வெள்ளி, 26 ஆகஸ்ட், 2016

ஹார்ஸ் அன்ட் தி டாங்கி

                              ஹார்ஸ் அன்ட் தி டாங்கி
ஒரு ஊரில் மரவர் ஒருவர் தன்னிடம் குதிரையும் கழுதையும் வைத்திருந்தார்.போர்கலத்தில் மட்டுமே குதிரையை பயணபடுத்துவார்.போர் இல்லாத நாட்களில் கழுதையை பொதி சுமக்க வைத்து பணம் பார்பார்.இந்த கழுதைக்கு குதிரைமேல் பெறாமை``தினமும் படினமாக உழைப்பது நான் அனால் என் உரிமையாளரும் அந்த குதிரையும் அதில் நிறைவாக இருக்கின்றன’’.என்று எண்ணியது.

அப்போழுது அருகே இருந்த ஒரு நாட்டில் போர் செய்வதற்கு குதிரையை அழைத்து சென்றனர்.இந்த கழுதை அதைக் கண்டு கேளி செய்தது.ஆனால் அடுத்த சிஇல நிமிடங்களிளேயை போர் ரத்து பெற்று குதிரை வீடு திரும்பிது.ஆனால், இந்த கழுதை வணிகர் வீடிர்க்கு பொதி சுமக்க அனுப்பிவைக்கப்பட்டது.இச்சிறுகதை மூலம் நமது சந்தோஷம் என்பது அடுத்தவர்களை பாதிக்காதவகையில் இருக்க வேண்டும் ``நிலையாமை’’ என்பதை அனைவரும் புரிந்து கொள்ளவேண்டும்.

                                          தரவு(100 tiny tot bed time stories)

சேவ் தி இயர்த்(save the earth)

      சேவ் தி இயர்த்(save the earth)

கடவுள்``உலகம்’’என்ற ஆழகான ஒரு இடத்தை உருவாக்கினார்.அதனை அவர் அழகாகவும்,பசுமையாகவும் சந்தோசமாகவும் இருக்கும்படி வடிவமைத்தார். அதில் படர்ந்த புல் நிலப்பரப்பும் வண்னமயமான புஷ்பங்களையும் படைத்தார்.பிறகு அதில் பறவைகள்,விலங்குகள் மற்றும் காடுகள்  போன்றவற்றை அறங்கேற்றினார்.அதற்க்கு பிறகு மனிதனை உருவாக்கி அவரது அற்புதங்களை மனிதனை காக்கும்படி ஆனையிட்டார்.

கடவுள் படைத்த்திலேயே மனிதனை தனது படைப்புகளுள் உயர்ந்த படைப்பால் மனிதை கருதனார்.எனினும் கடவுளுக்கு மனிதன் மீது சிறிது சந்தேகம் ஆகையால் நான் படைத்த இந்த உலகை பாதுகாப்பாக காக்காவிடில் நீங்கள் தன்டிக்கப்படுவீர் என்றார்.நான் படைத்ததை காட்டிலும் நீங்கள் அதனை அழகாக பாதுகாக்கவேண்டும் என்று ஆனையிட்டிருந்தார்.ஆனால்,உலகிற்க்கு வந்த பிறகு மனிதன் அதனை எல்லாவற்றையும் மறந்து கொள்ளை,பொய் மற்றும் இதற தவறுகளை செய்யத்தொடங்கினான்.கடவுள் மனிதனை தண்டிக்க முடிவு செய்தார்.அதற்க்காக முழூ உலகையும் பாலைவனமாக மாற்றினார்.அப்பொழுது,மனிதன் கடவுளிடம் தயவுகூற்ந்து கேட்டு இனி எந்த தவரும் இழைக்க மாட்டேன் என்று கூறி மன்றாடினான் கடவுள் அவன் வாக்கின் மீது நம்பிக்கை கொண்டதனால்தான் நமக்கு இன்னும் சில பச்சை நிலப்பரப்புகள் தென்படுகின்றன.

                              Tiny tot bed time stories….

புதன், 24 ஆகஸ்ட், 2016

தமிழ்

            
Image result for தமிழ்

                தமிழ்

தமிழ் எங்கள்    மூச்சாக   வேண்டும்!

தமிழ் எங்கள்    பேச்சாக வேண்டும்!

தமிழ் கொண்டு உறவாட வேண்டும்!

தமிழ் கொண்டு உரையாட வேண்டும்!

தமிழ் வாழ நாம் வாழ்த்த வேண்டும்!

தமிழ் மானம்  நாம் காக்க வேண்டும்!

தமிழ் என்றும்   உயிர் வாழ வேண்டும்!

தமிழ் என்றும் உயர்வாக வேண்டும்!

தமிழ் எங்கள் தவமாக வேண்டும்!

தமிழ் எங்கள் வரமாக வேண்டும்!             

தமிழ் பெயர்கள் நாம் சூட்ட 
வேண்டும்!          

தமிழ் பாடி தாலாட்ட வேண்டும்!                

தமிழ் நூல்கள் நாம் கற்க வேண்டும்!              

தமிழ் கலைகள் நாம் பேண வேண்டும்!    

தமிழ் கவிதை நாம் படைக்க வேண்டும்!



ஞாயிறு, 21 ஆகஸ்ட், 2016

பெரியபுரானம்(ஒரு சிறு பகுதி) {நாடகப் பகுதி}

                              பெரியபுரானம்(ஒரு சிறு பகுதி) {நாடகப் பகுதி}
இதனை இயற்றியவர் சேக்கிழார்.இதில் சிவன் மீது மிகுந்த பற்று கொண்ட அரசனான மெய்ப்பொருள் நாயனார்  நடந்து நிகழ்வை குறிப்பிடுகின்றார்.இவர் மலாடர் மன்னர்.மலை போன்ற உடல் வடிவையும் போற்திறமும் கொண்டவர். கண்னை மூடினால் இவர்க்கு சிவன் உறுவத்தையே காண்பார். சிவன்னடியார்கள் மூலம் சிவனை பார்பவர்.இதில் எதிரி  அரசன் மெய்ப்பொருள் நாயனாரை எப்படி வெல்கிறார் என்பதே இப்பக்குதியில் கூறியிருப்பார்.

கையில் உடம்பில் திருநீறு பூசி கத்தியை ஓலைச்சுவடிக்குள் மறைத்து ஒரு கையில் புத்தகம் ஏந்தி வெளியே சிவனடியார் போல் தோற்றம் அளித்து உள்ளே கெட்ட எண்ணம் கொண்டு தெருவில் மெய்ப்பொருள் நாயனாரைக் காண தனியே வருகிறான்.
மெய்காவலன்;மன்னர் அந்தபுரத்தில் உறங்கிக் கொண்டிருக்கிறார்.தங்களை இப்போது அனுமதிக்க முடியாது.
முத்தநாதன்; உனக்கு நான் சென்னா புரியாது?அவருக்கு சிவ உறுதியை பற்றி கூற நான் வந்திருக்கிறேன்.நீ வழிய விடு.
(மன்னரும் மனைவியும் சத்தத்தில் எழுந்தன்னர்)
முத்தநாதன்; நான் உனக்கு ஒரு ஆகம நூல் கொண்டு வந்திருக்கிறேன். இதுவரை யாரும் கூறாத ஒன்ற்றை நான் உனக்கு செல்லிதர போகிறேன்.
ஆனால் அதற்கு முன் நறுமண மலர் அனிந்த இந்த பெண்னை இந்த இடத்தை விட்டு அனுப்பு.
மன்னர் ;நீங்கள் என்னை பார்க வந்ததில் எனக்கு ரொம்ப மகிழ்ச்சி.நான் என்ன பாக்கியம் செய்தேனோ?
(என்று கூறி வணங்கும்போது மன்னரை கத்தியால் மன்னனை குத்தினான்)
மெய்காவலன்;என் மனதில் எதோ சரியாக படவில்லையே?
மன்னர்; சிவனே ! சிவனே !
மெய்காவலன்;நயவஞ்சகா.என் மன்னனை கொன்ற உன்னை இப்பொழுதே என் வாளால் அழிக்கிறேன்.

மன்னர்; தத்தா! அவர் தம்மவர்!த திருநீறு பூசியவர்களை நாம் எதும் செய்யக்கூடாது.நீதான் இவரை ஊர் எல்லையில் பத்திரமாக சென்று சேர்க்க வேண்டும்.ஊர் மக்களுக்கு இது மன்னர் முடிவு என்று எடுத்துக் கூறு.
மெய்காவலன்;தங்கள் ஆணைப்படியே மன்னா.(மக்கள் முத்தநாதனை தாக்க முயற்சிகளை  தட்டுத்தான் மெய்காவலன்)
முத்தநாதன்; நான் இந்த இடத்தில் இருந்தால் என்ன ஆகுமோ என்று எனக்கு தெரியாது,நன்றி.
மெய்ப்பொருள் நாயனார்  ;நான் இன்று இறப்பது விதியாக கூட இருக்கலாம்.
(தன் உயிர்போகும் நிலையிலும் தன் கொள்கையை விடாமல் இருந்தார் மெய்ப்பொருள் நாயனார் ).



வெள்ளி, 19 ஆகஸ்ட், 2016

வீட்டுக்கு ஒரு செடியாவது வளர்ப்போம்...





மரத்தையெல்லாம் அழிச்சாச்சு. இனி, நல்ல காத்துக்கு எங்கே போறது? இனிமே மரம் நட்டாலும் அது வளர்ந்து முழு மரமாகிறதுக்கு 20, 30 வருஷங்கள் ஆகுமே’ என்று சங்கடப்படுபவர்களே... உங்களுக் காகவே இந்த நல்ல செய்தி! 

வீட்டிலேயே வளர்க்கக் கூடிய சில குறுஞ்செடிகளில் காற்றில் உள்ள நச்சுக்களைச் சுத்தப்படுத்தும் குணம் நிரம்பி இருக்கிறது என்று நாசா விஞ்ஞானிகளின் ஆராய்ச்சி கூறுகிறது. தமிழ்நாட்டுச் சீதோஷ்ண நிலையில் வாழும் தன்மையையும், அதிக நன்மை களையும் கொடுக்கும் இந்தச் செடிகளைப் பற்றிய அறிமுகம் இதோ...

கற்றாழை (AloeVera): மருத்துவக் குணங்கள் நிறைந்துள்ள கற்றாழை, காற்றில் உள்ள ஃபார்மால்டிஹைட் என்னும் வேதிப் பொருளை நீக்கும். சருமத் தீப்புண்களுக்கும் மருந்தாகப் பயன்படும்!

சீமை ஆல் (Rubber plant): வெயில் படாத இடங்களில்கூட வாழும் தன்மைகொண்டவை. அதிகமாக அசுத்தக் காற்றை உள்ளிழுத்து அதிகப்படியான ஆக்சிஜனை வெளியிடும்.

வெள்ளால் (Weeping Fig): காற்றின் நச்சுக்களை நீக்கி சுற்றுப்புறத்தின் ஆக்சிஜன் அளவை அதிகப்படுத்தும்.

மூங்கில் பனை (Bamboo Palm) : காற்றில் கலந்துள்ள ஃபார்மால்டிஹைட் நச்சுக்களை நீக்குவதோடு இயற்கையான ஈரப்பதனியாகச் செயல்படும்.

ஸ்னேக் பிளான்ட் (snake-plant): நைட்ரஜன் ஆக்ஸைடு மற்றும் ஃபார்மால்டிஹைடைக் கிரகித்து ஆக்சிஜனை வெளிப்படுத்தும். வறண்ட சூழ்நிலை களில்கூட வாழும் தன்மைகொண்டவை.

கோல்டன் போட்டோஸ் (golden pothos): நாசா விஞ்ஞானிகளின் அறிக்கைப்படி காற்றைச் சுத்தப்படுத்தும் தாவரங்களின் பட்டியலில் மூன்றாம் இடம் பிடித்திருக்கும் இந்தச் செடி, கார்பன் மோனாக்சைடு வாயுவை உறிஞ்சிக்கொண்டு காற்றின் அளவை அதிகரிக்கச் செய்யும்!

வீட்டுக்கொரு மரம் வளர்ப்போம். முடியாதபட்சத்தில், இப்படிப்பட்ட செடிகளையேனும் வளர்ப்போமே!