வெள்ளி, 30 மார்ச், 2018

கனவுக்கு உயிர் கொடுப்பேன். ..



பசுமையான வயல்வெளிகள்..
பாட்டி தாத்தா சொன்ன கதைகள்..
பள்ளிக்கு போக மறுத்த நாட்கள்..
குச்சிமிட்டாய்க்கும் பஞ்சுமிட்டாய்க்கும் அழுந்த நாட்கள்..
கோயில் கடைகளில் அடம்பிடித்து வாங்கிய பொருட்கள்.
அப்பாகிட்ட அடி வாங்கின நாட்கள்..
அம்மா சமைக்கும் போது ருசித்த நாட்கள்..
ஊர் பெருசுங்க பேசும் வதந்திகள்..
பேருந்தில்  பயணச்சீட்டு  வாங்காமல் சென்ற நாட்கள்..
நாட்குறிப்பேட்டில் மட்டும் புதைந்து போன விவரம்  அறியா காதல் கதைகள்..
நண்பர்களுடன் சமைத்த கூட்டாஞ்சோறு..
பம்பு செட்டில் நீராடிய நாட்கள்..
கில்லி விளையாடிய நாட்கள்..
பட்டம் செய்து தர சொல்லி போட்டி போட்டு விளையாடிய நாட்கள்..
டாம் & ஜெர்ரி பாப்பாய் பார்த்து பொழுது போக்கிய நாட்கள்..பள்ளியில் சென்ற சுற்றுலா பயணங்கள் ..
அப்பா சட்டையில் காசு திருடி உண்டியலில் சேர்த்தது..
நண்பர்களுடன் வீதியில் போட்ட ஆட்டம் பாட்டங்கள்..
பிறந்தநாள் என்றால் புது ஆடையில் ஒரு நாள் கூத்து..
ஒரு ரூபாய்க்கு வாடகை சைக்கிள் வாங்கி ஊரை சுற்றிய நேரங்கள்..பள்ளி தோழனின் மரணம்...
அப்துல் கலாம் வருகையை எதிர்பார்த்து ரோட்டில் காத்திருந்த நேரம்..
வானில் போகும் வான ஊர்திக்கு கை வீசி டாட்டா காட்டிய நேரங்கள்..
அன்றைய இரயில் நிலையம் இன்றைய விமானம் நிலையம் போன்ற பிரமிப்பு..
விருந்தினர் வருகையால்  வீட்டில் சமைக்கும் கறிச்சோறு..
அம்மை போட்டால் பள்ளிக்கு விடுமுறை..
மழை வந்தால் பேப்பரில் விட்ட டைடானிக் கப்பல்..
கண்களை மூடியே பார்த்த பேய் படங்கள்..
இரவு நேரங்களில் பாத்ரூம் போக பயந்து படுகையை நனைத்த நாட்கள். .
பள்ளி ஆண்டுவிழாவில் ஆடிய முதல் நடனம்  அரங்கேற்றிய நாடகம்..
டிவி பார்க்கையில் இதுக்கு பின்னால் மனிதர்கள்  உள்ளனரா என்று பார்த்த நாட்கள்..
விக்கிரமாதித்தன் வேதாளம் தொடர்கதைகள்..
சிந்துபாத் கதைகள்... சாலமன் பாப்பையா தலைமையில் நடந்த பட்டிமன்றங்களே ஞாயிறு தோறும் வீட்டில் பார்க்கப்படும்...
டாப் டென் சினிமா.. டாப் டென் பாடல்கள்..
ஆண் (ம) பெண் நண்பர்களுடன் சேர்ந்து சென்ற திரையரங்குகள்..
விடுமுறைக்கு ஊருக்கு சென்றால் திரும்ப வரவே பிடிக்காத நாட்கள்..
பட்டாசு வெடிக்கையில் ஓட்டையான புது துணி..
பொங்கலுக்கு ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி டிவியில் ஒளிபரப்பாகும்  நேரங்கள். .
பெரியவள் ஆனதும் பூப்பு நன்னீராட்டு விழா அத்தை மடியில் கொண்டாடிய நேரங்கள். .
வீட்டில் பாம்பு வந்ததும் பக்கத்து வீட்டு அண்ணாவை அழைத்து வந்து பாம்பை அடித்த நாட்கள்..
எதற்கு நடுகிறோம் என்று தெரியாமல் நட்ட மரங்கள். .
டியுசன் டீச்சர் அடித்து சொல்லிக் கொடுத்த பாடங்கள்..
அரசியல் பேச்சு பேசிய டீக்கடை  அண்ணாக்கள்..
ஓட்டுக்கு பிரியாணி காசு வாங்கி ஓட்டு போட போனவர்கள்..
கணக்கு வாத்தியாரை பார்த்தாலே கால் நடுங்கும்..
ஆலமரத்தில் ஆடிய ஊஞ்சல். .
புளிக்கொட்டையில் ஆடிய பல்லாங்குழி.. ஐந்தாங்கல் பாம்பு கரம் தாயம் ஆடியது..
மாமா கூட வண்டியில் போன பயணங்கள். .
குமரியை நடுங்க வைத்த சுனாமி. .
கும்பகோணத்தில் கருகிய குழந்தைகள்..
சுதந்திர தின விழாவில் மிட்டாய் வாங்கவே சென்ற நாட்கள்..வாட்ச் கட்டிய முதல் நாள்  மணி பார்க்க கூட தெரியாத நாட்கள். .
இப்படி ஓடிக் கொண்டு விளையாடிய நாட்களில் திடீர் திருப்பங்கள் நண்பர்களை பிரிந்து சென்று கல்லூரியில் சேர்ந்த நாட்கள்..
நிமிர்ந்து பார்க்கையில் ஒரு தனி மனிதியாக இனி எதிர்காலத்தின் கனவுகளோடு நான்..
திரும்பி பார்த்தேன் அத்தனையும் கனவு போல வந்து சென்றன..
போட்டிகள் நிறைந்த உலகம்..
முகமூடியை அணிந்த மனிதர்கள். .
ஊழல் இலஞ்சம்  உள்ள அரசு மற்றும் அரசியல்..
பணத்தை தேடி ஓடும் ஒரு கூட்டம். .
படிப்பை விற்கும் ஒரு கூட்டம்..
வேலை வாய்ப்பு தேடும் ஒரு கூட்டம். .
உணவு தேடும்  ஒரு கூட்டம். .
இப்படி பல கூட்டங்களுக்கு நடுவில் கல்லூரி படிப்பின் இறுதியில் நான்.  வாழ்க்கையின் உண்மையான காரணம் தேடும் நோக்கில் நான் ..கண்ணில் தைரியத்துடன் மனதில் நம்பிக்கையுடன் அடுத்த கட்டத்துக்கு பயணிக்க  உள்ளேன்...

ஒன்றுமட்டும் என் நெஞ்சில் ஒலித்துக் கொண்டு இருக்கிறது...

வீழ்வேன் என்று நினைத்தாயோ...!!!

ஞாயிறு, 25 பிப்ரவரி, 2018

சில புகைப்படங்களுக்கு விரிவுரை தேவையில்லை

சில புகைப்படங்களுக்கு விரிவுரை தேவையில்லை

 நாம் அனைவரும் சரியான தொழில்நுட்பங்களை பயண்படுத்துகிறோமா என்பதைத் தாண்டி அதனை சரியான வகையில் பயண்படுத்துகிறோமா?என்பதில் அடங்கியுள்ளது புதிர். இளஞர்கள் அனைவருக்கு நாட்டை அடுத்த கட்டத்திற்க்கு எடுத்து செல்லும் பொறுப்பு உண்டு.ஆகையால், நாம் நமக்கு கிடைக்கப்பட்ட அனைத்தையும் சரியான வகையில் பயண்படுத்தி வாழ்வில் முன்னேற வேண்டும்.

வரலாற்றில் மிக சோகமான வாக்கியங்கள் எவை?

                வரலாற்றில் மிக சோகமான வாக்கியங்கள் எவை?

``என் மகனை என்னால் திரும்ப காண இயலுமா?”
                -போருக்கு சென்ற தனது மகனை எதிர்பார்த்து தாய் கூறிய வார்த்தைகள்.

``இன்றிரவு நான் பட்டினியாகத்தான் உரங்க வேண்டும்”
                -ஒரு விவசாயியின் குமுரல்.


``எனது குடும்பம் இன்றும் பட்டினியாகதான் இருப்பர்”

                -ரிக்ஷா தள்ளுபவனிம் மனக்கனக்கு.
                    

ரஜினிகாந்தின் தந்தை(கல்யாணசுந்தம்)

                                ரஜினிகாந்தின் தந்தை(கல்யாணசுந்தம்)

நன்கொடை என்ற சொல்லிற்க்கு முழூ விலக்கம் கொடுத்தவர். தமிழகத்தில் மேலக்கருவெங்குலம் என்ற கிராமத்தில்  10 மே 1940இல் பிறந்தார். 30 வருடமாக நூலகராக பணியாற்றினார்.இவரது மொத்த சம்பளத்தையும் ஏழைகளுக்கு நன்கொடையாக கொடுத்தவர்.சில நேரங்களில் ஒணவகங்களில் சர்வராக பணியாற்றியும் இவரது தேவைகளை பூர்த்தி செய்து கொள்தும் உண்டு. இவருக்கு உதவித் தொகையாக வந்த 10இலட்சம் ரூ பணத்தையும் ஆதறவற்றவர்களுக்கே தந்தார். இது மட்டும் அல்ல இந்தியா-சீனா  போரின்போது, இவர் மெட்ராஸ் பல்கலைக் கழகத்தில் பயிண்று வந்தார் அப்போது அவர் இந்திய பாதுகாப்புத் துறைக்கு உதவி செய்வதற்க்காக தன்னிடம் அப்பொழுது இறுந்த 65கிராம் தங்க சங்கிளியை அடமானம் வைத்து உதவினார்.

உலகிலேயே தன் வாழ்நாள் வருமானம் முழுவதையும் நன்கொடைக்காகவே செலவிட்ட முதல் மனிதர் இவர்தான்.
இவரது சேவையை பாராட்டி (UNO) இவரை 20ஆம் நூற்றாண்டின் தலைசிறந்த மனிதருள் ஒருவராய் அறிவித்தது.

ஒரு அமெரிக்க நிறுவனமும் இவரை``மேன் ஆப் மில்லினம்” என்ற பரிசு கொடுத்து கௌரவப் படுத்தியது. மேலும் 30கோடி இவரது செயலை பாராட்டி இவருக்கு நன்கொடையாக கொடுத்தார் அதனையும் வழக்கம்போல் இல்லாதவர்களுக்கு கொடுத்து நன்கொடை என்ற சொல்லுக்கு இலக்கணம் வகுத்தார். இவரை தனது தந்தையாத அழகாக தத்தெடுத்துக்கொண்டு அவருடன் செயல்படுவதாக கூறுகின்றனர். இவர் திருமணமும் செய்து கொள்ளாமல் வாழ்நாள் முழுவதும் இந்த சமுதாயத்திற்க்கு தொண்டாற்றுவதே தன் கடமையாக கொண்டுள்ளார்.

மெதுவாக பயணப்படுவதில் எந்த தவரும் இல்லை

                                மெதுவாக பயணப்படுவதில் எந்த தவரும் இல்லை


பன்முகத்திறன் படைத்த தன்மையாளராக அனைவராலும், அனைத்து நேரங்களிலும் செயல்பட இயலது. ஆனால் நம்மிடம் என்ன குறை என்று விரைவில் கண்டறிந்து அதனை சீர்திருத்த நாள்தோறும் சிறு சிறு முயற்ச்சி செய்வதில் தவறில்லை. ``நாம் எவ்வளவு மெதுவாக செல்கிறோம் என்பது முக்கியமல்ல, நம் பாதையில் முன்னேறி செல்கிறோமா என்பதுதான் முக்கியம்.”

பகட்டான பக்க பகிர்வ்வுகலால் பயண் இல்லை

                                பகட்டான பக்க பகிர்வ்வுகலால் பயண் இல்லை

ஏதோ எங்கோ இருப்பவர்களுக்கு நாம் நமது சமூக வலைதலங்களில் பதிவு செய்யும் விருப்பமோ, கருத்தோ, பக்க பகிர்வுகளோ எந்த விதத்திலும் உதவாது. இந்த படத்தைப் பார்த்து விருப்பம் தெரிவித்துவிட்டு நிஜ வாழ்வில் அவர்களை கடந்து செல்லும் போது கண்டும் காணாமல் கூட போவது எப்படி பட்ட செயல் என்றால், படித்து பட்டம் பெற்றும் சிந்தித்து செயல்படாது இருப்பதற்க்கு சமம்.


நெகிழவைக்கும் சிறுவனது எண்ணம் நமக்கு வேண்டும்

                நெகிழவைக்கும் சிறுவனது எண்ணம் நமக்கு வேண்டும்

இந்த சிறுவனின் நிலையை வலைதளங்களின் வழியாக அறிந்த ஒரு வெளியாட்டு பெண், பல நிறுவணங்களின் மூலம் நிதி திரட்டி இந்தியாவின் சிறந்த முதுகு தண்டு நிபுணர் டாக்டர். இராஜகோபாலன் கிருஷ்னன் என்பவர் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த சிறுவன் பட்டிப்பிலும் மிகுந்த ஆர்வம் உடையவனாக இருந்தது இந்த புகைப்படத்தில் தென்படுகிறது.


தன் 13வயதில் சில நுரையீரல் காரணமாக அந்த சிறுவன் மன்னைவிட்டு நீங்கினான்.
ஆனால் அவனது பெற்றோற் அவனை குறிப்பிடுகையில், தான் வாழ்ந்த காலத்தில் அவன் எதை பற்றியும் கவலை படாமல், எந்த குறையும் கூறாமல், மிகவும் திருப்தியுடனும் சந்தோஷத்துடனும், உற்ச்சாகத்துடனும் வாழ்ந்தான் என்றனர். நாம் நமது வாழ்நாளில் எவ்வளவோ காரணங்கள் கூறி எத்தனையோ காரியங்களை தள்ளி போடுகிறோம், ஆனால் தான் வாழ்ந்த அந்த காலங்களில் மற்றவர்க்கு அவர் கற்றுத்தந்த பாடம் மிகவும் பெரிது.

காலம்

நமது கடந்த காலத்தை திரும்ப வாங்கும் அளவிற்க்கு யாரும் பணக்காரர்கள் இல்லை.                      -ஆஸ்கர் வைல்ட்


எதுவுமே நமக்கு அருகாமையில் இருக்கும்போது அதன் அருமை தெரியாது. அதே போன்று தான் நாம் செலவிடும்போதும், வீணலிக்கும்போதும் நமக்கு அதன் அருமை தெரியாது, எப்பொழுது நாம் நமது வாழ்வின் ஒரு கட்டத்தில் நின்று இதுவரை எத்துனை செயல்களை சாதித்துள்ளோம்?எவர் எவர்க்கெல்லம் நன்மை செய்துள்ளோம்?நமக்காகவோ? நம் மொழிக்காகவோ?நம்மை சுற்றி வாழும் எளியவர்க்கோ என்றாவது பயண்பெரும் வகையில் எதாவது செய்ததுண்டா என்று யோசிக்கும் போது காலத்தின் அருமை நமக்கு புரியும்.
எவன் ஒருவன் காலத்தை சரியாக பயண்படுத்துகிறானோ? அவனே வாழ்வில் வெற்றி பெருவான்.            -முனைவர்.இரா.குணசீலண்


தமிழ்நாட்டை சேர்ந்த உலக பிரபலமான ஆலுமைகளில் சிலர் உங்கள் பார்வைக்காக;

தமிழ்நாட்டை சேர்ந்த உலக பிரபலமான ஆலுமைகளில் சிலர் உங்கள் பார்வைக்காக;
கிரிகெட்டில் பல  கொடி மக்களின் மனதை பந்தாடிய வீரர்களான முரளி விஜய், ரவி அஷ்வின், தினேஷ் கார்த்திக், லக்ஷ்மிபதி பாலஜி மற்றும் கிருஷ் ஸ்ரீகாந்.


விஸ்வனாதன் ஆனந்தன். சதுரங்கத்தில் தன் திறமையால் இந்த உலகத்தையே வியப்பில் ஆழ்த்தியவர்.


மகேஷ் பூபதி; இவர் வரிப்பந்தில் உலகறிந்த பிரபலமாவார்.


சர்.சி.வி. இராமான்; தனது ``இராமன் இஃபேக்ட்(விளைவு) என்ற கண்டுபிடிப்பிற்க்கு இயற்பியலில் நோபில் பரிசு பெற்றவர்.


சுந்தர் பிச்சை; உலகெங்கும் பயண்படுத்தும் கூகுள் தேடுகருவியின் நிறுவாகி.


இந்திரா நோயி; பேப்ஸி மற்றும் கோக் நிறுவணத்தின் நிறுவணர் ஒரு சென்னை பெண்மனி மேலும் இவர் ICC நிறுவணத்தின் முதல் பெண் தனிமுறையான அவைத்தலைவராவார்.


சிவ ஜயாதுரை; நாம் இன்று அலுவலகம் சார்ந்து தகவல்தொடர்புக்கு பயண்படுத்தும் இ-மேயிலை கண்டறிந்தவர்.


சிவ் நாடார்; HCL நிறுவணத்தின் நிறுவனர் மற்றும் தலையவராவார்.



வினு சீனிவாசன்; சுந்தரம் கிலேடன் நிறுவணம் மற்றும் TVS (இரு சக்கர வாகணங்கள் தயாரிப்பில் இந்தியாவின் முன்றாம் பெரும் நிறுவனம்) அமைப்பின் தலைவராவார்.