வெள்ளி, 4 அக்டோபர், 2019

கருமை நிறக் கண்ணா

கருமேகம்தான் மழையை உண்டாக்கும்

கரும்புதான் சுவையை உண்டாக்கும்

கரங்கள்தான் உழைப்பை உண்டாக்கும்

கரும்பலகைதான் கல்வியை உண்டாக்கும்

கருமுடி தான் அழகை உண்டாக்கும்

கருநிறம் தான் ஈர்ப்பை  உண்டாக்கும்

கருவிழி தான் காட்சியை உண்டாக்கும்

கற்பு தான் பெண்மையை உண்டாக்கும்

இவையனைத்தும்
கருக்கொண்ட இடம் எங்கோ
அறியவில்லை

இடம் கொண்டது
உன்னில் தான் என் கண்ணா 

வியாழன், 3 அக்டோபர், 2019

எவன்

ஆளக் கற்றவன் மன்னன்

அடக்கக் கற்றவன் தலைவன்

ஆளாக்கியவன் தகப்பன்

அடைகாத்தவன் தோழன்

அருளியவன் சிவன்

இறுதியில் நம்மை அழைப்பவன் எமன் 

செவ்வாய், 1 அக்டோபர், 2019

பூ மகளே

பூமியின் வெப்பத்தினால்
பனிமலை உருகவில்லை ஏனோ

பூமகளின் வெட்கத்தினால்
படைத் தலைவனும் மிரளுகிறான்

உணர்வுகள் உள்ளத்தைத்
தெளிவடையச் செய்கின்றன

உன் கண்களோ
வீரத்தை உதிரியாய்ச் சரிக்கின்றன  

சங்க இலக்கியங்களில்அரிசிக்கு எத்தனை பெயர்கள் தெரியுமா?

அடிசில்
அமலை
அமிந்து
அயினி
அவி
அடுப்பு
உண்ணா
உண்
கூழ்
சதி
சாதம்
சொண்றி
சோ
துப்பு
தோரி
பருக்கை
பாத்து
புகர்வு
புழுங்கல்
புன்னகை
பொம்மல்
மடை
மிதவை
முரல்
வல்சி

திங்கள், 30 செப்டம்பர், 2019

பணிவு

எங்கு சென்றாலும் பணிவோடு நடக்கக் கற்றுக்கொள் 
ஏனெனில் பணிவே பல இடங்களில் பாராட்டைத் தேடித்தரும்....