செவ்வாய், 24 மே, 2016

பகுபதத்தின் முதல் மூன்று உறுப்புகள்..!!!


முதல் மூன்று உறுப்புகள்;
1.பகுதி-பெயர்,வினை குறித்து வரும்.
2.விகுதி-பால்,இடம்,திணை குறித்து வரும்.
3.இடைநிலை-காலம் குறித்து வரும்.
எது பகுதி..??
ஒரு சொல்லின் முதல் பகுதியில் அதாவது முதல் உறுப்பு பகாப்பதமாக இருக்கும் அதுவே பகுதி எனப்படும்.
(எ-கா) பாடினான்=பாடு+இன்+ஆன் என்று பிரிக்கலாம்.இது ஒரு பகுபதம்.
பாடு-பகுதி.
முதல் உறுப்பு என்பது பாடு.இது ஒரு பகாப்பதம்.அதாவது செய்யும் வினையைக் குறிக்கும்.பாடு என்பதனை பிரித்தால் பொருள் தராது.எனவே இது பகாப்பதம்.
(எ-கா)காடன்-காடு+அன்.
காடு-பகுதி.
காடு என்பது முதல் பகுதி.இது  பெயர்ச்சொல்லைக் குறிக்கும்.இதனை பிரித்தால் பொருள் தராது.எனவே இது பகாப்பதம்.
சுருக்கம்; ஒரு சொல்லை முதலில் பிரித்துப் பார்த்தால் அதில் எது பகாப்பதமாக இருக்கிறதோ,அதுவே பகுதி எனப்படும்.
எது விகுதி..??
விகுதி என்பது ஒரு சொல்லின் கடைசி உறுப்பைக் குறிப்பது.செய்யுளில் அதிகமாக விகுதிகள் அமைவதற்கு காரணம் அவற்றின் ஓசையைக் (சந்தம்)குறிக்கும்.
(எ-கா)ஓடினான்-ஆன் என்பது கடைசி உறுப்பு.இது ஆண்பால் விகுதி.
ஓடினாள்-ஆள்.இது பெண்பால் விகுதி.
ஓடினார்-ஆர்.இது பலர்பால் விகுதி.
ஓடியது-து.இது ஒன்றன்பால் விகுதி.
ஓடின-.இது பலவின்பால் விகுதி.
ஓடினேன்-ஏன்.இது தன்மை ஒருமை விகுதி.
ஓடினம்,ஓடினாம்,ஓடினோம்,ஓடினொம்-அம்,ஆம்,ஒம்,ஓம்.இது தன்மை பன்மை விகுதிகள்.
கண்டாய்,சொல்லுதி,செய்வை-ஆய்,இ,ஐ.இவைகள் முன்னிலை ஒருமை விகுதிகள்.
வருவீர்-இர்,ஈர்.இவைகள் முன்னிலை பன்மை விகுதிகள்.
வளர்க.வாழிய-க,இய.இவைகள் வியம்கோள் வினைமுற்றுகள்.
சுருக்கம்;உயர்திணையா,அஃறிணையா என்பதை பற்றியும் ஒருமையா பன்மையா என்பதை பற்றியும் அறிவது விகுதி.
 எது இடைநிலை..??
பகுதிக்கும்,விகுதிக்கும் இடையில் வருவது இடைநிலை எனப்படும்.இதனை பெயர் இடைநிலை,வினை இடைநிலை என்று இரு வகையாகப் பிரிக்கலாம்.
பெயர் இடைநிலை;
(எ-கா)தலைவர்-தலை+வ்+அர்
காலம் காட்டாது.எனவே இது இடைநிலையைக் குறிக்காது.
வினை இடைநிலை;(இறந்த கால இடைநிலைகள்)
(எ-கா)படித்தான்-படி+த்+த்+ஆன்.முதல் த் சந்தி.இரண்டாவது த் இடைநிலை.
உண்டான்-உண்+ட்+ஆன்.இதில் ட் இடைநிலை.
தின்றான்-தின்+ற்+ஆன்.இதில் ற் இடைநிலை.
உறங்கினான்-உறங்கு+இன்+ஆன்.இதில் இன் இடைநிலை.
(த்,ட்,ற்,இன் இறந்த கால இடைநிலைகள்)
நிகழ்கால இடைநிலை;
(எ-கா)படிக்கிறான்-படி+க்+கிறு+ஆன்.இதில் கிறு இடைநிலை.
படிக்கின்றான்-படி+க்+கின்று+ஆன்.இதில் கின்று இடைநிலை
பேசாநின்றான்-பேசு+ஆநின்று+ஆன்.இதில் ஆநின்று இடைநிலை.
(கிறு,கின்று,ஆநின்று நிகழ்கால இடைநிலைகள்)
எதிர்கால இடைநிலைகள்;
(எ-கா)காண்பான்-காண்+ப்+ஆன்.இதில் ப் இடைநிலை.
செய்வான்-செய்+வ்+ஆன்.இதில் வ் இடைநிலை.
(ப்.வ் எதிர்கால இடைநிலைகள்)
சுருக்கம்;மூன்று காலத்தை உணர்த்தி பகுதிக்கும்,விகுதிக்கும் நடுவில் வருவது இடைநிலை எனப்படும்.

   தொடரும்....

ஞாயிறு, 22 மே, 2016

கண்தானம் செய்வது பற்றி சில தகவல்கள்



          கண்தானம் செய்வது பற்றி சில தகவல்கள்



கண்தானம் செய்வதற்கான வழிமுறைகள்

கண்தானம் செய்ய விரும்புவோர் தமக்கு அருகிலுள்ள கண்தான வங்கியை தொடர்பு கொண்டு  கண்தானம் செய்வது பற்றி தெரிவிக்க வேண்டும். மேலும் தாம் இறந்தவுடன் கண்களை எடுத்துக் கொள்ளலாம் என முன்கூட்டியே கண் மருத்துவமனையில் பெயரை பதிவு செய்து எழுத்து பூர்வமாக உறுதியளிக்க வேண்டும். அங்கு கொடுக்கப்படும் பேப்பரை எல்லோரும் அறிந்த இடத்தில் வைக்க வேண்டும்.

சுற்றி இருப்பவர்கள் செய்ய வேண்டியவை

கண்தானம் செய்வதில் செய்பவர்களைவிட சுற்றி இருப்பவர்களின் பங்கு அதிகம். கண்தானம் செய்பவர் இறந்த அரை மணி நேரத்திற்குள் மருத்துவமனைக்கு செய்தி தெரிவிக்கப்பட வேண்டும்.

கண்தானம் செய்பவர் இறந்ததும் உடனடியாக அவரது கண்களை மூடி, கண்ணின் மீது ஐஸ்கட்டி அல்லது ஈரமான பஞ்சை வைக்க வேண்டும். கண்ணின் முக்கிய உறுப்பான கார்னியா எனப்படும் கருவிழிக்குள் ஒளிகற்றையானது உள்ளே செல்வதைத் தடுப்பதற்காக இதனை செய்ய வேண்டும்.

கண்வங்கி

இறந்தவர்களின் கண்களைப் பெற்று பாதுகாப்பாக வைத்திருக்கும் காப்பகத்திற்கு கண்வங்கி என்று பெயர். நாம் அவர்களுக்கு கண்தானம் செய்பவர் இறந்த செய்தியை தெரிவிக்கும் போது கண் சேமிப்புக்கென உள்ள மருத்துவ அதிகாரிகள் உடன் வந்து இறந்தவர் கண்களை முறைப்படி எடுத்து குளிர்சாதன பெட்டியில் சேமித்து வைப்பர். அதன் மூலம்  பார்வையற்ற இருவர்க்கு பார்வை கிடைக்கும்.

கண்தானம் செய்தவர் இறந்த இரண்டு மணி நேரத்திற்குள் கண்களை இறந்தவர்களின் உடலிலிருந்து அகற்றிவிடுவர். அப்போது தான் அதை பிறருக்கு பொருத்த முடியும்.

கண்தானம் செய்யும் இறந்தவரையும், கண்களைப் பெற்று கொள்பவரையும் மருத்துவர் முறையாக பரிசோதனை செய்த பிறகுதான் கண்விழிகளை பார்வையற்றவர்களுக்கு பொருத்துவர்.

முதலில் இறந்தவரிடம் இருந்து  இரத்தம் சேகரிக்கப்பட்டு உடல்நிலையின் ஆரோக்கியம் பற்றி ஆய்வு செய்யப்படும். பின்னரே கண் எடுக்கப்பட்டு மற்றவர்க்கு பொருத்தப்படும்.

யார் கண்தானம் செய்யலாம்

நீரிழிவுநோய், இரத்தக்கொதிப்பு, ஆஸ்துமா நோயாளிகள் உட்பட அனைவரும் கண்தானம் செய்யலாம். ஆனால் தொற்றுநோய், மஞ்சள்காமாலை, விஷக்கடி, எய்ட்ஸ் போன்றவற்றால் இறந்தவர்களால் கண்தானம் செய்ய முடியாது.

பதங்கள் பற்றி அறிவோம்..!!!




நாம் பார்த்திருப்போம்,சில பள்ளி மாணவர்கள் தமிழ் பாடம் என்றாலே பிடிக்காது என்பார்கள்.காரணம் இலக்கணம் பகுதி தான்.தமிழில் மிகவும் கடினமானது இலக்கணம் பகுதி தான் என்பது அவர்களின் கருத்து.அதற்கு காரணம் அவர்களின் ஆர்வமின்மை மற்றும் ஆசிரியர்கள் கற்றுவித்தல் முறை ஆகியவை தான் இலக்கணம் பகுதியை கடினமானது என்று கருதுக்கின்றனர்.இலக்கணத்தில்  நான் புரிந்துக் கொண்டதை  தங்களோடு பகிரவுள்ளேன்.


பதங்கள்;

பதம் என்றாலும்,மொழி என்றாலும்,கிளவி என்றாலும்,சொல் என்றாலும் ஒன்று தான்.

பதங்களின் வகைகள்;

1.பகாப்பதம்

2.பகு பதம்

பகுத்தல்;

பகுத்தல் என்றால் பிரித்தல் என்று பொருள்படும்.

1.பகாப்பதம்;

பிரிக்க முடியாதவை பகாப்பதம் எனப்படும்.

சொல் வகைகள்;

1.பெயர்ச்சொல்

2.வினைச்சொல்

3.இடைச்சொல்

4.உரிச்சொல்

பகாப்பதம் வகைகள்;

1.பெயர் பகாப்பதம்.

2.வினை பகாப்பதம்.

3.இடை பகாப்பதம்.

4.உரி பகாப்பதம்.

பெயர் பகாப்பதம்;

(எ-கா) நீர்,அம்மா,மான்,மலர்.

இவைகளை பிரித்தால் பொருள் இருக்காது.

வினை பகாப்பதம்;

(எ-கா) ஓடு,பாடு,வா

செய்யும் செயலை குறிப்பதால்,இவைகள் வினைகள் எனப்படும்.பிரித்தால் பொருள் தராது.

இடை பகாப்பதம்;

(எ-கா) போல,ஆல்,ஐ,அது.

வேற்றுமை உருபுகளை பிரிக்க இயலாது.

உரி பகாப்பதம்;

(எ-கா) சால,கடி,உறு

இவைகளை பிரித்தால் பொருள் தராது.

2.பகு பதம்;

பிரிக்க முடியும்.பிரித்தால் பொருள் தரும்.அவைகளே பகு பதம் எனப்படும்.

பகு பதத்தின் வகைகள்;

பெயர் பகுபதம்.

வினை பகுபதம்

பகுபதத்தின் உறுப்புகள்;

1.பகுதி-முதல் பகுதி.

2.விகுதி-கடைசி பகுதி.

3.இடைநிலை-நடுப்பகுதி.

4.சந்தி-இணைப்பது

பகுதிக்கும் இடைநிலைக்கும்  நடுவிலும் அல்லது இடைநிலைக்கும் பகுதிக்கும் நடுவிலும் வருவது சந்தி  ஆகும்.

5.சாரியை-இதுவும் கிட்டதட்ட சந்தியை போல தான் வரும்.

6.விகாரம்-மாறுதல்.

அதாவது ஒரு சொல் திரிந்து வருவது.

(தொடரும்)………

அடுத்த பதிவில் பகுபதத்தின் உறுப்புகள் பற்றி விரிவாகவும் எளிமையாகவும் பார்க்கலாம்.நன்றி.












சனி, 21 மே, 2016

ச்சார்லஸ் லேம்ப்

                                   

                                            ச்சார்லஸ் லேம்ப்(19ஆம் நூற்றாண்டு)
                          [கட்டுரையாளர்]
ச்சார்லஸ் லேம்ப் லண்டனில் பிறந்தார்.பிறகு சவுத் சீ ஹவுஸ் பற்றும் இன்டியா ஹவுஸ் என்ற இடத்தில் குமாஸ்தா பொருப்பு கிடைத்தது.இவரது தங்கை மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதனால் இவர் தனது வாழ்நாள் முழுவதையும் அர்பனித்தார்.அவரது கட்டுகளில்``கசின் பிரிஜேட்``என்ற பெயரில் இவர் தங்கையை குறிப்பிடுவார்.அடிப்படையாகவே இவர் அலகு தோற்றம்,ஆர்வமுள்ள பேச்சாளர் மற்றும் சிறந்த கட்டுரையாளருமாவார். இவரது கௌரவம் என்பது இவரது நகைச்சுவை,சோகம் மற்றும் தன்னம்பிக்கை பொருத்து அமைந்திருக்கும்.
லேம்ப் கட்டுரைகளின் விஷேஷம்;
            லேம்பின் ஆங்கிலக் கட்டுரைகள் அளவிடமுடியாதவை.இவரது கதைப்பொருள்,பொதுவாஎவும் கனக்கிட முடியாத வகையிலும் அமையும், ``சிம்னி—ஸ்வீப்ஸ்``என்பதில் தொடங்கி``ஓல்ட் சைனா``என்ற கட்டுரைவரை சொந்த சாரல் கொண்டு எழுதியுள்ளார்.
            எந்த ஒரு கட்டுரையாளரும் இவரளவுக்கு தன்புகழ்சியாளரல்ல, ஆனால் எந்த ஒரு தன்புகழ்சியாளரும் இவரளவுக்கு களைத்துவமாகவும், சோகமாகவும்,கண்ணீருடன்,கருனையுடனும்,மனிதத்துவமாகவும் இல்லை.
            பழைய பண்புகள் இவர் பணிகளில் தெரியும்.ஆர்வமூட்டும் வகையில் இவரது வார்த்தைகள் அமையும்.
            உறுதியாகவும்,புதுணர்ச்சியாகவும்,உணர்ச்சிபூர்வமாகவும் எழுதுவார்.
லேம்பின் கட்டுரைகள்;
            லேம்ப் ஒரு கவிஞராக தன் பணியை தொடங்கி பின் சிறு சிறு படைப்புகளை உறுவாக்கினார்.அதில்``தி ஓல்ட் பேமிலியர் பேசஸ் அன்ட் டு



ஹிஸ்டர்``என்பது ஒன்று,இவரது``டேல்ஸ் ப்ரம் ஷேக்ஸ்பியர்``என்பது  அறிவுப்பூர்வமாகவும் படுப்பதர்க்கு ஏற்ற வகையிலும் எழுதியிருப்பார்.மேலும் இவரது``ஸ்பேசிமன்ஸ் ஆப் இங்கிலிஷ் டிரமாடிக் போயட்ஸ்``என்பது புகழ்பெற்ற படைப்பாகும்.லம்பின் முதல் கட்டுரை``லண்டன் மகசின்`` என்ற இதழில் வெளிவந்ததாகும்.அதன் முதல் பகுதி``தி எஸ்சேஸ் ஆப் இலியா`` என்பதிலும் இரண்டாம் பகுதி``தி லாஸ்ட் எஸ்சே ஆப் இலியா``என்பதிலும் வெளிவந்து.

`சர் வால்ட்டர் ஸ்க்காட்

                 
       
                     `சர் வால்ட்டர் ஸ்க்காட்(புனைய எழுத்தாளர்)19—நூ
                  (வரலாற்று புதினங்களின் தந்தை)
சர் வால்ட்டர் ஸ்க்காட்``எடின்பிர்க்``என்ற இடத்தில் பிறந்து அங்கேயே தம் கல்வியயையும் பெற்றார்.தான் தன்னையே``ஸ்க்காடிஷ் பார்``என்று அழைத்துக் கொள்வார்.புனைய பாடல்களிலிருந்து தன் கவனத்தை கதைகளின் மீது செலுத்தினார்.இவர் பதிணெட்டாம் நூற்றாண்டின் பழக்கங்களையும்,வரலாற்று காதல்களையும் கூறியிருப்பார்.
ஸ்காடின் பண்புகள்;
            வால்டர் ஸ்காட் சோர்வில்லாத மனிதர்.தொடர்ந்து நாவல்களை உறுவாக்குவதில் வல்லவர்.
            இவரது நடை கிட்டத்தட்ட ஷேக்ஸ்பியருடன் ஒத்துப்போகும்.
            ஸ்காட் வேகமாகவும் கவனக்குளைவாக எழுதுவார்.அவர் தனக்குளேயே தனது படைப்புகளின் அமைப்பில் குறை உள்ளதென கருதுவார்.
            இவரது படைப்புகள் அனைத்தும் சிறந்தது என கருதுவதற்க்கு அவரது படைப்பாக்கத் திறனே முக்கியக் காரணம்.
இவரது பாடல்கள்;
``லியோனோர்``என்பது ஜேர்மன் மொழிலிருந்து மொழிபெயர்க்ப்பட்ட``தி ஈவ் ஆப் செயின்ட் அக்னஸ்``என்பது ஒரு பழங்கால வேகம்,வெறி மற்றும் அற்புத மாயைகள் அடங்கியது.ஸ்காடின் தத்ரூபமான படைப்பு``தி லேடி ஆப் லாஸ்ட் மின்ஸ்ட்ரல்``.ஒரு கதையாக இது குழப்பமாகவும்,கடினமானவும் அமையும். மேலும்,
                  ``தி லேடி ஆப் தி லேக்``
                  ``ராக்யை``
                  ``தி லாட்ர் ஆப் தி இஸ்லேஸ்``
            என பலவற்றை உறுவாக்யுள்ளார்.
ஸ்காடின் நாவல்கள்;
            இவரை``வேவர்லி நாவலிஸ்ட்``என்றழைப்பர்.ஸ்காடின் ``வேவர்லி நாவலிஸ்ட்``என்றழைப்பர்.ஸ்காடின்``வேவர்லி நாவல்``என்பதில்27நாவல்களும் 5கதைகளும் உள்ளன.இவரது எட்டு நூற்றாண்டுகளைப் பற்றி பேசுவன.இவரது
வரலாற்று நாவல்களை``தி டலிஸ்மேன்``,``இவான்ஹோஇ``,  ``தி மோனாஸ்டிரி``என வரிசயில் கூறலாம்.இதில் வரலாற்று நிகழ்வுகளையும் கதாப்பாத்திரங்களையும் சேர்த்துள்ளார்.17மற்றும்18ஆம் நூற்றாண்டை பற்றி கூறுவதில் இவரே வல்லவர்.