திங்கள், 30 செப்டம்பர், 2019

பணிவு

எங்கு சென்றாலும் பணிவோடு நடக்கக் கற்றுக்கொள் 
ஏனெனில் பணிவே பல இடங்களில் பாராட்டைத் தேடித்தரும்....

மறைந்தாயோ ராணுவ வீரனே

தாயை அழுகையில் சுட்டு
தந்தையின் ஆறுதலை ஏற்று
அண்ணனிடம் தோள்களில் தட்டு
தங்கையிடம் இடத்தினை விட்டு
என் தாய் என் வீடு என் திசை
என்பவற்றை மறந்து
எண்திசைகளும் என் தாய் நாடே
என்பதனை உணர்ந்து
எத்திசைக்குச் செல்கிறேன் என்ற
தெளிவினை இழந்து
ஆசைகள் அனைத்தையும் அடக்கி
ஐம்புலன்களை ஆளுமைப்படுத்தி
அன்றாடம் உன்னை நீயே வருத்தி
உன் மனதை நேர் வழிப்படுத்தி
அறிவினைத் திருத்தி அன்று நீ சென்றாய்
இராணுவ வீரனாய் எமக்காகக்
காட்டில் பதுங்கி,கடலினில் மூழ்கி
மலையினில் ஒதுங்கி வெயிலினில் வருந்தி
பாலை வானத்திலும் பாடு பட்டாய்
நாட்டிற்காக நீ உன் உயிரையே விட்டாய்
நீர் எம்முறவாக இருந்திருந்தால் கூட மறந்திருப்போம்
ஆனால் இன்று எங்களுள் உணர்வென ஆகிவிட்டீர்கள்
உங்கள் ஆத்மா இன்று எங்கள் மனதில்
மகாத்மாவாக மாறிவிட்டது
எங்கள் அஞ்சலியை அன்பு
வேண்டுகோளாக விடுகிறோம்
நீர் அதனை ஏற்க வேண்டி நாங்கள்
இங்கு அமைதி காக்கிறோம்

ஞாயிறு, 29 செப்டம்பர், 2019

நண்பா!! நண்பா!!

நண்பா நண்பா
துவண்டு போகாதே
தோல்வி அடைந்தாய் என்று

நண்பா நண்பா
திகைத்துப் போகாதே
வெற்றி பெற்றாய் என்று

நண்பா  நண்பா
தொலைத்து விடாதே
உன் திறமையை கேலி
செய்பவர்கள் முன்பு

உன்னை அனைவரும் புரிந்துகொள்வார்கள்
உன்னை அறிந்த பின்பு

நண்பா வா
செல்வோம் சரித்திரம் படைக்க

வெள்ளி, 27 செப்டம்பர், 2019

அவள் ❣️

உன் ஒற்றைப் பார்வையில்
என்னைக் கொள்ளையடித்து விட்டாயடி

உன் செய்கையால்
என் நேரங்கள் அனைத்தையும்
உனக்கானதாய் மாற்றி விட்டாயடி

உன் மூச்சினால்
என்னுள் காற்றாகச் சென்று
என்னவள் ஆனாயடி

உன் சிரிப்பினால்
என்னைச் சிறை பிடித்துவிட்டாயடி

என்னை எப்போது விடுவிப்பாய்

என் என்னவளின் விடையோ வியப்பில் தள்ளியது

என் கண்களால் தானே
உன்னைக் கொள்ளையடித்தேன்

என் கண்கள் மூடி நான் கல்லறையில்
உறங்கும் போது விடுவிக்கிறேன் என்றாள்

ப.லட்சுமிப்பிரியா
இளநிலை மூன்றாமாண்டு ஆங்கிலம்

கிருத்திகா தேவராஜன்
இளநிலை முதலாமாண்டு கணினிப் பயன்பாட்டியல்