ஞாயிறு, 28 ஜனவரி, 2018

மக்களின் வேற்றுமை

                                                                மக்களின் வேற்றுமை
யூ-டியூப் என்று சொல்லப்படும் கானொலி தளத்தில் சுற்றிக்கொண்டிருக்கையில், ஒரு சமூக சோதனை(SOCIAL EXPERIMENT) என்று சொல்லப்படும் கானொலியை பார்த்துக்கொண்டிருந்தேன். அந்த கானொலி வெளிநாட்டவரால் பதிவு செய்ய்ப்பட்டது. அதில் தனி மனிதன் ஒருவன் என் நன்பனிற்க்கு அவசர உதவி தேவைபடுகிறது என்று வீடு வீடாக அழைந்து கேட்கிறான் அது கிருத்துமஸ் விழா நாளும் கூட எனினும் மக்கள் இல்லை, எங்கள் வீட்டில் பிள்ளைகள் உள்ளனர், உங்களை யார் என்று தெரியாது, நாங்கள் அன்னியற்களை அனுமதிக்க மாட்டோம், என்று பர்பல காரணங்கள் கூறி புரகனித்தனர், இருதியில் அந்த வகை உதவியையே பெண் ஒருவரை வைத்து நடத்தினர்.அப்பொழுது சிலர் முன் வந்தனர்.


அதே சமயம் எங்கள் வீட்டில் ஒரு தாயார் கதவை தட்டினார். ``எனது மகள் இங்கே இசை பயிற்ச்சிக்கு வந்திருக்கிறாள், அங்கு பூச்சிகளின் தொல்லை அதிகமாக உள்ளது, நான் இந்த தின்னையில் அமரலாமா?’’ என்றார். நான் உடனடியாக அவரை அனுமதித்தேன்.சில வற்றை நமது முன்னோற்கள் அறிந்து அதனை நமது பழக்கமாக கொண்டுள்ளனர். இந்த தின்னை, உதவும் மனப்பான்மை இவை அனைத்தும் நமது கலாச்சாரத்தில் சொல்லாமல் சொல்லப்பட்ட மிகப்பெரிய வாழ்க்கை பாடங்கள், மற்றும் அவை நமக்கு போதிக்கப்பட்ட ஒழுக்க நெரிகள். ``தீயன செய்தவனுக்கும் நல்லதே செய்” என்று கூறி வளர்த்த என் அன்னை தமிழுக்கு நெஞ்சார்ந்த நன்றி. ஒவ்வொறு நொடியும் நான் ஒரு தமிழச்சியாக பிறந்ததில் பெருமை கொள்கிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக