தமிழ்த்துறை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தமிழ்த்துறை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 10 மே, 2016

மரம் வளர்ப்போம்!! புவியை காப்போம்!!



                மரம் வளர்ப்போம்!! புவியை காப்போம்!!

முன்னுரை

 



      கோடை காலம் என்பதால் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக உள்ளது. காலம் செல்ல செல்ல வெப்பம் அதிகரிக்கிறதே இன்றி குறைந்தபாடில்லை.இதற்கு முக்கிய காரணம் புவி வெப்பமாதல் தான். புவி வெப்பமடைய காரணங்கள் பல. அவற்றுள் முக்கியமான காரணம் மரங்களை வெட்டுவதுதான்.
மரம் என்றாலே நன்மை தான்
      மரங்களும் குழந்தைகளைப் போலத் தான் விதை மண்ணில் விழுந்து சிறு செடியாய் முளைத்து அது மெல்ல மெல்ல வளர்ந்து மரமாகிறது. ஒரு செடி மரமாக வளர குறைந்தது 2 ஆண்டுகளாவது ஆகும். புவியில் உள்ள எல்லா உயிரினங்களுக்கும் ஆயுட்காலம் உண்டு. ஆனால் ஆயுட்காலம் இல்லாத ஒரே உயிர் மரம் மட்டும் தான். மனிதர்களாலும் இயற்கையாலும் எந்தவித இடையூறும் ஏற்படாத வரை மரங்கள் எத்தனை ஆண்டு காலம் வேண்டுமாலும் புவியில் உயிர்வாழ முடியும். மரங்கள் நமக்கு தரும் நன்மைகள் பல. எதை எடுத்துக்கொண்டாலும் நன்மை தீமை என்று இரு பக்கம் இருக்கும். நன்மை மட்டுமே அதிக அளவில் நிறைந்திருக்கும் ஒரே உயிர் மரம் தான்.
புவி வெப்பமடைதலை தடுக்கிறது
       மரங்களால் உயிரனங்கள் அடையும் நன்மைகள் பல பல. மரங்கள் புவி வெப்பமாதலைத் தடுக்கிறது. மரங்கள் வாகனங்களில் இருந்து வெளிவரும் கார்பன்-டை-ஆக்ஸைடை எடுத்துக் கொண்டு நமக்குத் தேவையான ஆக்ஸிஜனை வெளிவிடுகிறது. இதனால் நமக்கு சுத்தமான காற்று கிடைக்கிறது. வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்ததாலும் அதிக கார்பன் வெளியேற்றதாலும் 2000 ஆண்டு வரை 25% மாக இருந்த புவி வெப்பம் இன்று 37%மாக அதிகரித்துள்ளது. இவற்றை கட்டுப்படுத்தும் திறன் மரங்களுக்கு மட்டுமே உண்டு. நன்றாக வளர்ந்து முதிர்ந்த ஒரு மரம் ஒரு ஆண்டில் 48 பவுண்ட் கார்பன்-டை-ஆக்ஸைடை இழுத்துக் கொள்கிறது.

வெள்ளி, 6 மே, 2016

மூவிடம்



                                     

இடம் மூன்று வகைப்படும். அவை
                        தன்மை
                        முன்னிலை
                        படர்க்கை
தன்மை
தன்னைப் பற்றி கூறும் சொல் தன்மை இடமாகும்.

எடுத்துக்காட்டு- நான் எழுதினேன், நாங்கள் எழுதினோம், நான் செய்தேன்

முன்னிலை
நமக்கு முன்னால் இருப்பவரைக் குறிப்பது முன்னிலை இடமாகும்.

எடுத்துக்காட்டு- நீ கேட்டாயா?, நீங்கள் கேட்டீர்களா?

படர்க்கை
தன்னையோ, முன்னால் நிற்பவரையோ குறிக்காமல் வேறு ஒரு மூன்றாவது நபரைக் குறிப்பது படர்க்கை இடமாகும்.
படர்க்கை உயர்திணை அஃறிணை என்று இரு வகைப்படும்.

எடுத்துக்காட்டு- அவன், அவள், அவர்கள் – படர்க்கை உயர்திணை
                அவை, அது – படர்க்கை அஃறிணை

வியாழன், 5 மே, 2016

அறுவகைப் பெயர்கள்


                            அறுவகைப் பெயர்கள்
பெயர்ச்சொல்
ஒன்றின் பெயரைக் குறிப்பது பெயர்ச்சொல் ஆகும். பெயர்ச்சொல் ஆறு வகைப்படும். அவை
                            பொருட்பெயர்
                            இடப்பெயர்
                            காலப்பெயர்
                            சினைப்பெயர்
                            குணப்பெயர்
                            தொழிற்பெயர்
பொருட்பெயர்;
பொருளின் பெயரைக் குறிப்பது பொருட்பெயர் ஆகும். 
 
 


எடுத்துக்காட்டு - மேசை, கடிகாரம், கதவு, வண்டி, கட்டில் போன்ற பொருள்களைக் குறிப்பதால் இது பொருட்பெயராகும்.
இடப்பெயர்
இடத்தின் பெயரைக் குறிப்பது இடப்யெராகும்.


எடுத்துக்காட்டு – கோயில், பேருந்து நிலையம், சென்னை, தெரு, மருந்தகம்.
காலப்பெயர்
காலத்தை (பொழுதை) குறிப்பது காலப்பெயராகும்.



எடுத்துக்காட்டு – வைகாசி, இரவு, கோடை, காலை
சினைப்பெயர்
சினை – உறுப்பு. மனிதனின் உறுப்புகள் மற்றும் தாவர, விலங்குகளின் உறுப்புகளைக் குறிப்பது சினைப்பெயராகும்.




எடுத்துக்காட்டு – கிளை, கழுத்து, தலை, கை.
குணப்பெயர்
குணம் – பண்பு. பொருட்களின் குணத்தை (பண்பை) குறிப்பது குணப்யெராகும்.




எடுத்துக்காட்டு – உண்மை, பெருமை, வெம்மை, செம்மை, பசுமை.
தொழிற்பெயர்
செய்யும் தொழிலைக் குறிப்பது தொழிற்பெயராகும்.

 





எடுத்துக்காட்டு – தச்சு, உழவு, ஆட்டம், காவலர்.

பின்வரும் சொற்கள் எந்த பெயரைக் குறிக்கும் என கூறுக
கண், பொறுமை, ஓட்டுனர், தை, கடை, கட்டில்.