செவ்வாய், 25 அக்டோபர், 2016

பெண்கள், 25 வயதுக்குள் முதல் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும்..!!!

பெண்கள், 25 வயதுக்குள் முதல் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும். அடுத்த குழந்தை, 28 வயதுக்குள் பெற்றுக் கொள்ளலாம். 40 வயதுக்குப் பின் குழந்தை பெற்றுக் கொள்வது நல்லதல்ல.

Image result for women with child

மருத்துவம் சார்ந்த சந்தேகங்களுக்கு, ஓய்வுபெற்ற மருத்துவ பேராசிரியர், விளக்கம் அளித்தார்.இதுபற்றிய விவரம்:

1. சுக பிரசவங்கள் குறைந்து, எங்கு பார்த்தாலும் சிசேரியன் என, டாக்டர்கள் கூறுகின்றனர். இது சந்தேகமாக உள்ளதே?
உங்கள் சந்தேகம் நியாயமானது தான். குழந்தையின் தலை பெரிதாக உள்ளது; பெண்ணின் இடுப்பு எலும்பு வலுவாக இல்லை; தாயின் உயிருக்கு ஆபத்து என்ற பட்சத்தில், சிசேரியன் செய்யலாம். ஆனால், சுக பிரசவத்திற்கு நிறைய வாய்ப்பிருந்தும், 30 ஆயிரம், 40 ஆயிரம் ரூபாய் பணத்திற்காக, சிசேரியன் செய்வதும், கர்ப்பப் பை அகற்றுவதும் அதிகரித்துள்ளது. இது ஆரோக்கியமானது அல்ல. முதல் பிரசவம் சிசேரியனாக இருந்தாலும், இரண்டாவது சுக பிரசவமாக வாய்ப்புள்ளது.

2. எந்த வயதில் குழந்தை பெற்றுக் கொள்ளலாம்; குழந்தை பிறப்பைத் தள்ளிப் போடுவது சரியா?
பெண்கள், 25 வயதுக்குள் முதல் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும். அடுத்த குழந்தை, 28 வயதுக்குள் பெற்றுக் கொள்ளலாம். 40 வயதுக்குப் பின் குழந்தை பெற்றுக் கொள்வது நல்லதல்ல. வயது ஏற ஏற, கரு முட்டை குறைந்து கொண்டே வரும் என்பதால், வாழ்க்கையில் செட்டில் ஆன பின், குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என, தள்ளிப் போடுவது சரியல்ல. இதனால், குழந்தையின் ஆரோக்கியம் பாதிக்கும்.

3. குழந்தைகளுக்கு எவ்வளவு காலம் தாய்ப்பால் கொடுக்கலாம்?
எவ்வளவு காலம் தாய்ப்பால் கொடுக்க முடியுமோ, அதுவரை கொடுக்கலாம். ஆறு மாதம் தாய்ப்பால் மட்டுமே, கொடுக்க வேண்டும். அதைத் தொடர்ந்து, தாய்ப்பாலுடன், வீட்டில் தயாரிக்கும் உணவுகளை, கொஞ்சம் கொஞ்சமாக கொடுக்கலாம். இதனால், தாயின் அழகு பாதிக்கும் என்பதெல்லாம் கட்டுக்கதை. புட்டிப்பால் கொடுக்கவே கூடாது; குழந்தையின் ஆரோக்கியத்துக்கு நல்லதல்ல.

4. எச்.ஐ.வி., பாதிப்புள்ளோர், குழந்தைக்கு பால் கொடுக்கலாமா?
எச்.ஐ.வி., பாதிப்புள்ளோர், கர்ப்ப காலத்தின்போதும், குழந்தைக்கு பால் கொடுக்கும் காலத்திலும், முறையான மருந்துகள் எடுத்துக் கொண்டு, குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கலாம். எச்.ஐ.வி., பரவி விடுமோ என்ற பயத்தில், தாய்ப்பால் கொடுக்காமல் இருக்கக் கூடாது; சரியான மருத்துகள் எடுத்துக் கொள்வதால், எச்.ஐ.வி., பரவாது.

5. மூன்று வயதோடு, மூளை வளர்ச்சி நின்று விடும் என்பது சரியா?
வதந்தியை யாரும் நம்ப வேண்டாம். மூளை, 1,300 கிராம் எடை வரை இருக்கும். ஆண்களை விட, பெண்களுக்கு கொஞ்சம் சிறியதாக இருக்கும். அதனால், திறன் வேறுபடும் என்றெல்லாம் யாரும் சொன்னால், நம்ப வேண்டாம். 12 வயதுக்கு மேலும், மூளை வளர்ச்சி இருக்கும்.

6. குழந்தைகள் மூளை வளர்ச்சி இல்லாமல் பிறப்பது ஏன்?
தாயின் கருப்பையில், குறைந்தபட்சம், 38 வாரங்களாவது குழந்தை இருக்க வேண்டும். குழந்தையின் ஒவ்வொரு உறுப்பின் வளர்ச்சியும் முக்கியம். அதற்கு முன், குழந்தை பிறந்தால், இது போன்ற பாதிப்புகளுக்கு வாய்ப்புண்டு. தாய்க்கு ரத்தக் கசிவு, மூளைக்கு சரியாக ரத்தம் செல்லாமை போன்ற காரணங்களால், மூளை வளர்ச்சி பாதிக்க வாய்ப்புண்டு.

7. கேட்கும் திறன், எந்த வயதில் குழந்தைகளுக்கு வரும்?
கர்ப்பத்தில் ஆறு மாதம் வளர்ச்சி பெறும்போதே, சிசு, கேட்கும் திறனைப் பெற்று விடும். தாயின் மொழி நன்கு புரியும். அப்படியே கிரகித்துக் கொள்வதால், தாய் மொழியிலேயே பாடம் புகட்டினால், வேகமாக கற்றுக் கொள்ளும். பத்து வயதுக்கு மேல், வேறு எந்த மொழியையும் கற்றுக் கொடுக்கலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.Photo: பெண்கள், 25 வயதுக்குள் முதல் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும். அடுத்த குழந்தை, 28 வயதுக்குள் பெற்றுக் கொள்ளலாம். 40 வயதுக்குப் பின் குழந்தை பெற்றுக் கொள்வது நல்லதல்ல.

மருத்துவம் சார்ந்த சந்தேகங்களுக்கு, ஓய்வுபெற்ற மருத்துவ பேராசிரியர், விளக்கம் அளித்தார்.இதுபற்றிய விவரம்:

1. சுக பிரசவங்கள் குறைந்து, எங்கு பார்த்தாலும் சிசேரியன் என, டாக்டர்கள் கூறுகின்றனர். இது சந்தேகமாக உள்ளதே?
உங்கள் சந்தேகம் நியாயமானது தான். குழந்தையின் தலை பெரிதாக உள்ளது; பெண்ணின் இடுப்பு எலும்பு வலுவாக இல்லை; தாயின் உயிருக்கு ஆபத்து என்ற பட்சத்தில், சிசேரியன் செய்யலாம். ஆனால், சுக பிரசவத்திற்கு நிறைய வாய்ப்பிருந்தும், 30 ஆயிரம், 40 ஆயிரம் ரூபாய் பணத்திற்காக, சிசேரியன் செய்வதும், கர்ப்பப் பை அகற்றுவதும் அதிகரித்துள்ளது. இது ஆரோக்கியமானது அல்ல. முதல் பிரசவம் சிசேரியனாக இருந்தாலும், இரண்டாவது சுக பிரசவமாக வாய்ப்புள்ளது.

2. எந்த வயதில் குழந்தை பெற்றுக் கொள்ளலாம்; குழந்தை பிறப்பைத் தள்ளிப் போடுவது சரியா?
பெண்கள், 25 வயதுக்குள் முதல் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும். அடுத்த குழந்தை, 28 வயதுக்குள் பெற்றுக் கொள்ளலாம். 40 வயதுக்குப் பின் குழந்தை பெற்றுக் கொள்வது நல்லதல்ல. வயது ஏற ஏற, கரு முட்டை குறைந்து கொண்டே வரும் என்பதால், வாழ்க்கையில் செட்டில் ஆன பின், குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என, தள்ளிப் போடுவது சரியல்ல. இதனால், குழந்தையின் ஆரோக்கியம் பாதிக்கும்.

3. குழந்தைகளுக்கு எவ்வளவு காலம் தாய்ப்பால் கொடுக்கலாம்?
எவ்வளவு காலம் தாய்ப்பால் கொடுக்க முடியுமோ, அதுவரை கொடுக்கலாம். ஆறு மாதம் தாய்ப்பால் மட்டுமே, கொடுக்க வேண்டும். அதைத் தொடர்ந்து, தாய்ப்பாலுடன், வீட்டில் தயாரிக்கும் உணவுகளை, கொஞ்சம் கொஞ்சமாக கொடுக்கலாம். இதனால், தாயின் அழகு பாதிக்கும் என்பதெல்லாம் கட்டுக்கதை. புட்டிப்பால் கொடுக்கவே கூடாது; குழந்தையின் ஆரோக்கியத்துக்கு நல்லதல்ல.

4. எச்.ஐ.வி., பாதிப்புள்ளோர், குழந்தைக்கு பால் கொடுக்கலாமா?
எச்.ஐ.வி., பாதிப்புள்ளோர், கர்ப்ப காலத்தின்போதும், குழந்தைக்கு பால் கொடுக்கும் காலத்திலும், முறையான மருந்துகள் எடுத்துக் கொண்டு, குழந்தைகளுக்கு தாõய்ப்பால் கொடுக்கலாம். எச்.ஐ.வி., பரவி விடுமோ என்ற பயத்தில், தாய்ப்பால் கொடுக்காமல் இருக்கக் கூடாது; சரியான மருத்துகள் எடுத்துக் கொள்வதால், எச்.ஐ.வி., பரவாது.

5. மூன்று வயதோடு, மூளை வளர்ச்சி நின்று விடும் என்பது சரியா?
வதந்தியை யாரும் நம்ப வேண்டாம். மூளை, 1,300 கிராம் எடை வரை இருக்கும். ஆண்களை விட, பெண்களுக்கு கொஞ்சம் சிறியதாக இருக்கும். அதனால், திறன் வேறுபடும் என்றெல்லாம் யாரும் சொன்னால், நம்ப வேண்டாம். 12 வயதுக்கு மேலும், மூளை வளர்ச்சி இருக்கும்.

6. குழந்தைகள் மூளை வளர்ச்சி இல்லாமல் பிறப்பது ஏன்?
தாயின் கருப்பையில், குறைந்தபட்சம், 38 வாரங்களாவது குழந்தை இருக்க வேண்டும். குழந்தையின் ஒவ்வொரு உறுப்பின் வளர்ச்சியும் முக்கியம். அதற்கு முன், குழந்தை பிறந்தால், இது போன்ற பாதிப்புகளுக்கு வாய்ப்புண்டு. தாய்க்கு ரத்தக் கசிவு, மூளைக்கு சரியாக ரத்தம் செல்லாமை போன்ற காரணங்களால், மூளை வளர்ச்சி பாதிக்க வாய்ப்புண்டு.

7. கேட்கும் திறன், எந்த வயதில் குழந்தைகளுக்கு வரும்?
கர்ப்பத்தில் ஆறு மாதம் வளர்ச்சி பெறும்போதே, சிசு, கேட்கும் திறனைப் பெற்று விடும். தாயின் மொழி நன்கு புரியும். அப்படியே கிரகித்துக் கொள்வதால், தாய் மொழியிலேயே பாடம் புகட்டினால், வேகமாக கற்றுக் கொள்ளும். பத்து வயதுக்கு மேல், வேறு எந்த மொழியையும் கற்றுக் கொடுக்கலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

6 கருத்துகள்:

 1. 25 வயது ஆகிவிட்டது என்பதற்காக அவசரப்பட்டு பெற்றுக்க வேண்டாம்முதலில் தாலி கழுத்தில் ஏறட்டும்:)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜி வாங்க.தாங்கள் சொல்வது போல் தாலி கழுத்தில் ஏறட்டும் ஐயா.நன்றி

   நீக்கு
 2. பலருக்கும் பயன் தகரும் நல்ல செய்தி சகோ நன்றி

  பதிலளிநீக்கு
 3. பெண்கள் மட்டுமன்றி ஆண்களும் அறிந்து கொள்ள வேண்டிய தகவல்.

  தொடர்கிறேன்..

  நன்றி.

  பதிலளிநீக்கு