செவ்வாய், 21 ஜனவரி, 2020

குழந்தை

மனதைப் பறிக்கும் பொன்நிறம்
விழிகளைக் கவர்ந்த உன் புன்னகை
செவிகளில் ஒலிக்கும் உன் சிறிய சொற்கள்
புதையலைப்போல் என் கையில்
கிடைத்த நீ என் செல்வா

ஈ.கன்னிகா
இளங்கலை மூன்றாமாண்டு ஆங்கிலம்

தென்னை மரமே

ஒற்றைக் காலில் நின்று உலகைப் பார்க்கிறது
தாகம் தீர்க்க இளநீர் தருகிறது
குடிசை அமைக்க ஓலையைத் தந்தது
தாயைப்போல் இளம் குருத்தில் இருந்தது
தேங்காயாக வளர்வதற்குப் பத்துமாதம்
பிள்ளைபோல் சுமந்த தென்னைமரமே

ஈ.கன்னிகா
இளங்கலை இரண்டாமாண்டு ஆங்கிலம்

நிலவே நீயும் ஒரு பெண்தானே

நிலவே நீ வானத்தில் மட்டும் உதிக்கிறாய்
நிலத்தில் வாழும் பெண்ணின் முகத்தில் உதிக்கிறாய்
இருண்ட வானில் ஒளியைக் கூட்டுகிறாய்
ஆனால் பெண் இருண்ட வீட்டில்
ஒளியேற்றி அன்பைக் கொடுக்கிறாள்
நீங்கள் இருவரும் ஒருவர் தானே
நிலவே நீயும் ஒரு பெண்தானே

ஈ.கன்னிகா
இளங்கலை மூன்றாமாண்டு ஆங்கிலம்

உன்னை

அலைகள் ஓடியது
நிலவைத் தேடியது
விழிகள் வாடியது
உன்னை நாடியது

ஈ.கன்னிகா
இளங்கலை மூன்றாமாண்டு ஆங்கிலம்

பேரழகி

பொன் நகை சூடாமல் இருந்தாலும்
உதட்டில் புன்னகை சூடியிருந்தாள்
உருவத்தில் அழகில்லை என்றாலும்
உள்ளத்தில் அன்பைக் கொண்டவள்
கருப்பு நிறத்தைக் கொண்டாலும்
கணிந்த மொழியைப் பேசுவாள்
காரணம் இன்றிச் சிரிப்பாள்
காரியத்தோடு நடப்பாள் என் அன்பு கண்ணம்மா

ஈ.கன்னிகா
இளங்கலை மூன்றாமாண்டு ஆங்கிலம்