ஞாயிறு, 26 ஜூன், 2022

கண்ணீர்



குழாயில் 
சொட்டு சொட்டாக
வீணாகும்
ஒவ்வொரு துளி நீரும்
சொல்லாமல் சொல்கிறது
நாளை
தண்ணீருக்காக விடப்போகும்
கண்ணீரை.....

M.Sanmati 
1st BSC COMPUTER SCIENCE ksrcasw

*வண்ணத்தில் நீ*



கவியோ.... கதையோ...
கண்ணே....!
கண்ணில் தோன்றும் காட்சியோ -
என்னில் வாரணம் ஆயிரமாக உதித்ததை...
மொழித்தேன் வார்த்தையில் வர்ணிக்க....
கண் விளிக்கும் நொடியில் தோன்றும்
பல வண்ணங்களே...
ஏனோ
என்னில் ஒரு மாற்றம்
என்னை நினைத்த உன்னை
நினைக்கும் ஒரு மனம் கண்ணில் தோன்றும்
காட்சியே பல வண்ணமாய் தளிர்ந்தாய்
நீ.. !!
உறவே.... !!

Yamini. R 1st B. Sc.,CDF  ksrcasw

வியாழன், 23 ஜூன், 2022

என் கல்லூரி வாழ்க்கை

அவசரம் இல்லை..
ஆரவாரம் இல்லை..
இறைக்கூட்டம் இல்லை..
சீருடை இல்லை..
விசில் சத்தம் இல்லை..
ஒன்றுபட்ட குரல் இல்லை..
குழந்தையாக இருந்த என் காலம்..
வாழ்க்கையை ருசிக்க...
முகம் தெரியாத மனிதர்களுடன்...
ஆரம்பித்தது என் கல்லூரி வாழ்க்கை...

1st Bsc.nutrition and dietetics 
J . Harshini. Ksrcasw

வளைவு

ஒற்றை பூ தனிமையை ருசிப்பதை விட
ஓர் இதழ் அதை நுகர்தலே
வளைவு தான்
1st B.A Economics Varsha.P ksrcasw

புதன், 22 ஜூன், 2022

முத்துகளை தேடியே தொலைந்தேன்

கவிதையின் கண்களைக் கண்ணீரில் கண்ட நாட்கள்!
இன்று விழியின் விழிம்பில் நதி வற்றிக் கிடப்பது ஏன் ?
தாயின் உறவு தொப்புக்கோடியில்
தந்தையின் உறவு கைப்பிடியில் அண்ணனின் உறவு அறவணைப்பில்
என்று 
உறவுகள் சிற்பிக்குள் உள்ள முத்து போல் ஒன்றாக இருந்த
நாட்கள் ....
ஏனோ!!
சிதறிய முத்துக்கள் நாளடைவில் பிரிந்தன.. 
முத்துகளை தேடியே தொலைந்தேன்!! விழியில் வழிந்த கண்ணீர் வற்றிப் போய்
கலைத்தன
எழுத்துகளை தேடி நான்
துளைந்தேன்
எண் கண்ணில் கவிதையை
காணவில்லை..
என்னோடு சேர்ந்து என் கவிதையும் தொலைந்தது.. !!!
             1st B. Sc., CDF YAMINI. R ksrcasw

ஞாயிறு, 19 ஜூன், 2022

அப்பா

கோபத்தில் நம்மை 
திட்டிவிட்டுப்போனாலும்.....
அடுத்த நிமிடமே நம்மை அன்பாக அறவணைக்கும் இணைபிரியா உறவு அப்பா...!!
      Ramya .M 1st B sc., CDF ksrcasw

அப்பாவின் அன்பு

தான் உலியாக உருவாகி உன்னை செதுக்குவார் சிற்பமாய்!...
அவர் செதுக்கிய வார்த்தைக்களுக்கு 
நீ கொடுக்கும் 
அவ மரியாதையை  தான் துவண்டு போனாலும் உன்னை கை விடாமல், கரை சேர்ப்பார் உன் வாழ்க்கையை !!...

G.Prema 1st B.COM ( FMA ) ksrcasw

அப்பா

விழி மூடிய இருளில் 
வழி இல்லை 
இருப்பினும் 
தேடி அலையும் 
இவளின் 
கரம் பிடித்து 
நீர் வர வேண்டும் 
இயவையில் 
உன்னுடம் இருளில் வாழும் என்னாசை 
அப்பா....!
Yamini. R 1st B. Sc., CDF ksrcasw

*விழியில் வலி*



விழியில் வழியா
நீரே... !!
விழும்பில் நிற்கும்
உன்னை துயரத்தால் சிங்காரிக்கும் நேரம்..!!
யவரிடமும் மொழியாமல்..!!
     Yamini. R 1st  B. Sc., CDF ksrcasw

வெள்ளி, 17 ஜூன், 2022

ஸ்பரிசங்கள்

 புதிதாய் பிறந்திருக்கிறேன்.


பழகிய இருட்டை விட்டு 
வெளிச்சத்தில் உன்னை தேடி

ஸ்பரிசங்கள் யாவும் 
உணர்வையும் உறவையும் உரைக்க

அறுசுவை
அறியா சுவை உணர்த்த

மொழியின் தன்மையில்
ஆதியும் அந்தமும் விளங்க

இவை யாவும் 
உன்னால் நிகழ                            -Varsha.P 1st Economics KSRCASW

இமையில்லா விழி

 நீ கனவாய் இருப்பின்

நிஜமில்லா நித்திரையை ஏற்றுக்கொள்கிறேன்.

நீ நிஜமாய் இருப்பின்
இமையில்லா விழியை ஏற்றுக்கொள்கிறேன்.        ஷாலினி.ரா (1St B.A . Economics) KSRCASW

இவள்

 நீ தந்த மகிழ்ச்சியால்...

மின்மினிப்பூச்சியைப் போல....
வண்ணமயமாக சிறகடித்து பறந்தாள்... இவள்..!!            Ramya.M   1st B sc.,CDF KSRCASW

நினைக்காத நாள்

 *துலைத்து விட்டேனே தவிர...

மறந்தும் கூட நினைக்காத நாள் இல்லை🙂..!*        *C. Aarthi (1st BCA)* KSRCASW