சிந்திக்க முயலும் சில நொடியும்
சிறைபிடிக்கப்படுகிறது.
கவலையால் அல்ல,
வாழ்க்கைப் பற்றிய கற்பனையால்.
கற்பனை உண்மையாகும் வரை
காய்நகர்த்தப் போகிறேன்.
இடையில் துவண்டுபோவேன்.
ஆனால் தோற்கமாட்டேன்.