வெள்ளி, 15 ஜனவரி, 2016

உழவுக்கு உயிரூட்டுவோம்..!!!


முன்னுரை;

உணவு, உடை, இருப்பிடம் என்பது குடிசையில் இருந்து மாட மாளிகையில் வாழ்பவர்கள் அனைவரது அடிப்படைத் தேவைகள் ஆகும்.பூமி எப்படி தன்னைத் தானே சுற்றிக் கொண்டு சூரியனையும் சுற்றி வருகிறதோ அதுபோல தான் விவசாயியும் தனக்கு வேண்டிய உணவை உற்பத்திச் செய்துவிட்டு பிறருக்கும் உணவை உற்பத்திச் செய்து தருகின்றனர்.இப்படிப்பட்ட விவசாயின் உழவுக்கு உயிரூட்வோம் என்ற வகையில் சில கருத்துகளை காண்போம்.

உழவு என்பதன் பொருள்;

உழவு தொழில் அல்லது விவசாயம் அல்லது கமம் என்பது உணவு மற்றும் பிற பயன்பாடுகளுக்காக சிலவகைப் பயிர்களை உற்பத்தி செய்வதையும் கால்நடைகளை வளர்பதையும் குறிக்கும்.வேள் என்னும் சொல்லின் அடியாகப்  பிறந்த வேளாண்மை எனும் சொல் பொதுவாக கொடை,ஈகை ஆகியவற்றைக் குறிக்கும்.நிலமானது தரும் கொடையால் தான் இப்பெயர் வழங்கியிருக்கலாம்.வேளான் என்னும் சொல் வெள்ளத்தை ஆள்பவன் என்றும் பொருளது என்பர்.வேளாண்மை என்ற சொல் விருப்பத்துடன் பிறரைப் பேணுதல் என்ற பொருளும் உண்டு.

நெல் உற்பத்தி தொடக்கம்;

கி.மு.7000 நூற்றாண்டில் கோதுமை மற்றும் பார்லி வகைப் பயிரிடப்பட்டன.பிறகு தான் கோதுமையை விட நெல் (அரிசி) அதிகளவில் பயிரிடப்பட்டன.கடந்த நமது முன்னோர்கள் காலத்தில் சுமார் 4,00,000 இலட்சம் நெல் வகைகள் பயிரிடப்பட்டன.ஆனால் இன்று 130 நெல் வகைகள் மட்டும் தான் பயிரிப்படுக்கின்றன என்பது எவ்வளவு கசப்பான உண்மை.

உழவுக்கு சான்றோர் தந்த சான்றுகள்;

உழுதவன் கணக்கு பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாது என்பது பழமொழி.ஆம் அனைவரும் கணக்கு பார்பது  போல உழுகின்றவனும் கணக்குப் பார்த்தால் உணவு கூட மிஞ்சாது.

செங்கோல் நடத்துவது உழவனின் ஏரடிக்கும் சிறுகோல் என்றுரைத்தார் கம்பர்.

உலகம் என்னும் தேருக்கு உழவனே அச்சாணி என்றுரைத்தார் வள்ளுவர்.

இந்தியாவின் முதுகெழும்பு விவசாயம் என்றுரைத்தார் அண்ணல் காந்தி.

ஔவையார், இளவரசரே வாழ்க என்று வாழ்த்தவில்லை.அரசே  உன் வரப்புகள் உயர்க என்று தான் வாழ்த்துவார்.காரணம், வரப்புயர நீருயரும்,நீருயர நெல்லுயரும்,நெல்லுயர குடியுயரும்,குடியுயர கோனுயர்வான் என்ற உம்மையை உவமையாக கூறுவார்.

ஏன் அண்மையில் விதைக்கப்பட்ட அ.ப.ஜெ.அப்துல் கலாம் ஐயா கூட இந்தியா வல்லரசு அடைய வேண்டும் என்றால் விவசாயம் மேன்மை அடைய வேண்டும் என்றுரைத்துச் சென்றனர் நம் சான்றோர்கள்.

நீரின்றி அமையாது உழவு;



என்னடா நீரின்றி அமையாது உலகு என்று தானே வள்ளுவர் கூறிப் படித்திருந்தோம்.இப்போ வேற மாறி இருக்கே என்று நினைக்கத் தோன்றுகிறதா..??உண்மை தான் இனி வரும் காலத்தில் நீரின்றி அமையாது உழவு என்பது மிகைதான்.காவேரியிலும்  நீரில்லை நிலத்தடி நீரும் இல்லை.பிறகு எப்படி உழவு செய்து அறுவடை செய்வது..??இயலாத ஒன்று தான்.

ஒரு உதாரணம்;

சாணத்தை சாணமாக விற்றால் கிலோவிற்கு ஒரு(1) ரூபாய்.அதே சாணத்தில் இருந்து பயோ கேஸ் ஆக பிரித்து விற்றால் கிலோவிற்கு ஆறு (6) ரூபாய்.மேலும் அதே சாணத்தை மீன் வளர்ப்புக்கு கொடுத்து மீனாகப் பெற்றால் கிலோவிற்கு நூறு (100) ரூபாய் எனப் பல்வகையில் இலாபம் ஈட்டலாம்.

விவசாயி அடையும் துயரம்;

மூன்று வேளை சோற்றுக்கு உற்பத்திச் செய்தவன் அடுத்த வேளை சோற்றுக்கு என்னச் செய்வது என்று தெரியாமல் வருந்துகிறான் விவசாயி.மேலும் விவசாயம் செய்ய காலநிலையை நம்பி தான் விவசாயம் செய்கிறான்.ஆனால் அந்த காலநிலை கூட  அவர்களை ஏமாற்றிவிடுகிறது.எப்படி தெரியுமா..??மழை அதிகமாகப் பொழிந்தாலும் கஷ்டம் மழைப் பொழியாவிட்டாலும் கஷ்டம் தான் நமது விவசாயிகளுக்கு.இவ்வுலகம் கண்டிடாத பிரச்சனையும் இல்லை.மாற்றிடாதப் பிரச்சனையும் இல்லை.

உழவர் திருநாள்;

வீட்டில் சூரியன் ரதத்தில்  வருவது போல கோலமிட்டு மாவிலை தோரணங்கள் கட்டி வீட்டை அலங்கரிப்பார்கள்.பொங்கலுக்கு தமிழர் திருநாள் என்பதைப் போல உழவர் என்ற சிறப்பு பெயரும் உண்டு.உழவுக்கும்,தொழிலுக்கும் வந்தனை செய்வோம் என்பதற்கேற்ப உழவர் திருநாள் கொண்டாடப்படுகிறது.உழவர்கள் இந்த பண்டிகையை சிறப்பாக கொண்டாடுவார்கள் வருடம் முழுவதும் வயலில் வியர்வை சிந்த உழைத்த உழவர்கள் பகவலனுக்கு (சூரியனுக்கு) நன்றி தெரிவிக்கும் விதமாக இந்த பண்டிகையை கொண்டாடுகிறார்கள்.

எப்போது உதயமாகும் விவசாயம் குறித்த ஞானம்;



பணம் சம்பாதிக்க ஆயிரம் வழிகள் இருக்கலாம்..ஆனால் உணவு உற்பத்திச் செய்ய விவசாயம் என்ற ஒருமுறை தான் உண்டு.

வயிற்றுல பசி இருக்கறவரைக்கும் விவசாயம் அழியாது.ஒரு நாள் விவசாயத்த கார்போரைட் கம்பெனி நடத்தும் அப்ப அரிசியோட விலை தங்கத்தை விட அதிகமாக இருக்கும்.அன்னைக்கு தான் தெரியும் நம் விவசாயியின் மதிப்பும், உணவின் மதிப்பும்.இவர்கள் சேற்றில் கை வைத்தால் தான் நம்மால் சோற்றில் கை வைக்கமுடியும்.இவர் தான் விவசாயி.காலம் கடந்து கிடைக்கும் ஞானம் பயனற்றது.

முடிவுரை;



நான் இந்த கட்டுரையை எழுதும் போது நாம் சாப்பிடும் உணவின் பின்னால் ஒரு விவசாயி அடையும் துயரமும் வேதனையும் கண்டு மனம் நொந்து போனேன்.நாம் இது தெரியாமல் உணவை எப்படி எல்லாம் வீண் செய்கிறோம்.உணவின் பின் ஒரு விவசாய குடும்பமே இருக்கிறது.மேலும் விவசாயத்துக்கு அவர்கள் கடன் வாங்கி அதை திருப்ப செலுத்த இயலாமல் சிலர் உயிர் துறந்து விடும் நிலையைக் கண்டு மனம் வேதனை அடைகிறது.வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடும் வள்ளலாராக இருக்க நம்மால் இயலாம் போனாலும் வறுமைத் துயரினால் உயிர் துறக்கும் உழவரின் சோகம் தணிக்கும் மனம் கொண்ட மனிதனாக மாற முயற்சிப்போம்.முடிந்த வரை உணவை வீண் செய்யாதீர்கள்.விளை நிலம் விளை நிலமாகவே இருக்கட்டும் விலை நிலமாக மாறினால் விளைவு மரணம் என்பதை நினைவில் கொண்டு வாழ்வோம். அனைத்து விவசாயக் குடும்பத்துக்கும் மனமார்ந்த வாழ்த்துக்களும் நன்றிகளும் பல..

வாழ்க விவசாயம்..!!வளர்க வரப்புகள்..!!






வியாழன், 14 ஜனவரி, 2016

தமிழர் திருநாள் விழா


 

13.01.15 அன்று  கே.எஸ்.ஆா் மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் நேற்று நடைபெற்ற தமிழா் திருநாள் விழாவில் மாணவிகளுக்கு பேச்சுப்போட்டி, கவிதைப் போட்டி, கோலப்போட்டி, பண்பாட்டு அணிவகுப்பு, நெருப்பின்றி சமைத்தல், இசைமேடை, பானை உடைத்தல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. பொங்கல் வைத்து தமிழர் பண்பாட்டை நினைவுகொள்வதாக இவ்விழா அமைந்தது.

ஞாயிறு, 10 ஜனவரி, 2016

ஷேக்ஸ்பியருக்கு பிறகு யார்?





          ஆங்கிலத்தில் பல எழுத்தாளர்கள் எனினும் சிலர் மட்டுமே எவருடனும் ஒப்பிட முடியாதவகையில் தம் படைப்புகளை தந்துள்ளனர்.  இந்த வகையில் ஆங்கில இலக்கியத்தை பற்றி சிந்திக்கும்போது நம் நினைவுக்கு வரும் முதல் எழுத்தாளர் ஷேக்ஸ்பியர். தம் கதாப்பாதிரங்களாலும்,ஒரு சாதரண செய்தியை விவரித்துக்கூறுவதிலும்,இந்த உலகம் முழுவதிலும் பெருமளவில் புகழ் பெற்றார்.  இந்த வகையில் எல்லா இலக்கிய கூறுகளையும் பின்பற்றி, அரிய பல கருத்துக்களை இவ்வுலகிற்கு தந்தவர் ஷேக்ஸ்பியரின் நன்பர் பென்ஜான்சன். 16ஆம் நூற்றாண்டில் இரண்டாம் முக்கியத்துவம் வாய்ந்தவர். இவர் எழுதிய நூல்கள் அனைத்திலும் எல்லா இலக்கண, இலக்கிய முறைகளையும் பின்பற்றி தம் அடையாளத்தை பதித்தவர். இவர் 1573இல் வெச்ட்மினிச்டெர் என்ற இடத்தில் பிறந்தார். லார்டு அமிரல் தியேட்டா் கம்பெனியின் உறுப்பினராவார். நாடக எழுத்தாளர், நடிகர், போர் வீரர், என பல துறைகளில் தடம் பதித்தவர். நகைச்சுவை,சோகம்,காதல் கதைகள் எழுதுவதில் வல்லவர். எலிசபெத் காலத்தை பற்றிய இவரது படைப்பு மிக குறைவுதான். எனினும் அக்காலத்தில்இவர் வெளியிட்ட நூல்கள் அனைத்தும் வெற்றி பெற்றன. இவர் இவர் இறந்த பிறகு இவர் கல்லறையில் ``ஓ அரிய பென்ஜான்சன்’’என்று எழுதப்பட்டிருந்தது. நகைச்சுவை என்ற படைப்புக்கு இவர் தான் இலக்கணம் வகுத்தார்.


எங்கே செல்கிறது பாரதம்..??


 இந்தியா ஓர் அறிமுகம்..!!!


நமது நாகரீகம் சிந்து சமவெளியில் ஆரம்பம் பெற்று இன்று  வெள்ளையர்களிடம் இருந்து சுதந்திரம் பெற்றும் அவர்களின் நாகரீகத்தை பின்தொடர்கின்றோம்.அன்று நம்மிடம் இருந்த இயற்கை வளத்தைக் கண்டும், வியாபாரம் செய்ய வந்தவர்கள் தான் போச்சுகீசியர்கள்.பிறகு தான் பிரிட்டிஷ் ஆட்சி நமது நாட்டை அடிமைப்படுத்தியது..கிழக்கிந்தியக் கம்பெனி கி.பி.1600-ல் இந்தியாவிற்குள்  நுழைந்து நமது வளங்களுக்கு நாமே அவர்களிடம் கட்டினோம் வரி.அதற்கு பதிலடி கொடுத்தார் நமது கட்டபொம்மன் ..அண்ணல் காந்தி,நேரு,திலகர்.வ.உ.சி,குமரன்,காமராசன் மற்றும் பலர் நம்மை ஒருங்கிணைத்து சுதந்திர போராட்டத்திற்காக கூக்குரல் எழுப்பினார்கள்.அதன் விளைவு ஆகஸ்ட் திங்கள் 15-ம் தேதி நள்ளிரவில் ஆங்கிலக் கொடி இறக்கப்பட்டு இந்தியக் கொடி ஏற்றி எப்படியோ அடைந்து விட்டோம் சுதந்திரம்.


எங்கே நமது ஒருமைபாடு..!!

அன்று நமது பாரத மக்கள் ஒற்றுமை உணர்வோடு இருந்தனர் என்று நமது பாடப்புத்தகங்களில் படித்திருப்போம்.அது உண்மை தான்.அன்றைய காலக்கட்டதில் குமரி முதல் இமயம் வரை தமிழ் மொழி மட்டுமே பேசப்பட்டது உண்மை.ஆனால் இன்று நமது நாட்டில் அரசால் அங்கீகரிக்கப்பட்ட மொழிகள் மொத்தம் 22.ஏன் இந்த மொழி பிரிவினை ..?? அதற்கு நாம் ஆங்கிலேயரிடம் அடிமைப்பட்டு இருக்கலாம்.அது மட்டுமா இல்லை ஜாதி, மதம் மற்றும் மொழி போன்ற ஏரளமான பிரிவுகள்..இன்றைய தினத்தில் நமக்காக உயிர் துறந்தவர்கள் இருந்தால் அவர்களின் எண்ணம் இதற்கா சுதந்திரம் பெற்றுத் தந்தோம் என்று வருந்துவர்.இன்று எங்கே ஒருமைபாடு..??


எங்கே விவசாயம்..!!

வானம் பார்த்து விவசாயம் செய்த புண்ணிய பூமி ஆனால் இன்று மானம் மற்றும் பணத்தைப் பார்த்து செய்கின்றோம் விவசாயம்..ஒவ்வொரு விவசாயிகளும் நமக்கு கடவுளாக இருந்த அன்னமிட்ட கைகள்..இன்று கைதிகள் அவர்கள் ஆசை என்னும் பிடியில்.ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட்டு திடமாக இருந்தோம் இன்று பீட்சா,பர்க்கர்,நூடுல்ஸ் என்ற ஆங்கில உணவைச் சாப்பிட்டு வருக்கின்றோம்..நாளைய சமுதாயத்திற்கு கொடுக்கப்போவது உணவா..??மரணமா..??

பணமா..??பிணமா..??

யார் புதைத்தது பணம் என்ற பிணைத்தை நம்முள்.ஒருக்கட்டத்தில் பணம் தேவைப்பட்டது உயிர் வாழ இன்று வாழ்வதே படணத்திற்காக தான்.பணத்தை உருவாக்கியதே மனிதன் தான் ஆனால் இன்று பணம் தான் மனிதனை உருவாக்குகிறது.என்ன கொடுமை..??

அரசா..??தனியாரா..??




நம் எல்லாருக்கும் தெரிந்த உண்மை.ஆனால் எதுவும் செய்ய இயலவில்லை நம்மால்.!!

அரசு நடத்த வேண்டிய கல்வி இன்று தனியார் நடத்துகிறது.தனியார் நடத்த வேண்டிய டாஸ்மார்க் அரசு நடத்துகிறது.நமது அரசாங்கத்துக்கு டாஸ்மார்க்கில்  இருந்து தான் அதிக வருமானம் கிடைக்கிறது என்பது உண்மை.

கல்வி வியாபாரமா..??சேவையா..??

கல்வி என்பது சேவையாக இருந்தது..இன்று அதே கல்வி வியாபாரம் ஆனது ..படிக்க ஆர்வமுள்ள குழந்தைகளாக படிக்க இயலவில்லை காரணம் கட்டாயக் கல்வி கட்டணம் கல்வியாக மாறியது தான் ..கல்வி முறை என்பது நாளைய சமுதாயத்தை உருவாக்குவது .ஆனால் இந்த வியாபாரம் நம்மை பகைவன் ஆக்குகிறது.அரசு பள்ளிகள்,கல்லூரிகள் மற்றும் மருத்துவமனை வேண்டாமா ஆனால் அரசு வேலை மட்டும் வேண்டுமா நம் மக்களுக்கு..

முடிவு..!!




எனது பார்வையில் நான் காணும் பாரதம்.இனம்,மொழி,மதம்,ஊழல் மற்றும் லஞ்சம் நிறைந்தது  தான் இந்தியா..இதை யாராலும் மறுக்க இயலாது..எனது கவலைகள் அனைத்தும் நமது இந்தியா எப்போது வல்லரசு அடையும் ..முடியும் இன்றைய தலைமுறைக்கு வழிவிடுங்கள் ..இன்றைய தலைமுறை நாளைய சமுதாயம் என்பது வார்த்தையால் மட்டுமில்லாமல் செயலிலும் வேண்டும்..சிந்தியுங்கள் இது நமது பாரதம்.எனது தமிழ் ஆசிரியர் முனைவர்.இரா.குணசீலன் ஐயா அடிக்கடி என்னிடம் கூறுவது எதையும் நம்மால் மாற்ற இயலாது நம்மை நம்மளே மாற்றினால் தான் உண்டு என்று இது என் மனதில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது..ஒவ்வொருவரும் தன்னை தானே மாற்றினால் கட்டாயம் மாறும் நம் பாரதம்..


முடியாது என்பது முடியாது..!!



யாராலும் கண்களைத் திறந்து கொண்டு தும்ம முடியாது..!!



பன்றிகள் வானத்தை அண்ணாந்து பார்க்க முடியாது..!!



பூனையால் இனிப்புச் சுவையை உணர முடியாது..!!



முதலைக்களுக்கு நாக்கை வெளியே நீட்ட முடியாது..!!



பறந்தாலும், நின்றாலும்,அமர்ந்தாலும் தட்டான் பூச்சிகளால் இறக்கையை மடக்க முடியாது..!!





முதலை.திமிங்கலம் போன்றவற்றுக்கு மீன்களைப் போல நீருக்குள் மூச்சுவிட முடியாது..!!



கிவி பறவையால் 2 அடி கூட பறக்க முடியாது..!!