வெள்ளி, 7 பிப்ரவரி, 2020

ஆசை

தூய ஆசை மனிதனை உயர்ந்த நிலைக்குக் கொண்டு செல்கிறது.
தீய ஆசை அவனுடைய வாழ்க்கையைக் கெடுக்கிறது.
                                பஞ்சதந்திரம்

உணர்வு

அன்பையோ
ஆசையையோ
காதலையோ
வெறுப்பையோ
எதையும்
வெளிப்படையாகச்
சொல்லி விடாதே
அதுவே சில(பல)
நேரங்களில் உனக்கே
எதிரியாகிவிடும்

என் திசையைத் தேடுகிறேன்

காற்று வந்து என் இதயத்தைச் சுட்டது
இன்று பூத்த பூவின் மனம் ஏனோ கெட்டது
தோன்றி மறையும் வெண்ணிலா
இன்று தேய்ந்துவிட்டது
கரையை அணைக்கும் அலையும் கைவிட்டது
முடியாத என் பாதையில் இன்று
தடை மட்டும் நீண்டது
தீயாய்ச் சுடும் நினைவுகளில் நான்
தென்றலாய் மாறி என் திசையைத் தேடுகிறேன்

ஈ.கன்னிகா
இளங்கலை மூன்றாமாண்டு ஆங்கிலம்

நீர்


வி.அக் ஷ்யா
இளங்கலை மூன்றாமாண்டு ஆங்கிலம்


அவள்


சி.விஷ்ணுப்பிரியா
இளநிலை மூன்றாமாண்டு வேதியியல்

பாரதி


தாடிக்காரன் அவன்
மனைவி செல்லம்மாளின் தோள்மீது
அவனது அன்புக்கரம்
அவன்தான் பாரதி

வியாழன், 6 பிப்ரவரி, 2020

மரங்களின் பெயர்கள்

நேற்றைய தொடர்ச்சி
மரங்களின் பெயர்கள்
       11.வன்னி
       12.விளா
       13.வாழை
       14.மாதுளம்
       15.கடம்பு
       16.மருதாணி
       17.தாரைமரம்
       18.தேத்தாங்கொட்டை
       19.கருவேப்பிலை
       20.சப்போட்டா

புதன், 5 பிப்ரவரி, 2020

மாவட்டங்களும் சிறப்புப் பெயர்களும்

தர்மபுரி - தோட்டப்பயிர் பூமி
திண்டுக்கல் - பூட்டு நகரம்
திருச்சி - மலைக்கோட்டை நகரம்
திருநெல்வேலி - தென்னிந்தியாவின் ஆக்ஸ்போர்டு
திருப்பூர் - தமிழ்நாட்டின் பின்னலாடைத் தலைநகரம்

ஆர்வம்

நம்மிடம் சிறப்பான தனித்திறன்கள் இல்லாவிட்டாலும் ஆர்வம் இருப்பின் எதையும் சாதிக்கலாம்.

கீதை

இழப்புகளைப் பற்றிச் சிந்திக்கும் நேரத்தில்
இருப்பவற்றைத் தக்க வைக்க முயலுங்கள்.

நம்பிக்கை

நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும்
ரோஜாதான் கண்ணில் படும்;
முட்கள் இல்லை.
                            - கவிஞர் டிக்கன்ஸன்.

தோழனின் தோள் மேல்

சுவேதா குமார்
இளநிலை இரண்டாமாண்டு கணிதம்

தந்தையின் அன்பு

சுவேதா குமார்
இளநிலை இரண்டாமாண்டு கணிதம்