புதன், 24 ஜனவரி, 2018

உறவுகள்


உன்னைத் திட்டினாலும் அடித்தாலும் உன்
  நலம் நாடும் தந்தை
நீ அழும் போதெல்லாம் உன்னுடன்
  சேர்ந்து அழும் தாய்
என்றும் உனக்காகவே பேசும் தங்கை
  நீ விலகி விலகிப் போனாலும்
  உன் அன்பைத் தேடும் தம்பி
நீ விழும் போதெல்லாம் தோல்
  கொடுக்கும் தோழிகள்
உன்னை நல்வழிப்படுத்தி 
  உயர வைக்கும் ஆசிரியர்கள்
உன் வெற்றியைக் கண்டு 
  பெருமிதம் கொள்ளும் உறவுகள்
இத்தனை உறவுகள் இருக்கும் போது
உன்னை அழவைக்கும் காதல் எதற்கு..?       
                                
தாமரைச்செல்வி                  
            முதலாம் ஆண்டு கணிதவியல் ஆ பிரிவு

காலங்கள் கடந்த நட்பு




கண் இமைக்கும் நேரத்தில்
சேர்வது நட்பல்ல!
கண் இமை மூடும் வரை
சேர்ந்து இருப்பது தான் நட்பு!
எங்கேயோ பிறந்தோம் அடிக்கடி பேசிக்கொண்டோம்
உறவுகளுக்கு மேல் உயிர் ஆனோம்
காலங்கள் கடந்துப் போனாலும்
                                  கடைசி வரைத் தொடர வேண்டும் நம் நட்பு.                                          

    நந்தினி                       
    முதலாம் ஆண்டு கணிதவியல் ஆ பிரிவு

கேள்வியோடு பெண்...



விதையாய் விதைத்து வளர்ந்து
பெண் விடுதலை அல்ல
விதையாய் விதைத்து மரமாய்
வளர்ந்து பெண் வன்கொடுமை
காலத்தோடு வளர்ந்த நாகரிகமுள்ள
சமூகம் ஏன் நாகரிகம்
இழந்து பெண் இனத்தை தீமை
என்ற தீயால் கொடுமைச் செய்கிறது
கேள்விகளோடு அலைந்து விடையின்றி
தவிக்கும் பெண் இனம்.

ச.ஐஸ்வர்யா
முதலாமாண்டு ஆங்கிலத்துறை

சனி, 20 ஜனவரி, 2018

சட்டமன்றம்

சாமானிய
மக்களால்
என்றுமே
விலைக்கு
வாங்க
முடியாத
ஒரே
இடம்

# சட்டமன்றம் #

---மு. நித்யா