ஆல்ஃப்ரட் நோபல் ஸ்வீடன் நாட்டின் தலைநகரான ஸ்டாக்ஹோமில் பிறந்த இவரின் தந்தையாரும் ஒரு விஞ்ஞானிதான்.இவர் ஆரம்ப கல்வியை ரஷ்யாவிலுள்ள செயிண்ட் பீட்டர்ஸ்பர்க்கில் கற்றார்.இவரது தந்தை இவருக்குப் பல மொழிகளைக் கற்றுத் தந்தார்.
இதனால் நோபல் ஆங்கிலம்,ஃபிரஞ்சு,ஜெர்மன்,ருஷ்யன்,ஸ்வீடன் போன்ற மொழிகளை எழுதப் படிக்க நன்கு அறிந்திருந்தார்.
அவரின் தந்தையுடன் சேர்ந்து 1859ஆம் ஆண்டில் ஒரு தொழிற்கூடத்தை ஸ்வீடன் நாட்டில் நிறுவினார்.அவர்கள் ‘நைட்ரோகிளிசரின்’ என்ற இரசாயனப் பொருளை தயாரிக்கத் திட்டமிட்டனர்.ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவரது ஆராய்ச்சியின் போது அப்பொருள் ஆய்வுக் கூடத்திலே வெடித்துச் சிதறியதால் நோபலின் இளைய சகோதரரும் பல சக பணியாளர்களும் இறந்து போனார்கள்.
எனவே அரசு இப்பொருளை உற்பத்தி செய்ய தடை விதித்தது.வெளிநாடுகளுக்கும் இதனை உற்பத்தி செய்து அனுப்ப இயலாத நிலைமை ஏற்பட்டுவிட்டது.பலரும் நோபலை ‘முட்டாள் விஞ்ஞானி’ என்றே கேலியாக அழைத்தனர்.இதனால் பணத்தையும் பெயரையும் இழந்து அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து நின்றார் நோபல்.
இருந்தாலும் எப்படியும் வாழ்வில் வெற்றி பெற்றே தீர வேண்டுமெனும் தாகமும் வெறியும் உள் மனதில் கொழுந்து விட்டெரியத் தொடங்கியது.அதன் பயனாக ‘நைட்ரோகிளிசரின்’ எதனால் ஆய்வுக்கூடத்தில் வெடிக்கிறது என்பதை ஆராய்ந்தார்.அது வைக்கப்பட்டிருக்கும் பெட்டியிலிருந்து வெளியே வருவதே அதற்குக் காரணம் எனக் கண்டார்.
இவ்வாறு வெளிவருவதைத் தடுக்க அதனைச் சுற்றி ‘கைசெல்கார்’ என்ற பொருளைக் கொண்டு மூடினார்.அது வெளியேறும் நைட்ரோகிளிசரினை தன்னுடன் ஈர்த்துக் கொள்ளும் தன்மை கொண்டதால் அது வெடிக்காமல் பாதுக்காப்பாக இருந்தது.மேலும் நைட்ரோகிளிசரின் மருந்தினை திடப்பொருளாகவும் மாற்றினார்.அதற்கு ‘டைனமைட்’ என்று பெயரிட்டார்.
இந்த நிலையிலும் அது பாதுகாப்பாக இருந்தது.மேலும் ‘பாலிசைட்’ என்ற பொருளையும் ‘நைட்ரோக்ளிசரினிலிருந்து’ உருவாக்கினார்.இது புகையை உண்டாக்காத டைனமைட்டாகும்.இவற்றைப் பயன்படுத்தி ஆழ்கிணறு தோண்டுதல்,பாறைகளைப் பெயர்த்தல்,குகைகளைக் குடைதல்,பாலம்,சாலை வசதி போன்ற பல நல்வழிகளுக்கு பயன்படுத்த முடியுமென அறிந்ததும்,பல நாடுகளும் இப்பொருளை போட்டிப் போட்டு வாங்கின.இதனால் நோபலுக்கு செல்வம் குவியத் தொடங்கியது.இருந்தாலும் இவ்வெடி பொருளை அழிவுக்கு உபயோகப்படுத்தக் கூடாது.நல்வழிக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டுமெனவும் அறிவுரையாற்றினார்..
தான் சம்பாதித்த 92 மில்லியன் டாலர் பணத்தை ‘நோபல் அறக்கட்டளை’ என்ற பெயரில் முதலீடு செய்தார்.அதில் வரும் வருமானத்தை எடுத்து உலகில் தலைசிறந்த மருத்துவர்,இயற்பியல்,வேதியல்,இலக்கியத்தில் சிறந்தவர்கள் ,அமைதிக்காக அரும்பாடு பட்டவர் போன்றோருக்கு வழங்க ஏற்பாடு செய்தார்.அதன்படி 1901 ஆம் ஆண்டு முதல் ‘நோபல் பரிசு’ வழங்கப்பட்டது..
இவ்வளவு சிறந்த மாமனிதர் 10.12.1896 தனது 63 வது வயதில் உயிரிழந்தார்.அவர் நினைவு தினத்திலேயே வருடந்தோறும் இப்பரிசு வழங்கப்படுகிறது..
பயனுள்ள பதிவு. இக்கல்லூாி வலைப்பதிவில் முதலாவதாக இடுகையிட்ட மாணவி என்ற பெருமையைப் பெருகிறீா்கள் வைசாலி.
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்.
நன்றி ஐயா..தங்களின் தூண்டுதலே எனது முன்னேற்றமும் முயற்சியும் ஐயா..
பதிலளிநீக்கு