அ.ப.ஜெ.அப்துல் கலாமுக்கு
சமர்பணம்..!!!
விண்வெளியில்
விண்கலன்களை ஏவின கைகள்
இன்று
விண்ணிற்கே சென்றது ஏனோ..!!
நாங்கள்
இழந்தது விஞ்ஞானி அல்ல
இந்திய
தேசத்தின் விஞ்ஞானம்..!!
இது
அழுகை அல்ல
இன்று
பிறந்த குழந்தைகளின் குமுறல்..!!
இந்தியாவை
இமயத்திற்கு கொண்டு சென்ற நீ
இமயத்தைக்
காட்டிலும் உயரமான இடத்திற்கு
சென்றது
ஏனோ..!!
நீ
இல்லாத தேசத்தில்
நாங்கள்
எவ்வாறு வாழ்வோம்..??
உன்னுடைய
காலத்தில் நாங்கள் வாழ்ந்தது
எங்கள்
பாக்கியம்-உன்னை காணமுடியாமல்
போனதோ
எங்கள் துர்பாக்கியம்..!!
உன்
முடியோ அழகு-நீ எடுத்துவைக்கும்
ஒவ்வொரு
அடியும் அற்புதம்..!!
அப்துல்
கலாம் என்ற பெயர் சூட்டியதும்
நீதான்..!!!
கோவிலுக்கு
சென்று இந்தியா என்ற
பெயரில்
அர்ச்சனை செய்ததும் நீதான்..!!
இதுவே
தேசத்தின் மீது நீ வைத்த நேசத்தை
பரைசாற்றுகிறது..!!!
பாரத
தேசத்தில் ஒரு கலாம் -இனி
பார்க்கமுடியுமா..??மற்றொரு
கலாம்..!!
உன்னத
மாமனிதனே உனக்கு நிகர் நீயே..!!
கடல்
அளவு கூட போதாது உன்னை போற்ற
எவர்
இருக்கிறார் உன்னை தூற்ற..??
விண்வெளி
கூட உன் காலடியில்
நாளைய
இந்தியா யார்கையில்..??
இராமேஷ்வரம்
புனிதத்துவம் அடைந்தது உன்னால்..!!
உலகம்
இராமேஷ்வரத்தை அறிந்ததும் உன்னால்..!!
இந்தியாவுக்கு
விடியல் எந்நாள்..??
உன்
கனவுகள் நனவாக போவது எந்நாள்..??
உதித்தெழுவோம்
உனக்காக நாளைய
நாளைய
இந்தியா நமக்காக..!!
வாழ்க
கலாம்..!!வளர்க இந்தியா..!!
2020-லோ
வளர்ந்த இந்தியா..!!
கட்டாயம்
நிறைவேறும்..!!