தமிழின் சிறப்பு;
தமிழ் என்ற வார்த்தையை உச்சரிக்கும் போது வருகின்ற ஆனந்தம் வேறு எம்மொழியிலும் இல்லை..பிறந்த குழந்தை உச்சரிக்கும் முதல் வார்த்தை அ..அதாவது அம்மா இம்மொழியை யாருமே சொல்லித் தந்து அந்த குழந்தை பேசுவது இல்லை..அது தான் நம் மொழி தமிழ்..
நான் பிற மொழிகளை ஏழனமாய் கூறவில்லை..நாம் தமிழர் என்ன ஒரு இணைப்பில் உள்ளோம்..தமிழ் அவமானம் அல்ல..அடையாளம் என்பது உண்மையே..
நான் பாரதி தாசன் கவிதைகளில் ஒன்றான சங்க நாதம் பகுதியில் உள்ளதை பகிர உள்ளேன்..
சங்க நாதம்_-பாரதி தாசன்
எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு..!!
எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்
இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே..!!
திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும் உடுக்களோடும்
மங்குல்கடல் இவற்றோடும் பிறந்த தமிழுடன் பிறந்தோம் நாங்கள்,ஆண்மைச்
சிங்கத்தின் கூட்டமென்றும் சிறியோர்க்கும் ஞாபகம் செய் முழங்கு சங்கே..!!
எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு..!!
சிங்களஞ் சேர் தென்னாட்டு மக்கள்
தீராதி தீர ரென்றூது சங்கே..!!
பொங்கு தமிழர்க் கின்னல் விளைத்தால்
சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு..!!
வெங்கொடுமைச் சாக்காட்டில் விளையாடும் தோளெங்கள் வெற்றித் தோள்கள்..!!
கங்கையைப்போல் காவிரிபோல் கருத்துக்கள் ஊறுமுள்ளம் எங்கள் உள்ளம்..!!
வெங்குருதி தனிற்கமழ்ந்து வீரஞ்செய் கின்றதமிழ் எங்கள் மூச்சாம்..!!
எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு..!!
அருமை
பதிலளிநீக்குநன்றி ஐயா..
நீக்குநல்ல பகிா்வு. தங்கள் தொடா்முயற்சிக்குப் பாராட்டுக்கள் வைசாலி
பதிலளிநீக்குநன்றி ஐயா..
நீக்கு