புதன், 12 பிப்ரவரி, 2020

பவித்திரம்


7.தனிமை
நான் தனி மரம்தான்
தனிமையும் ஒரு வரம்தான்
பல கிளைகளை நான் படைப்பேன்
பாசங்களை நான் கொடுப்பேன்
நேசமதைக் கோலைப் போட்டு
                     நந்தவன் சொல்லை ஏற்று  
நாளுமதை நான் வளர்பேன்
நல்லதொரு உலகம் படைப்பேன்

8.எண்ணம்
பாக்களின் பலவகை
புன்னகை ஓர் புதுசுவை
பூக்களில் பல மணம்
பதறுமோ என் மனம்
சலிக்கிறது ஏழு வண்ணம்
விழிக்கிறது உன் எண்ணம்..

9.காதல்
உன்னை நான் காதலித்த நாட்கள்
கடந்துவிட்டது
என்னை நீ கண்ட காட்சியெல்லாம்
கலைந்துவிட்டது
நாம் கொண்ட கனவெல்லாம்
கரைந்துவிட்டது
நம் காதல் மட்டும் மீண்டும்
ஏனோ, மலர்ந்துவிட்டது

10.மனமே நீயாக
நானும் கூடப் பார்த்ததில்லைஅந்த
மனம் என்னும் ஒன்றைஅதை
மறக்க நினைத்த நேரத்திலேதான்
தெரிந்தது, என் மனமே நீ என்று
தவித்தேன் உயிருடன், மறந்தேன் நான்
மறக்க நினைத்த நிகழ்வினைக் கூட

11.துணையானது
சில நினைவுகள் சிறிதாயினும்,
பல நினைவுகள் பெரிதாயினும்,
உன் நினைவுகளுடன் என் உயிர் சாயனும்
நாம் காதலில் மலர்வளையம் சூடனும்
காதல் அழியாதது, கனவோ களையாதது
மனமோ மாறாதது உன் நினைவே துணையானது


தமிழ்மொழி

அன்னை சொன்ன மொழி
ஆதியில் பிறந்த மொழி
இணையத்தில் இயங்கும் மொழி
ஈடிலாத் தொன்மை மொழி
உலகம் போற்றும் மொழி
ஊர்கூடி வியக்கும் மொழி
எட்டுத்திசையும் பரவிய மொழி
ஏட்டிலும் எழுதும் மொழி
ஐயத்தை நீக்கும் மொழி
ஒற்றுமை வளர்க்கும் மொழி
ஓதியே உயர்ந்த மொழி
ஔவையார் வளர்த்த மொழி
அஃதே நம் தமிழ்மொழி

செவ்வாய், 11 பிப்ரவரி, 2020

பூப்போல ஒரு சிரிப்பு


பிரேமா மெய்யப்பன் 
முதுநிலை இரண்டாமாண்டு கணிதம்


வாழ்க்கையில் முயற்சிகள் தவறலாம். ஆனால் முயற்சிக்க தவறலாமா?
முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும் (குறள்).
முயற்சி திருவினை ஆக்கும் (ஆன்றோர் வாக்கு)

தமிழ் இதழ்கள்

பிரபலங்கள் பலர் நடத்திய தமிழ் இதழ்களை அறிவோம்
     தேசபக்தன், நவசக்தி          -     திரு.வி.கல்யாணசுந்தரனார்
     குயில்                                       -      பாரதிதாசன்
     சுதேசமித்ரன்                         -      ஜி.சுப்பிரமணிய ஐயர்
     பாலபாரதி                               -      வ.வே.சு. ஐயர்
     ஞானபோதினி                      -      சுப்பிரமணிய சிவா
     இந்தியா, வி்ஜயா                 -      சுப்பிரமணிய பாரதி
     எழுத்து                                     -      சி.சு.செல்லப்பா
     குடியரசு, விடுதலை           -      பெரியார்
     திராவிட நாடு                        -      அண்ணா
    தென்றல்                                  -       கண்ணதாசன்
    சாவி                                           -       சா.விஸ்வநாதன்
    கல்கி                                          -       ரா.கிருஷ்ணமூர்த்தி