வெள்ளி, 17 ஜூன், 2022

இமையில்லா விழி

 நீ கனவாய் இருப்பின்

நிஜமில்லா நித்திரையை ஏற்றுக்கொள்கிறேன்.

நீ நிஜமாய் இருப்பின்
இமையில்லா விழியை ஏற்றுக்கொள்கிறேன்.        ஷாலினி.ரா (1St B.A . Economics) KSRCASW

இவள்

 நீ தந்த மகிழ்ச்சியால்...

மின்மினிப்பூச்சியைப் போல....
வண்ணமயமாக சிறகடித்து பறந்தாள்... இவள்..!!            Ramya.M   1st B sc.,CDF KSRCASW

நினைக்காத நாள்

 *துலைத்து விட்டேனே தவிர...

மறந்தும் கூட நினைக்காத நாள் இல்லை🙂..!*        *C. Aarthi (1st BCA)* KSRCASW


சிறகு

 பறப்பதற்கு வசதிகள் இருந்தாலும்

தரையில் இருக்கவும் கற்றுக்கொள்...
சிறகுகளை இழந்தாலும் வருந்தமாட்டாய்...                Madhumitha.R(I-N&D)  KSRCASW

ஜொளிக்கும் நட்சத்திரம்

 நீருக்கு பஞ்சமில்லை..... மான்போல் துள்ளி ஓடும் நதியில்......

ஜொளிக்கும் நட்சத்திரமாய் வாழும்
மீன்கள்-ஏனோ.....
துள்ளி குதித்து தாவும்.... மீனை வர்ணிக்க வந்தேன்.......
நீல நதியில் வசிக்கும்.....
வண்ண மீன்களே.....!!
என்னிடம் உரையாட வா!!! 
உன்னிடம் விளையாட வருகிறேன்..! 
என் மனதில் ஏக்கம் ஏனோ...
முத்துகளைப் போல்
குவிந்து கிடக்கின்றது...!!
பல வண்ணங்களை கொண்ட
உன் மேனியை நேசித்தேன்.....
வசிப்பாயா என்னுடன் ? வினவ வந்தேன்
சட்டென்று தடுமாற்றம் படைதேன்....
உன்னை அழைத்துச் செல்ல
மறுக்கிறது என் மனம்... நீ வசிக்கும் உம் இடமே
உன் மகிழ்ச்சிக்கு காரணம்....
நீல நதியில் - நீ !!
துள்ளி விளையாடும்
மகிழ்ச்சியை உன்னிடம் இருந்து
பறிக்கமாட்டேன்......
உன் மகிழ்ச்சியை உன்னிடம் தந்து
உன் மகிழ்ச்சியை கண்டு
நான் மகிழ்ச்சி அடைகிறேன்
கண்ணே !!!                                                    Yamini. R  I - B. Sc.,  CDF    KSRCASW