வெள்ளி, 25 டிசம்பர், 2015

அரசு முதலீடுகள்..!!


 நமது நாட்டில் எழுதப்படிக்கத் தெரியாதோர் 27 கோடிப்பேர்,வறுமைக் கோட்டிற்குக்கீழ் வாழ்வோர் 41 கோடிப்பேர்,குடிநீர் கூடக் கிடைக்காமல் திண்டாடுவோர் 15 கோடிப்பேர்,கழிப்பிட வசதி கூட இல்லாமல் அவதிப்படுவோர் 60 கோடிப்பேர்,சத்தான உணவின்றி வாடும் குழந்தைகள் 43 விழுக்காட்டினர், தேவையான அடிப்படை மருந்துகள் கூட இல்லாமல் இன்னலுறும் கிராமத்தினர் 75 விழுக்காட்டினர்.ஆனால் புகையிலை உற்பத்தி செய்து விற்று நம் மக்களின் உடல்நலத்தைக் கெடுக்கும் ஒரு நிறுவனத்தில் அரசாங்கத்தின் பங்கு முதலீடு 34.58 விழுக்காடு என்பது அதிர்ச்சியளிக்கிறது.



Image result for tobacco photos
அதுவும் எல்.ஐ.சி(13.72%) யூ.டி.ஐ(11.4%)ஜென்ரல் இன்ஷுரன்ஸ் என அரசின் பல்வேறு காப்பீட்டு நிறுவனங்கள் இந்தப் புகையிலை நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளன.அதாவது எதிர்காலத்தில் நம் உடல் நலம் கெட்டுவிட்டால் மருத்துவச் செலவிற்கு வேண்டும் என மாதந்தோறும் இன்ஷீரன்ஸ் நிறுவனத்தில்  கட்டும் பணம்,நம்மையே புகையிலை என்னும் போதைக்கு அடிமையாக்கி நம் உடல் நலம் கெட வைக்கிறது என்று அறியும்பொழுது அரசின் பணமுதலீட்டுக் கொள்கை,மக்களை விட பணமே பிரதானம் என்பதுதான் என எண்ண வைக்கிறது..




Image result for face cream photosமேலும் அழகான கறுப்பு நிறப்பெண் வேண்டும் என்று மணமகள் தேவை விளம்பரத்தில் நாம் என்றாவது பார்த்தது உண்டா..?? நிறக்குறைவான பெண்களைக் கேலி செய்து சித்தரிப்பதும், தரம் தாழ்த்திப் பார்பதும் ,சமுதாயத்தின் சர்வ சாதாரண செயலாகிவிட்டது.இதுதான் அவர்களிடம் தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்துவதுடன் தன்னம்பிக்கையையும் தகர்க்கிறது.இது போன்ற சமுதாயத் தாக்கத்தினால்தான் இப்போது நம் நாட்டில் சிவப்பு நிறமாக்கும் முகப்பூச்சுகளுக்காக செய்யும் செலவு ஆண்டிற்கு 1100 கோடி ரூபாயை எட்டியுள்ளது.இது இந்திய அரசு சென்ற ஆண்டு விளையாட்டு மற்றும் இளைஞர் மேம்பாட்டிற்காக முதலில் ஒதுக்கிய 765 கோடியைவிட அதிகம் என்பது உள்ளத்தை உறுத்துவதாக உள்ளது..
Image result for help for people photos
       






இதுபோன்ற நிறுவனத்தில் முதலீடு செய்யும் அரசு மேலே இல்லாத நபர்களுக்கு ஏன் உதவக் கூடாது..???? சிந்தியுங்கள் ..!!

2 கருத்துகள்: