ஞாயிறு, 28 ஜனவரி, 2018

வழி செல்வோம்

                                     வழி செல்வோம்

நாம் அனைவரும் இந்த உலகிற்க்கு ஒரு காரணமாக தான் வந்திருப்போம். சில நபர்கள் அந்த காரணத்தை கண்டறிந்து நல்ல ஒரு சமுதாயத்தை உறுவாக்குவதற்க்காக உழைத்து உயிர் துரந்திருப்பர் சிலர் அந்த காரணங்களையெல்லாம் அறியாமலேயே செத்து மடிவர். சிலர் தான் உண்டு தன் வேலை உண்டு என்றிறுப்பர். மனிதனாக பிறந்தால் நாட்டிற்கும் வீட்டிற்க்கும் ஏதாவது செய்வதே அவனது தலையாய கடமை. இதனை நம்மில் சிலர் தெரிந்திருப்பர், சிலருக்கு இதனை பற்றி அக்கறை இல்லை. நாட்டில் உள்ள இளஞர்களுக்கு நல்ல பல கருத்துக்களை எடுத்து சென்று சேர்க்க வேண்டியது மூத்தோரின் கடமை. ஆனால், இங்கோ, கூத்தாடிகளின் பின் சென்று வாழ்கையையும் நாடகம் போல் போலியாக அற்த்தம்மற்றைவயாக வாழ்ந்து வருகிறோம். யார் உண்மையான வீரர்கள்,, யாரை உண்மையாக மதிக்க வேண்டும், ஏன் நம் நாடு இந்த நிலமையில் உள்ளது?அதை திருத்துவது யாருடைய கடமை?என்று நாம் நமக்குள் கேட்டுக்கொள்ள வேண்டும். கேள்வி கேட்க்க வேண்டும் என்று அன்று சான்றோர் பெறுமக்கள் கூறுவது ஒரு தெளிவான பார்வை கிடைக்கவே!!! சிந்திப்பீர்! செயல்படுவீர்!


                                                

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக