வணிக வயாபாரி ஒருவர் தனது வியாபாரத்தை விரிவாக்கும் பொருட்டுக்காக ஒரு பெரிய நகரத்திற்கு வந்தார்.அந்த நகரம் முழுக்க சுற்றி வந்து ஏதாவது வியாபாரம் பன்ன இயலுமா என்று பார்த்தார்.அப்படியே சிறிது நேரம் அலைந்து கொண்டிருந்தார்.அப்படி அலைந்து கொண்டு இருக்கையில் நெடுந்தூரம் சென்றார்,நகரம் முடிந்து கிராமம் தொடங்கியது.
            அங்கு பழங்கால கோயில் சற்று அழிந்துபோன நிலையில் இருந்தது.அங்கு அமர்ந்து இலைப்பாரையில் அவர் கண்ணிற்கு பாதி அழிந்த நிலையில் உள்ள அந்த இடத்தில் ஏதோ ஒரு பொருள் பல பலவென தெரிந்தது.உடனே அருகில் சென்று கற்களையும் மணல்களையும் கலைத்துப்பார்க்கையில் அவர்க்கு ஒரு தங்க சிங்கச்சிலை கிடைத்தது. ``அடடா
நான் மிகவும் அதிர்ஸ்டசாலி கடவுள் என்னை மேலும் பணக்காரனாக்க ஒரு நல்ல வழிகாட்டியிருக்கிறார்’’ என்றார்.இந்த கவர்ச்சியான சிங்கச் சிலை பொன்னால் செய்யப்பட்டது,அதனை நான் என் வீட்டிற்க்கு எடுத்து செல்ல வேண்டுமா?’’,பிறகு சற்று நேரம் யோசித்து,`` இதனால் எனக்கு என்ன பயண்?இரவில் இந்த சிங்க சிலை என்னை முறைத்து பார்த்து பயபுடுத்தினால் நான் என்ன செய்வேன்?அதற்கு நான் எனது வேலையாட்களை அனுப்பி அந்த சிலை அவர்களை என்ன செய்கிறது என்று தூறத்திலிருந்து நான் வேடிக்கை பார்ப்பேன்’’.என்று முடிவு செய்தார். அவரும் மற்ற பணக்காரர்களைப் போலவே எப்படி பணத்தை செலவிடுவது என்று தெரியாமல்,முட்டாள் தனமாக செயல்பட்டார்.

                                                      (தரவு)
                                    டைனி டாட் பெட் டைம் ஸ்டோரீஸ்
***இந்த தொகுப்பிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டதுதான் எனது படைப்பு.இதனை படித்ததன் தாக்கம் இந்த மொழிபெயர்பு.நன்றி


வியாழன், 24 நவம்பர், 2016

தி கேஜ்ட் மங்கி

                                                                தி கேஜ்ட் மங்கி
     

ஒரு ஊரில் ஏழை மனிதன் ஒருவன் வாழ்ந்து வந்தான்.அவனிடம் குரங்கு ஒன்று இருந்தது.அந்த குரங்கு நிறைய வித்தைகளை காட்டும். தினமும் அந்த குரங்கினை தூக்கி அலைந்து வித்தை காட்டி கடுமையாக உழைத்தான்.மக்களும் அந்த வித்தைகளை பார்த்து சில சில்லறைகளைக் கொடுப்பர்.அந்த சில்லறைகளை எடுத்து தன் உரிமையாளரிடம் கொடுக்கும் அந்த குரங்கு.ஒரு நாள் அந்த குரங்கை உரிமையாளர் பூங்காவிற்கு அழைத்துச் சென்றார்.
           

அங்கு கூண்டிற்குள் இருந்த குரங்குகளுக்கு மக்கள் பழங்கள் ரொட்டித்துண்டுகள் கொடுத்ததைக் கண்டது.அதைக் கண்டபின் இந்த குரங்கு மிகவும் அதிர்ஷசாலி, என்னைப்போல,உணவிற்கு கடினமாக உழைக்கத்தேவையில்லை.இலவசமாக உணவு அதனைத்தேடி வருகிறது என்று எண்ணியது.
            அன்றிரவு அந்த பூங்காவிற்கு சென்று தங்கி உணவுகளையும் சுதந்திரத்தையும் அனுபவித்தது.சில காலம் கழித்து அந்த குரங்கு சலுப்பாக உணர்ந்தது.உணவு உண்ண பார்வையாளர்கள் வரும்வரை காத்திருக்கவேண்டும்.பின்பு,தன் உரிமையாளரிடமே ஓடி வந்து உழைத்து பிழைத்தது.      
                                                      (தரவு)
                                    டைனி டாட் பெட் டைம் ஸ்டோரீஸ்
***இந்த தொகுப்பிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டதுதான் எனது படைப்பு.இதனை படித்ததன் தாக்கம் இந்த மொழிபெயர்பு.நன்றி


தி கிலவர் மௌஸ்

                                                            தி கிலவர் மௌஸ்


சிறிய எலி ஒன்று எப்பொழுதும் துறுதுறுவென இருக்கும்.அது அன்று நல்ல மனநிலையில் சுற்றித்திறிந்தது.எல்லா இடங்களிலும் தாவி,ஓடியது.பின்பு, ஒரு பெரிய மாடு மரத்தடியில் உறங்கியதைக் கண்டது.அந்த மாட்டிற்கு கூர்மையான நீலமான கொம்புகள் இருந்தது.அதன் மூக்கிலிருந்து காற்று அதிவேகமாக ளியேவும் உள்ளேவுமாக சென்றது.
            அந்த எலி மாட்டின் மூச்சை உற்று கவனித்தது.பின்பு,அது மூச்சை வேகமாக இழுக்கும்போது காற்றின்வழி இந்த எலி மூக்கை அடைத்தது.மூச்சு விடத் தினறி விளித்து பார்க்கையில் எலி ஓடியது. கடுமையாக கோபம் அடைந்த அந்த மாடு,எலிக்கு நல்ல பாடத்தைக் கற்றுத்தர முடிவு செய்தது.உடனே அந்த எலியை விரட்டி ஓடியது.இந்த எலியும் விடாமல் ஓடி ஒரு சிறு ஓட்டைக்குள் சென்றது.எலியை விரட்டி வந்த அந்த மாடு ஓட்டை இருந்த மரத்தில் மோதி இரத்தம் வழிய நின்றது. இதன்மூலம், எதனையும் சிறியதாக எண்ணக்கூடாது என்று கற்றுக்கொண்டது அந்த மாடு.                                                
                                                (தரவு)
                                    டைனி டாட் பெட் டைம் ஸ்டோரீஸ்
***இந்த தொகுப்பிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டதுதான் எனது படைப்பு.இதனை படித்ததன் தாக்கம் இந்த மொழிபெயர்பு.நன்றி