புதன், 7 பிப்ரவரி, 2018

நவீன இந்தியாவின் சிறப்பு அம்சங்கள்...



ரூபாய் மாற்றம்.
ஜி.எஸ்.டி
ஆதார் அட்டை அமைப்பு.
ஜல்லிக்கட்டு தடை.
தமிழ்நாட்டின்  முதலமைச்சர்கள்.(குழப்பம்)
அனிதா மரணம்.
அம்மா இட்லி சாப்பிட்டாரா. ?இல்லையா.?
தர்மகோல் சாகசம்.
விவசாயிகள் மரணம்.
கூத்தாடிகளும் அரசியலில்.
ஜியோ சிம் அதிரடி சலுகைகள். 
+1 பொதுத் தேர்வாக அறிவிப்பு.
ஸ்மார்ட் ரேசன் கார்டு. 
10 இலட்சம் சம்பளம் பெறுபவர்களுக்கு ரேசன் பொருட்கள் ரத்து.
பெரியார் விருது.
( டாக்டர் )தமிழிசை சவுந்தரராஜன்.
ஓட்டுநர் ஊதிய உயர்வு.
பேருந்து பயணச்சீட்டு விலை உயர்வு.
இலவச ஸ்கூட்டர்.
மதுபானங்கள் மூலம் இலாபம்.
பல்கலைக்கழக ஊழல்.
பட்ஜெட் தாக்கல்.

இன்னும் பல அம்சங்களை உள்ளடக்கியது டிஜிட்டல் இந்தியா. இது சிரிப்புக்கு அல்ல சிந்திக்க.. நமக்கு தெரிந்து இவ்வளவு நடைபெற்று வருகிறது. நமக்கு தெரியாமல் நமது உழைப்பை திருடும் கார்ப்பரேட் நிறுவனங்கள்,அரசியல்வாதிகள், அரசு மற்றும் ஊடகங்கள்.. இவற்றிற்கு விலை போன மக்கள்..

இதுவா சுதந்திர இந்தியா. ?
இதற்கு ஆங்கிலேயர் ஆட்சியிலே  இருந்திருக்கலாம்..
ஊழல் இலஞ்சம் இலாபம் கொலை கொள்ளை.. இன்னும் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் என்று தெரியாமல் ஆட்டு மந்தையை போல ஒரு வாழ்க்கை..

இந்தியா வல்லரசு பிறகு முதலில் இந்தியாவில் நல்லரசு தான் முக்கியம்..மாற்றத்தின் மாய நிறங்களை கண்டறிய முற்படுங்கள்.

ஞாயிறு, 4 பிப்ரவரி, 2018

மக்களின் கைத்தட்டல்

கேட்டு
மெய்மறந்து
சுவைத்திருப்போம்
எத்தனையோ
ராகங்கள்
தாளங்களை.....
இருந்தாலும்
மகிழ்ச்சியின்
எல்லைக்கே
கொண்டு
செல்லும்
மறக்க
முடியாத
ஓசை.....

# மக்களின் கைத்தட்டல் #

----மு. நித்யா.

ஞாயிறு, 28 ஜனவரி, 2018

வழி செல்வோம்

                                     வழி செல்வோம்

நாம் அனைவரும் இந்த உலகிற்க்கு ஒரு காரணமாக தான் வந்திருப்போம். சில நபர்கள் அந்த காரணத்தை கண்டறிந்து நல்ல ஒரு சமுதாயத்தை உறுவாக்குவதற்க்காக உழைத்து உயிர் துரந்திருப்பர் சிலர் அந்த காரணங்களையெல்லாம் அறியாமலேயே செத்து மடிவர். சிலர் தான் உண்டு தன் வேலை உண்டு என்றிறுப்பர். மனிதனாக பிறந்தால் நாட்டிற்கும் வீட்டிற்க்கும் ஏதாவது செய்வதே அவனது தலையாய கடமை. இதனை நம்மில் சிலர் தெரிந்திருப்பர், சிலருக்கு இதனை பற்றி அக்கறை இல்லை. நாட்டில் உள்ள இளஞர்களுக்கு நல்ல பல கருத்துக்களை எடுத்து சென்று சேர்க்க வேண்டியது மூத்தோரின் கடமை. ஆனால், இங்கோ, கூத்தாடிகளின் பின் சென்று வாழ்கையையும் நாடகம் போல் போலியாக அற்த்தம்மற்றைவயாக வாழ்ந்து வருகிறோம். யார் உண்மையான வீரர்கள்,, யாரை உண்மையாக மதிக்க வேண்டும், ஏன் நம் நாடு இந்த நிலமையில் உள்ளது?அதை திருத்துவது யாருடைய கடமை?என்று நாம் நமக்குள் கேட்டுக்கொள்ள வேண்டும். கேள்வி கேட்க்க வேண்டும் என்று அன்று சான்றோர் பெறுமக்கள் கூறுவது ஒரு தெளிவான பார்வை கிடைக்கவே!!! சிந்திப்பீர்! செயல்படுவீர்!


                                                

மனிதானாக எந்த ஒரு விஷயத்தை நாம் மனதில் கொள்ள வேண்டும்?

மனிதானாக எந்த ஒரு விஷயத்தை நாம் மனதில் கொள்ள வேண்டும்?


மனிதனாக அனைத்து உயிரிணங்களுக்கும் சிரசமமான அன்பினைக்காட்ட வேண்டும்.தெருவில் செல்லும் நாயோ, விட்டில் வளற்க்கும் பெர்ஷியா பூனையோ?அனைத்தும் இந்த மண்ணில் சம உரிமை பெற்றுதான் வாழ நம்மை போல வந்திருக்கிறன. ஒருவர் படிப்பில் சரியாக இல்லை என்ற காரணத்திள்காக அவரை ஒதுக்குவது சரியல்ல. நாம் செய்யும் அனைத்து செயல்களிலும் மனிதநேயத்துடன் நடந்துகொண்டாலே போதும் இந்த உலதில் அனைத்து பிரச்சணைகளுக்கும் தீர்வு கிடைக்கும்.நம்பிக்கையை உடைப்பது மிகவும் கொடுமையான விஷயம்.