ஞாயிறு, 28 ஜனவரி, 2018

மக்களின் வேற்றுமை

                                                                மக்களின் வேற்றுமை
யூ-டியூப் என்று சொல்லப்படும் கானொலி தளத்தில் சுற்றிக்கொண்டிருக்கையில், ஒரு சமூக சோதனை(SOCIAL EXPERIMENT) என்று சொல்லப்படும் கானொலியை பார்த்துக்கொண்டிருந்தேன். அந்த கானொலி வெளிநாட்டவரால் பதிவு செய்ய்ப்பட்டது. அதில் தனி மனிதன் ஒருவன் என் நன்பனிற்க்கு அவசர உதவி தேவைபடுகிறது என்று வீடு வீடாக அழைந்து கேட்கிறான் அது கிருத்துமஸ் விழா நாளும் கூட எனினும் மக்கள் இல்லை, எங்கள் வீட்டில் பிள்ளைகள் உள்ளனர், உங்களை யார் என்று தெரியாது, நாங்கள் அன்னியற்களை அனுமதிக்க மாட்டோம், என்று பர்பல காரணங்கள் கூறி புரகனித்தனர், இருதியில் அந்த வகை உதவியையே பெண் ஒருவரை வைத்து நடத்தினர்.அப்பொழுது சிலர் முன் வந்தனர்.


அதே சமயம் எங்கள் வீட்டில் ஒரு தாயார் கதவை தட்டினார். ``எனது மகள் இங்கே இசை பயிற்ச்சிக்கு வந்திருக்கிறாள், அங்கு பூச்சிகளின் தொல்லை அதிகமாக உள்ளது, நான் இந்த தின்னையில் அமரலாமா?’’ என்றார். நான் உடனடியாக அவரை அனுமதித்தேன்.சில வற்றை நமது முன்னோற்கள் அறிந்து அதனை நமது பழக்கமாக கொண்டுள்ளனர். இந்த தின்னை, உதவும் மனப்பான்மை இவை அனைத்தும் நமது கலாச்சாரத்தில் சொல்லாமல் சொல்லப்பட்ட மிகப்பெரிய வாழ்க்கை பாடங்கள், மற்றும் அவை நமக்கு போதிக்கப்பட்ட ஒழுக்க நெரிகள். ``தீயன செய்தவனுக்கும் நல்லதே செய்” என்று கூறி வளர்த்த என் அன்னை தமிழுக்கு நெஞ்சார்ந்த நன்றி. ஒவ்வொறு நொடியும் நான் ஒரு தமிழச்சியாக பிறந்ததில் பெருமை கொள்கிறேன்.

பேனா

                                                                                பேனா

சிலர் எழுதிய பேனா,
இன்னும் கணக்கு பார்க்கிறது
சிலர் எழுதிய பேனா,
பல சரித்திரம் படைக்கிறது!!!

(இதை நீங்கள் கவிதையாக பாவித்துக்கொள்ளலாம்) கரு இதுதான்; சிலர் பயண்படுத்திய பேனாக்கள் இன்னும் அவர்கள் வீட்டுக் கதவிற்க்குள்ளே கிடக்கும், ஆனால், சிலர் பயண்படுத்திய பேனாக்கள் மட்டுமே அனைவராலும் காக்கப்படும். நாம் சாமானியனாக வாழ்வதும் சரித்திரம் படைப்பதும் நம் கையில் உள்ளது.

நேரம்

                                                                                நேரம்

வாழ்வில் இதை சரியாக பயண்படுத்தியவர் எவரும் தோற்றதில்லை. பெளும்பாலான மக்கள் எனக்கு இது போதவில்லை இது சரிவர வில்லை, என்னிடம் இது இல்லை என்று சாக்குகள் கூறியே காலத்தை களிக்கின்றனர்.
நம்மிடம் இல்லாததை நினைத்து வருந்துவதை காட்டிலும் இருக்கும் பொன்னான நேரங்களை சரியான முறையில் பயண்படுத்தினால், வாழ்க்கை அற்த்தமுல்லனவாய் அமையும். வாழ்வில் எந்த சூழலிலும் பிறறை பார்த்தோ, பின்னே செல்லவும் கூடாது. எல்லாரும் எதோ ஒரு வகையில் தனிதுவம் வாய்ந்தவராக தான் இருக்கிறோம். அதனை புரிந்து செயல்பட்டால் வெற்றி கிடைக்கும். வெற்றி என்பது வியர்வை சிந்தி, உழைத்து, அவமானங்களை சந்தித்து, போராடி, கிடைக்கும்போதுதான் அதனை ஒருவனால் முழுமையாக புரிந்துகொள்ள முடியும். வலிகளில் சிக்கித் தவித்வனுக்கே உழைப்பின் வெற்றியை முழுமையா ருசிக்க முடியும்.

நான் வேண்டாம்!!

                                                                நான் வேண்டாம்!!

இந்த உலகில் நாம் அனைவரும் தோன்றியதற்க்கு நிச்சையமாக ஒரு காரணம் இருக்கும். அதனை நாம் சாவதற்க்கு முன்பு கண்டறிந்து அந்த துறையில் நாம் நம்மை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
இருங்கள், வளர்த்த பின்பு, அந்த துறையில் தலைசிறந்த மனிதராக மாறிய பிறகு, நம்மை வளர்த்த இந்த சமூகத்திற்க்கு திரும்ப செய்ய நாம் மறந்து விடுகிறோம். இந்த உலகிற்க்கு வந்துள்ளொம், அதற்க்காக கட்டாயம் எதாவது செய்துவிட்டுதான் செல்லவேண்டும். நாம், நம் வேலை, நம் குடும்பம், என்று வாழ்பவர்கள் தேவையில்லை இந்த தமிழ் சமுதாயத்திற்க்கு. நாம், நமது மக்கள், நமக்கு சஞ்சலம் அதனை சரிசெய்யும் கடம் நாம் அனைவருக்குமே உண்டு என்று நமது ஒற்றுமை மனப்பான்மையுடன் இறங்கி செய்தால் இந்த சமுதாயத்தில் நிறைய பல இன்னல்களுக்கு என்றோ தீர்வு கிடைத்திருக்கும்.

நான் எப்படி எனக்கு பாதுகாப்பு இல்லை என்ற எண்ணத்திலிருந்து வெளிவருவேன்?

நான் எப்படி எனக்கு பாதுகாப்பு இல்லை என்ற எண்ணத்திலிருந்து வெளிவருவேன்?


இந்த நாட்டில் நாம் விரும்போது யாரையும் நாம் அழைத்துவரவில்லை, பாதுகாப்பு என்பது ஒரு வேலி அதற்க்குள் இருக்கும் வரை நாம், நமது குடும்பம், நமது வாழ்க்கை, நமது முன்னேற்றம், என்று பலரால் சுயநலவாதிகலாக்கப்படுவோம். ஆனால், என்று என்னை பார்த்துக்கொள்ள எனக்கு தெரியும்!!!! நான் இந்த உலகில் என்னைபோன்று வாழ வந்தவர்களுக்கும், இந்த சமூதாயத்திற்க்கும் கடமைபட்டிருக்கறேன் என்ற உண்மையை உணர்ந்து செயல்படுவோர் வாழ்வில் எவ்வளவு பெரிய இன்னல்கள் வந்தாலும், துச்சமென மதித்து செல்வர்.

மாற்றம் வேண்டும்!!!

                                                        மாற்றம் வேண்டும்!!!


நாம் எப்போழுது அடுக்கு மொழிகளையும், பொய்யான வாக்குருதிகளையும், கண் கவரும் காட்சிகளையும், பொய்யான பாசங்களையும், பொய்யான மனிர்களையும், தற்காளிக இன்பத்தையும் நம்பாமல் இருக்கிறோமோ அப்பொழுதுதான் நாம் தெளிவாக செயல்பட இயலும். இன்னும் எத்தனை காலம் விடியல் பிறக்கும் என்று காத்துக்கொண்டே இருப்போமோ? இன்னும் எத்தனை காலம் இவர் நம்மை மாற்றுவாரா?அவர் நமக்கு உதவுவாரா இவர் நமக்கு உதவுவாரா?இவர்களின் பார்வை நம் மீது விழாதா? அவர் நமக்கு இரக்கம் காட்ட மாட்டார்? என்று பிறரை எதிர்ப்பார்த்து, எதிர்த்து ஏமாந்து போவதே அதிகமாயிற்று. தன்னம்பிக்கையுடனும், நம்மை நம்மால் மட்டுமே திருத்த இயலும் அந்த ஆற்றல் நமக்குள்ளே புதைந்து கிடக்கிறது என்று கண்டுகொள்கிறோமோ!!! அன்று நல்ல ஒரு சமுதாயம் பிறக்கும்.

தமிழகத்தை பற்றி சில புள்ளி விவரங்கள்

                                தமிழகத்தை பற்றி சில புள்ளி விவரங்கள்
1.இந்தியாவில் மகாராஷ்ராவை இடுத்து பெரிய ஒழுக்கமைவு(economy) கொண்ட மாநிலம்.
2.மனிதவள மேலான்மை பொருளடக்க அட்டவனையில் 6ஆம் இடம் பிடித்துள்ளது தமிழகம்.

3.81%படித்தவர்களை கொண்ட மாநிலம்.
4. ஐ.டி.வணிகத்திலும், BPO சேவைகளிலும் சென்னை மாநகரம் தான் இந்தியாவிலேயே இரண்டாம் இடம் வகிக்கிறது.

5.கமுதி, என்னும் தமிழகத்தை சேர்ந்த பஞ்சாயதில் 648மெகாவாட்ஸ் சோலார் சக்தியுடன் 150,000ஆயிரம் வீடுகளுக்கு வழங்கும் அளவிற்க்கு தயாரிக்கின்றனர்.

சோம்பல் கூடாது!

                                                           சோம்பல் கூடாது!

வாழ்வில் சாதிக்க வேண்டும் என்கின்ற வெறி அனைவருக்குமே உண்டு, ஆனால் அந்த சாதணையை எப்படி நிகழ்த வேண்டும் என்று புரியாமலேயே பலர் நாட்களை வீணாக களித்து வருகின்றனர். எவன் ஒருவன் வெற்றி பெற நினைக்கிறானோ, அவன் நிச்சயம் கடின உழைபாலியாகவும் நல்ல நூல் அறிவு பெற்றவனுமாய் இருக்க வேட்ண்டும். தன்னையும் தன்னை சுற்றி நடக்கும் நிகழ்வுகளையும் பற்றி நல்லறிவு கொண்டவாய் இருக்க வேண்டும். மனிதனாய் பிறந்தாளா ஏதாவது சாதித்தே ஆகவேண்டும். 

தம்மை சுற்றி நடக்கும் பிரச்சணைகளைப்ப பற்றி கவலை படுபவனாய் இருக்க வேண்டும், வருமையில் வாடுபவர்களைக் கண்டு வருந்தி அவர்களுக்கு தன்னால் இயன்ற உதவியை செய்வனாய் இருக்க வேண்டும். அடுத்தவர் பேச்சிர்க்கு காது கொடுக்காமல், நியாமான காரியங்களில் யார் தடுத்தாலும் ஈடுபட்டு வெற்றி அடைய வேண்டும். தோல்விகளை கண்டு துவண்டு போக கூடாது, தன்னை தானே ஊக்குவித்துக்கொண்டு, வாழ்வில் முன்னேற்ற பாதையை நோக்கி மட்டுமே செல்ல வேண்டும்.

சேஞ் யூவர் ஸ்ராடஜி

                                                சேஞ் யூவர் ஸ்ராடஜி
ஒரு நாள் கண் தெரியாத மனிதர் ஒருவர் வளாகத்திலே அமர்ந்துகொண்டு யாசம் செய்துகொண்டு இருந்தார். பின்பு, அங்கு வழியில் கடந்து சென்ற மனிதிரில் ஒருவர் அங்கு வந்து அவர்முன் நின்று அவரது தட்டில் இருக்கும் சில சில்லரைகளை பார்த்தார். அவர் வந்து நின்றதை இந்த கண் தெரியாத யாசகரும் கவணித்தார். அவர் வைத்திருந்த அறிவிப்பு பலகையை எடுத்து சிறு மாற்றம் செய்துவிட்டு சென்றார்.

     சில நேரங்களில் அவர் வைத்திருந்த தட்டில் சில்லரைகள் அதிகரிக்க தொடங்கின. மாலை நேரம் போல் அந்த அறிவிப்பு பலகையை மாற்றி அமைத்த அதே நபர் வந்தார். அவரது கால்களை தொட்டு யாசகர் அவர்தான் காலை தனது பலகையை மாற்றினார், அதற்க்கு பின்பே தனது தட்டில் சில்லரை அதிகறித்தது என்பதை தெரிந்து அவர் என்ன எழுதினார் என்று கேட்டார். அவர் அதற்க்கு``என்று நல்ல இளவெனில் காலை, ஆனால் என்னால் அதை பார்க்க இயலவில்லை”TODAY IS SPRING AND I CANNOT SEE IT என்றார்.

                                       தரவு(short stories குருஞ்செயலி)


ஒற்றுமையின் வேற்றுமை உணர்த்தும் வாக்கியங்கள்;

ஒற்றுமையின் வேற்றுமை உணர்த்தும் வாக்கியங்கள்;

சச்சின் டென்டுள்கள் படத்தின் வசனம் நம்மை சிந்திக்க வைக்கிறது?

(நீங்கள் அமெரிக்காவிற்க்கு சென்றால், அமெரிக்கர்களை சந்திக்கலாம், ஜெர்மெனிக்கு சென்றால் ஜெர்மானியர்களை சந்திக்களாம், ஃப்ரான்ஸிர்க்கு சென்றால், ஃபிரென்ச்சுகாரர்களை சந்திக்கலாம்,இங்கிலாந்திற்க்கு சென்றால் இங்கிலிஷ்காரர்களை சந்திக்கலாம். ஆனால், இந்தியாவிற்க்கு வந்தால் மட்டும் தான் நீங்கள் மராத்தியர்கள், குஜராத்தியர்களையும், பஞ்சாபியர்களையும், மலையாளிகளையும், சந்திக்க நேரிடும். இந்தியர்களை நீங்கள் பாக்கிஸ்தானிற்க்கும் இந்தியாவிற்க்கும் கிரிகெட் விளையாடும்போது மட்டுமே பார்க்கலாம்.

சிந்திக்கத்தக்க புகைப்படங்கள்;

                    சிந்திக்கத்தக்க புகைப்படங்கள்;
1.   நாட்டுப்பற்றைப் பற்றி பேசுகிறோம், பாடுகிறோம்! எனினும்? செயல்களில் யாரும் பெரிதாக எடுத்துக்கொள்வது இல்லை போல?


2.   இன்னும் பல இடங்களில் பெண் சிசு கொளை நடக்கிறது. ஆனால் அதே இடங்களில் பெண்களையே மருமகளாக வர வரண் தேடுகிளார்கள்.





ஒரு இலக்கோடு வாழு!

                                                                ஒரு இலக்கோடு வாழு!


இலக்கு இல்லாத வாழ்க்கை புத்தகம் இல்லாத நூலகம் போல், அது நமக்கும் பயணளிக்காது பிறருக்கும் பயணளிக்காது. ஒரு இலக்கை வைப்பது கூட எளியது, ஆனால் அதனை நோக்கியே சோர்வடையாமல் பயணப்படுவது மிகக் கடினம். நம் இலக்குகள் நமக்கு மட்டும் பயண் தரும் வகையில் இருக்கக் கூடாது.நாம் அதனை அடையும்போது நமக்கும் நமது சமூகத்திற்கும் பயணளிக்க வேண்டும. எவன் ஒருவன் தன்னையும் தன்னை சுற்றி இருப்பவர்களையும் பற்றி சிந்திக்கிறானோ?அவனால் தான் ஒரு உபயோகமான வாழ்க்கையை வாழ முடியும். அப்பொழுதான் நாம் இம்மண்னை விட்டு நீங்கினாலும் நாம் செய்த செயல்களால் பிற சந்ததியனரால் பேசப்படும். எல்லோரையும் பற்றி இந்த உலகம் போசும் ஆனால், அவர்களை எந்த வகையில் நம்மை பற்றி பேச வைக்கிறோம் என்பதிலே அற்த்தம் உள்ளது. ஒருவர் நம்மை இகழ்வதற்கும், புகழ்வதற்க்கும் முழூ பொறுப்பு நாம் தான்.

எவை கடினமானவை?

                                எவை கடினமானவை?
1.பணக்காரர்கள் ஏழைகளை கீழே குனிந்து பார்ப்பது கடினம்.

2.வாழ்வில் உழைத்து முன்னேறி, அந்த நிலையில் நிற்ப்பது கடினம்.
3.சக போட்டியாளரின் வெற்றியை மனநிறைவுடன் பாராட்டுவது கடினம்.
4.நமது இலக்கை கவனச்சிரல் இல்லாமல் ஒரு வழியில் செலுத்துவது கடினம்.
5.அடுத்தவரின் குறையை,நிறையை பற்றி பேசாமல் இருப்பது.
6.உண்மையை கண்டறிவது கடினம்.
7.இரக்க மானப்பான்மையுடன் வாழ்வது கடின்னம்.
8.பிறரை தடுக்கி விழும்போது தட்டிக்கொடுத்து மேலே தூக்க முன்வருவது கடினம்.
9.சமூக அவலங்கள் கண்டும் காணாமல் இருப்பது கடினம்

10.மனிதன் பல நேரங்களில் மனிதனாய் இருப்பதே கடினம்.