செவ்வாய், 21 ஜனவரி, 2020

மனம் மாறவில்லை

காலங்கள் மாறினாலும்
கனவுகள் மாறினாலும்
என் கடமைகள் மாறினாலும்
உன்னை நினைத்த
என் மனம் மட்டும் மாறவில்லை

முத்து

சிப்பியின் வயிற்றில் பிறந்த முத்தே
கடல் அலையைத் தழுவி விளையாடி
நிலவின் வடிவம் பெற்ற
மின்னிய ஒலியுடன் கரை சேர்ந்து
நூலுடன் நட்பினால் இணைந்து
பெண்ணின் கழுத்தில் அணிகலனாய்த் திகழ்கின்றாய்

ஈ.கன்னிகா
இளங்கலை மூன்றாமாண்டு ஆங்கிலம்

மலர் முகம்

அல்லியைப்போல் முகம் மலர்ந்தது
சிவப்பு ரோஜாவைப்போல் இதழும்
சங்குப் பூவைப்போல் காதுகளும்
முருங்கைப் பூவைப்போல் மூக்கும்
மொட்டுகளைப்போல் இருவிழிகளும்
முத்து மல்லியைப்போல் பற்களும்
மலர் இதழ்களில் விழும் கோடுகளைப்போல் நெற்றியில் வாக்கும்
வண்ணமலர் எல்லாம் பெண்ணின் முகம் ஆகும்

ஈ.கன்னிகா
இளங்கலை மூன்றாமாண்டு ஆங்கிலம்

மதிமுகம்

வெள்ளைத் தாமரை விரிந்த முகம்போல நிலவு வந்தது
மேகக்கூட்டம் வானில் படர்ந்து நின்றது
உதிர்ந்த முத்துகள் விண்மீனாய்ச் சிதறின
சுற்றிலும் கார் இருள் சூழ்ந்திருக்க
விண்மீன்கள் கோலம் இட்டிருக்க
இரவு வந்தது புவியை உறங்கவைக்க

ஈ.கன்னிகா
இளங்கலை மூன்றாமாண்டு ஆங்கிலம்

சாலை

நாட்டில் என்ன மாறியது?
நாட்கள் மட்டும் ஓடியது
நாம் நடப்பதற்குச் சாலையா?
நம்மை அழிப்பதற்குச் சாலையா?

ஈ.கன்னிகா
இளங்கலை மூன்றாமாண்டு ஆங்கிலம்

கதிர் அறுப்போம்

காத்திருந்து நாத்து நட்டு
ஏர்பிடித்து காட்டில் களையெடுத்து
நீர் பாய்ச்சி உரம் போட்டு
கண்ணைப்போல் நெல்மணியைப் பார்த்து
மூன்று திங்கள் காத்திருந்து
முதல்நாள் அன்று கதிர் அறுத்து
உயிரைப்போலப் பயிரைக் காத்து
ஊரோடு சேர்ந்து உண்ணலாம்

ஈ.கன்னிகா
இளங்கலை மூன்றாமாண்டு ஆங்கிலம்

மழலைச் செல்வம்

தாயின் கருவறையில் உருவாகி
தங்கத் தாமரைபோல் முகம்மலர்ந்து
முத்துப் பற்களில் சிரித்து
முல்லை வண்ண வடிவம் கோர்த்து
கடல் அலையாக தவழ்ந்து
கொடியினைப் போலக் கைகளை நீட்டி
தேனில் நனைந்த பழத்தையும்
நிலவைப் பிழிந்துவைத்த பாலையும்
மேலே கிண்ணத்திலே உண்ண வா
என் அன்பு மழலைச் செல்வமே

ஈ.கன்னிகா
இளங்கலை மூன்றாமாண்டு ஆங்கிலம்