செவ்வாய், 21 ஜனவரி, 2020

அன்பு, நட்பு

கண்களில் பூத்த மலர்
கைகளில் மலர்ந்து விரிந்தது
இதயமாகத் தோன்றிய மலர்
இதழ்களில் விரிந்து காணப்பட்டது
கையில் வைத்துக் காத்து விரிவதற்கு வழிகாட்டியது
இதில் சிறந்த பூ அன்பு, நட்பு

ஈ.கன்னிகா
இளங்கலை மூன்றாமாண்டு ஆங்கிலம்

நிலவே

இருண்ட வானத்தில் மின்னிய முகம்
முகம் பார்க்கப் பெண்போலத் தெரிகிறதே
ஆனால் உருவம் இன்றிக் காணப்படுகிறாள்
இந்த வானத்தில் யார்துணையும் இன்றி நிற்கிறாளே
நிலவே உன் துணை நானே

ஈ.கன்னிகா
இளங்கலை மூன்றாமாண்டு ஆங்கிலம்

இன்றைய தினம்

21.01.2020 (செவ்வாய்)
இன்றைய தினம்
            இந்திய விடுதலை போராட்ட வீரர் ராஷ் பிஹாரி போஸ் நினைவு தினம்.
குறுந்தொகை பாடிய பெண்பாற் புலவோர் 
            1.ஆதிமந்தி
            2.ஊன்பித்தை
            3.ஔவையார்
            4.நன்னாகையார்
            5.வெண்பூதியார்
            6.வெள்ளிவீதியார்
இலக்கண நூல்கள்
            1.அவிநயம்
            2.யாப்பருங்கலம்
            3.யாப்பருங்கலக்காரிகை
            4.நேமிநாதம்
            5.வச்சணந்திமாலை
            6.நன்னூல்
            7.நம்பியகப்பொருள்
நற்றிணை குறிக்கும் மன்னர்கள்
            1.அதியமான் அஞ்சி
            2.அழிசி
            3.ஆய் அண்டிரன்
            4.உதியன்
            5.ஓரி
            6.காரி
            7.குட்டுவன்
            8.சேந்தன்
            9.நன்னன்
            10.தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன்.
தன்னம்பிக்கை
         வருங்காலத்தைப் பற்றி வருடங்களாய் யோசிப்பதை விட
         நிகழ்காலத்தைப் பற்றி நிமிடங்கள் சிந்தித்தால் போதும் வாழ்வை
         வென்றிடலாம்..!
இன்றைய வெளிச்சம்
        புத்தகங்கள் நிறைந்த வீடு மலர்கள் நிறைந்த தோட்டம் போன்றது.
        உடலுக்குத் தேகப் பயிற்சிபோல மனதிற்குப் புத்தகங்கள்.

அழகுப் பதுமை

சூரியன் ஒளியைத் தழுவி
உன் நிறத்தை வடிவம் அமைத்தார்
பூவின் இதழ்களைக் கோர்த்து
உன் உடல் வடிவம் கொடுத்தார்
மலரைத் தாங்கும் காம்பைப்போல
விரல்கள் படைத்தார்
மிதக்கும் தாமரையைப்போலப்
பாதம் படைத்தார்
சங்கைப்போல மெல்லிய கழுத்தக் கொடுத்தார்
கருவண்டைப்போல இருவிழிகளைக் கொடுத்தார்
நிலவின் வடிவத்தை எடுத்து உன் முகம் அமைத்தார்
உனக்கு இத்தனை இத்தனை கொடுத்த கடவுள்
நான் உன்னைப் பார்ப்பதற்கு
இருவிழியை மட்டும் கொடுத்தானே

ஈ.கன்னிகா
இளங்கலை மூன்றாமாண்டு ஆங்கிலம்

இன்றைய தினம்

இன்றைய தினம்
20.01.2020 (திங்கள்) 
           நிலாவில் இறங்கிய இரண்டாவது மனிதர் பஸ் ஆல்ட்ரின் பிறந்த தினம்.
அகத்தியரின் மாணவர்கள்  
            1.தொல்காப்பியன்
            2. அதங்கோட்டாசான்
            3.அவிநயன்
            4.கழா அரம்பன்
            5.நந்தத்தன்
            6.சிகண்டி
            7.துராலிங்கன்
            8.வையாப்பிகன்
            9.வாய்பிகன்
            10.பனம்பாரனார்
            11.செம்பூட்சேய்
            12.பெரிய காக்கைப் பாடினி
அப்துல்கலாம்
        பிஞ்சு மனதில் பதியும் நற்கல்வி வாழ்வின் முழுமைக்கும் நல்லுணர்வு   
       என்ற தன்மையின் தாக்கத்தை உருவாக்கும்.
தன்னம்பிக்கை
       யாரிடமும் எதையும் கற்றுக் கொள்ள வெட்கப்படாதே.. கற்பதற்கு
       வெட்கப்பட்டு தலை குனிந்தால் பின் கரையேறுவதற்குத் தலை நிமிரவே
       முடியாது...!
இன்றைய வெளிச்சம்
      இயற்கை என்ற புத்தகத்தின் ஆசிரியர் இறைவன்.

தேர்தல்

"எங்களுக்குள்
ஓர்  ஒப்பந்தம் !
ஐந்து  வருடத்திற்கு
நீங்கள்  ஏமாற்றுங்கள் !
ஐந்து வருடத்திற்கு
ஒரு முறை  நாங்கள்
ஏமாற்றுகிறோம் !
பார்க்கலாம் !
நீங்களா ? நாங்களா ? என்று !"

அப்பன்

அதிகாலையில்  அதிபதியாய்
அந்திமாலையில் அவையகனாய்
அன்றிரவில் நிலா அவனாய்
உன்னை மடி சேர்த்திடுவான்
அன்பு மனம் காட்டிடுவான்
அறிவு குணம் சூட்டிடுவான்
அமைதி வனம் ஆக்கிடுவான்
அய்யன் குறள் கூறிடுவான்
அன்னை மடி சேர்த்திடுவான்
அழாய் என சொல்லிடுவான்
அன்பில் அன்னையையே தோற்கச் செய்வான்
































x

உயிரே

உருவம் இல்லாத உடலுக்கு உயிர் கொடுத்தாய்
உயிர் இன்றி திரிந்த எனக்கு உணர்வுகளைக் கொடுத்தாய்
அருகில் இருந்தபோது உன்னை அறியவில்லை
உன் அருமையை அறிந்த பிறகு
நீ என் அருகில் இல்லை
உன்னை நினைக்க என்னை மறந்தேன்

ஈ.கன்னிகா
இளங்கலை மூன்றாமாண்டு ஆங்கிலம்

சிரிப்பு

பூமியில் விளைந்த பூ ஒன்று
மக்கள் விதை இல்லாமல் பூத்த பூ
செடி கொடியில் விளையாத பூ
காம்பும் இலையும் தீண்டாத பூ
பார்க்கவும் கேட்கவும் மலர்ந்த பூ
உலகில் யாருமே பறிக்க முடியாத பூ
முகத்தில் மலரும் பூ அதுவே சிரிப்பு

ஏறு தழுவல்

முரட்டுத் தோள்கள் கருப்பு நிறத்திலே
மலைபோல் திமில் ஏற்றிச்
சிங்கம்போல் பாய்ந்து வரும்
உன்னோடு வாடி வாசலில் நின்று
ஏறுதழுவி விளையாடி
இரும்புக்கரம் கொண்டு அடக்கி
உன்னை வீழ்த்தியதால்
நான் வீரன் ஆகவில்லை காளையே
உன்னைத் தோற்க வைத்தாலும்
வெற்றிபெறச் செய்தாலும்
இந்நாட்டில் சிறந்த வீரன் நீயே

ஈ.கன்னிகா
இளங்கலை மூன்றாமாண்டு ஆங்கிலம்

அன்பைப் பெற்றேன்

தாயின் உருவத்தைப் பெற்றேன்
தந்தையின் குணத்தைப் பெற்றேன்
தம்பியின் ஆற்றல் பெற்றேன்
ஆசிரியரிடம் அறிவைப் பெற்றேன்
தோழிகளிடம் நட்பைப் பெற்றேன்
இறைவனிடம் அருளைப் பெற்றேன்
இவர்கள் அனைவரிடத்திலும்
தூய அன்பைப் பெற்றேன்

ஈ.கன்னிகா
இளங்கலை மூன்றாமாண்டு ஆங்கிலம்

நிழல் ஒளிர்ந்தது

வார்த்தை இன்றிப் பாடிய குயில்
வாடை இன்றிப் பூத்த மலர்
ஓடை இன்றிப் பாய்ந்த நீர்
உருவம் இன்றிப் பார்த்த நிழல்
உன் முகமாய் ஒளிர்ந்தது

ஈ.கன்னிகா
இளங்கலை மூன்றாமாண்டு ஆங்கிலம்

காட்டில் திருவிழா

மயில் தோகைவிரித்து நடனம் ஆடியது
மான் காடெங்கும் துள்ளி விளையாடியது
கரடி தேனைச் சேகரித்து வைத்தது
குதிரை அணியாக வலம் வந்தது
குரங்கு தோரணம் கட்டி வைத்தது
முயல் மலர்களைப் பறித்து வந்தது
யானை தண்ணீர் கொண்டு வந்தது
அணில் பழங்கள் சேமித்து வைத்தது
குருவிகள் இனிய குரலில் கச்சேரி செய்தன
பறவைகள் அழைப்பிதழ்களை அனைவருக்கும் கொடுத்தன
இவர்கள் எல்லோரும் இணைந்து
காட்டு ராஜா சிங்கத்தின் பிறந்தநாளைக் கொண்டாடினர்

ஈ.கன்னிகா
இளங்கலை மூன்றாமாண்டு ஆங்கிலம்