வியாழன், 23 ஜூன், 2016

சர் ரோஜர் அட் சர்ச்


                                                            சர் ரோஜர் அட் சர்ச்
                                    --ஜோசப் அடிசன்
பதிணெட்டாம் நூற்றாண்டின் கட்டுரையாளர்களுள் அடிசன் முக்கியமான பங்களிப்பவர்.அவரது கட்டுரைகள் அனைத்தும் தன் நன்பரால் நடத்தப்படும் ``ஸ்பேக்டேடர்`` வார இதழுக்கு கொடுப்பார்.இவர்களது கற்பனை கதாப்பாத்திரமான ``சர் ரோஜர் டி கவர்லி`` படிப்பவர்களிடையே புகழ் பெற்ற ஒன்றவராவார்.
            ஜோசப் அடிசனின் இக்கட்டுரையில் புனித நாளை நாட்டுப்புற மக்களும் ரோஜராலும் எவ்வாறு உணரப்படுகிறது என்று கூறியிருப்பார்.சர் ரோஜர் ஒரு சிறந்த பக்தர்.பல புனித புத்தகங்கள்,அழகான பல்பிட் துனி மற்றும் கலந்துரையாடல்களுக்கான மேஜை போன்ற பலவற்றை தேவாலத்திற்கு அளித்து அதற்க்கு மெழுகூட்டினார்.தனது வேலையாட்களிடம் புத்தகம்,முட்டியிடுவதற்கு அழகிய துணி மற்றும் கலந்துறையாடல்களுக்கான மேஜை போன்ற பலவற்றை தேவாலத்திற்கு அளித்து அதற்க்கு மெழுகூட்டியுள்ளார்.தனது வேலையாட்களிடம் ப்ராத்தனை புத்தகம், முட்டியிடுவதற்கு அழகிய துணி,மற்றும் ஒரு பாடகரயும் தனது பணியாளர்களுக்கு சரியான முறையில்``சாம்ஸ்``பாட நியமித்தார்,
ரோஜர் அந்த நிலத்தின் தலைவராயின் அந்த மக்கள் கீழ்பணிந்து நடப்பர். ப்ராத்தனையின் போது ரோஜரின் சில சிறப்பு அம்சங்களை எழுத்தர் இங்கு குறிப்பிடுகிறார்.ஒரு பாடலை நீலமாக பாடுவதும்,மற்றவர்கள் அமர்ந்திருக்கும்போது எழுந்து நின்று அந்த ப்ராத்தனைக்கு வராதவர்களை தன் பணியாட்கள் உதவியாலும் கவனிக்கிறார்.பின்னர் மறுநாள் பிராத்தணை முடிந்த பின் வெளி வரும்போது வராதவர்களின் தந்தை அவர்களது மனைவி, மக்கள் உடல் நலத்தை விசாரித்து காரணம் கொள்வார்.

            மேலும் சில சிறுவர்களுக்கு பைபிளை உள்நுழைப்பதற்கு சில போட்டிகள் வைத்து பரிசலிப்பர்.இப்பொழுது பணியில் இருக்கும் குமாஸ்தாவிற்கு வருடன் ஐந்து பவன்ஸ் சம்பளம் உயர்த்தி பணியில் அதிகமாக ஈடுபடுத்துவார்.மேலும் அவர் இறந்த பின் அவரை விட சிறந்த ஒருவரை நியமிப்பார்.ரோஜர் வாழும் பகுதிக்கு அருகாமையிலேயே பார்சன், ஸ்குவைரி என்ற இறு பிரிவினரும் அடிக்கடி வாக்குவாதப் செய்து கொணெடே இருப்பர்.ஸ்குவைரி இண மக்கள் பார்சன் இணத்தை பழிவாங்க தம் மக்களை நார்தீகவாதியாக மாற்றுவர்.பார்சன் இணத்தவர் இவர்களைப் புறங்கூறுவர்.இவர்களை எழுத்தர் ச்சேப்லியன் மற்றும் சர் ரோஜர் இடையிலான நட்புறவைக் கொண்டு தொடர்பு படுத்துகிறார்.அமைதியாக இருப்பவரே என்றும் சிறந்தவர் என்கிறார். 

புதன், 22 ஜூன், 2016

மாய மந்திரம்! இந்திர ஜாலம்!

                                                                     




Image result for maaya jalam inthara jalam photo





மாயா ஜாலாம் தொடர்கிறது..   

இதுபற்றி எண்ணி எண்ணிக் கவலைப் பட்டுக் கொண்டிருந்தபோது, வித்யேஸ்வரா என்ற மந்திரவாதியின் தொடர்பு கிடைக்கிறது. அவன் உதவி செய்ய முன்வருகிறான். இருவரும் ஒரு திட்டம் தீட்டுகின்றனர். அதன்படி அவந்திசுந்தரி தனது தந்தை மானசாரனிடம் சொல்லி ஒரு மாயாஜாலக் காட்சியை ஏற்பாடு செய்கிறாள். அதில் அற்புதமான காட்சிகள் வருகின்றன.

தாரை ,தம்பட்டைகள் முழங்குகின்றன. ஒளி வெள்ளம் பாயும்போது விண்ணிலிருந்து பாம்புகளும் கழுகுகளும் இறங்குகின்றன. இரண்டு கழுகுகள் இரண்டு பாம்புகளைப் பிடித்துச் செல்லுகையில் மற்ற பாம்புகள் விஷம் கக்கி அரண்மனையை வலம் வருகின்றன. விஷ்ணுவானவர், நரசிம்ம வேடத்தில் வந்து இறங்கி ஹிரண்யகசிபுவைக் கிழித்து வதம் செய்கிறார். மக்கள் எல்லோரும் திகைப்புடன் பார்க்கையில் மந்திரவாதி மெதுவாக மன்னனிடம் சொல்கிறான்:
                                             (தொடரும்…)

நீண்ட நேரம் கணினியை பயன்படுத்துவோருக்கு..!!!





அன்றாடம் நீண்ட நேரம் கணினியை பயன்படுத்துவோருக்கு உடலில் சோர்வு,பின் கழுத்து,முதுகு மற்றும் தலைவலி,கைகள்,மணிக்கட்டு மற்றும் தோள்பட்டை வலி போன்ற  பாதிப்புகள் ஏற்படுகின்றன.தொடர்ந்து கணினித் திரையைப் பார்த்துக் கொண்டிருப்பதால் இமைகளில் சிமிட்டல் குறைந்து கண்கள் உலர் தன்மை அடைகின்றன.இதனால் கண்களில் உறுத்தல்,எழுத்துகள் இரண்டாகவும் பலவாகவும் தெரிதல்,பார்வைத் தெளிவற்றுத் தோன்றுதல் போன்ற சிரமங்கள் ஏற்படுகின்றன.இந்நிலைகளை தவிர்க்க என்ன செய்யலாம் என்று பார்க்கலாம்.

செவ்வாய், 21 ஜூன், 2016

மாய மந்திரம்! இந்திர ஜாலம்!






மாயா ஜாலாம் தொடர்கிறது..                
           இந்த இந்திர ஜாலம் பற்றி 1300 ஆண்டுகளுக்கு முன் தண்டி என்ற கவிஞர் எழுதிய தசகுமார சரித்திரம் என்ற வடமொழிக் கதைப் புத்தகத்தில் ஒரு சுவையான கதை வருகிறது.
சுவையான மாய மந்திரக் கதை
மகத நாட்டில் ராஜவாஹனன் என்ற இளவரசன் வசித்து வருகிறான். அவனுடைய தந்தையை மாளவ மன்னன் மானசாரன் தோற்கடித்து காட்டுக்கு விரட்டி விடுகிறான். ராஜவாஹனன் தாய் தந்தையரின் அனுமதி கேட்டு நாட்டைச் சுற்றிப் பார்க்கப் புறப்படுகிறான். அவனுடன் வந்த பத்துப் பேரையும் இடையில் தவற விடுகிறான். பின்னர் அவன் மட்டும் தனியாகப் பயணம் செய்து உஜ்ஜையினி நகரை அடைகிறான். அதுதான் மானசார மன்னனின் தலை நகரம். அந்த மன்னனுக்கு அவந்திசுந்தரி என்ற அழகிய மகள் உண்டு.எதிர்பாராத விதமாக உஜ்ஜையினி நகரில் அவனுடைய பழைய நண்பனைச் சந்திக்கிறான். அவன், அவந்தி சுந்தரியின் தோழியைத் திருமணம் செய்துகொண்டு செல்வாக்குடன் விளங்குபவன். அவர்கள் மூலமாக அவந்தி சுந்தரியைச் சந்திக்கிறான். காதல் மலர்கிறது. ஆனால் தந்தையைக் காட்டிற்கு விரட்டிய மன்னனின் மகளைக் காதலிப்பதால் வெளிப்படையாக எதுவும் செய்ய முடியாது.இதுபற்றி எண்ணி எண்ணிக் கவலைப் பட்டுக் கொண்டிருந்தபோது, வித்யேஸ்வரா என்ற மந்திரவாதியின் தொடர்பு கிடைக்கிறது. அவன் உதவி செய்ய முன்வருகிறான். இருவரும் ஒரு திட்டம் தீட்டுகின்றனர். அதன்படி அவந்திசுந்தரி தனது தந்தை மானசாரனிடம் சொல்லி ஒரு மாயாஜாலக் காட்சியை ஏற்பாடு செய்கிறாள். அதில் அற்புதமான காட்சிகள் வருகின்றன.


                                                                (தொடரும்..)

திங்கள், 20 ஜூன், 2016

நோபல் பரிசு



       Øஇது உலகின் மிகப் பெரிய விருதாகக் கருதப்படுகிறது.

     Øஇலக்கியம், இயற்பியல், வேதியியல், மருத்துவம், உடலில், சமாதானம் மற்றும் பொருளாதாரம் என்னும் 6 துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு வருடந்தோறும் இவ்விருது வழங்கபடுகிறது.

 Ø ஆல்பிரட் நோபல் என்பவர் இவ்விருதை உருவாக்கினர். இவர் டைனமைட் என்ற வெடி பொருளைக் கண்டு பிடித்தவர்.

 Ø1900ல் “நோபல் அறக்கட்டளை” நிறுவப்பட்டது.

 Ø இந்த விருதின் பரிசுத் தொகை 7.25 கோடி 1901 ஆம் ஆண்டு முதல் இவ்விருது வழங்கப்பட்டு வருகிறது.

 Øபொருளாதாரத்திற்கான நோபல் பரிசு 1969-ல் அறிமுகப்படுத்தப்பட்டது. இப்பரிசு சுவிடன் நாட்டின் மத்திய வங்கியால் தோற்றுவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

      Ø      இயற்பியல், வேதியியல், மருத்துவம், இலக்கியம், பொருளாதாரம் போன்ற துறைகளுக்கான நோபல் பரிசு “ ஸ்டாக் ஹோமில்” வழங்கப்பட்டு வருகிறது.

 Øஅமைதிக்கான நோபல் பரிசு பரிசு மட்டும் நார்வே நாட்டின் தலைநகரம் ஒஸ்லோவில் வழக்கப்படுகிறது.