புதன், 27 பிப்ரவரி, 2019

சிறிது சிரித்துவிடு

சிரிக்க மறந்தவன் எல்லாம்
சிறிது சிந்தித்து விடு
உன் வாழ்க்கையில் மட்டுமா
கஷ்டம் இருக்கிறது என்று
பின்பு புரிந்து கொள்வாய்
கஷ்டம் இன்றி வாழ்க்கை
இல்லை என்று
இஷ்டம் போல வாழ  வேண்டுமென்றால்
சிறிது கஷ்டப்படுவது ஒன்றும் தவறில்லை
இன்று கஷ்டத்தோடு கைகோர்த்துக் கொள்
நாளை வெற்றியே இஷ்டப்பட்டு
உன்னை வந்து அடையும்

செவ்வாய், 26 பிப்ரவரி, 2019

The Delight Of Life

Around me a big hall
With buds and blossoms
People in festive mood
Except two people-
Bride and groom
Facing a big stuffy strike
Without knowing each other
Have not such big conversation
So is this called as love??
Or a commitment??

என் கடினமான பாதை

என்னை சிதைத்த வாழ்க்கையை விட சிந்திக்க செய்த வாழ்க்கை
கடுமையாக இருந்தது, ஏன்
இந்த தவறினை இளைத்தேன் என்று
மணித்துளிகள் அனைத்தும் சிந்தனையில் கடந்தது, கடந்த பாதைகள் கடுமையாக இருப்பினும்
கற்றுக்கொடுத்த போதனைகள்
கசப்பாக இருப்பினும், தற்போதைய நிலைக்கு என்னை வலிமை படுத்தி இருக்கிறது, போதனைகளும் தற்போதைய நிலைக்கு கசப்பாக தெரியவில்லை.......

ஞாயிறு, 24 பிப்ரவரி, 2019

தமிழ் உணவின் சிறப்பு 🌶️🍋🥘


பொதுவாக நம் தமிழ் உணவில் சேர்க்கப்படும் ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு காரணம் உண்டு. அதுபோல தான் நம் இலையில் ஓரத்தில் உள்ள ஊறுகாய்கும் ஒரு அர்த்தம் உண்டு. ஆம் நமது வயிற்றில் சாப்பிட்ட உணவு செரிமானம் ஆக நம் வாயில் எச்சில் நன்றாக சுரக்க வேண்டும். அதனால் தான் இந்த பண்டம் இலையில் வைக்கப்படுகிறது ஏனென்றால் இதில் தான் காரம், உப்பு, புளிப்பு என்ற மூன்று விஷயங்கள் சேர்ந்து உள்ளன. மேலும் இவை அந்த காலத்தில் சுத்தமான நல்லெண்ணெய் மற்றும் கலபடம் இல்லாத பொருளை கொண்டு செய்து ஜாடியில் அடைத்து வைத்தனர் அது நீண்ட காலத்திற்கு கெடாமல் இருந்தன. ஆனால் இப்போது செய்யப்படும் ஊறுகாய் சுத்தம் இல்லாத பொருள்கள் மற்றும் வினிகர் சேர்க்கபடுவதால்  உடலுக்கு தீங்கு விளைவிக்கும். எனவே எந்த பொருளையும் அளவுக்கு மீறி சேர்த்து கொண்டால் ஆபத்து தான்.

வாகை🏆🏆🏆🏆

             

நம் வாழ்வில் வெற்றியை தேடி ஓடி கொண்டிருக்கிறோம் ஆனால் இந்த சில விஷயங்களை பின் பற்றினால் நிச்சயம் வெற்றி கிட்டும் என்பதை அனுபவத்தால் உணர்ந்த சில குறிப்புகள் இதோ
1. எந்த பொருளின் மீடும் பற்று கொள்ளாதே. அதற்காக குறிக்கோளை விட்டுவிடாதே.
2.யாரையும் சார்ந்து இருக்காதே. முக்கியமாக நண்பர்களை போல இருக்ககும்  வஞ்சகர்களை நம்பாதே.
3. தாய், தந்தை, இறைவன் இவர்களை தவிர வேறு யாரும் உனக்கு நல்லது எண்ண மாட்டார்கள் என்பதை புரிந்து கொள்.
4. காதல், காதல் மாயை இந்த இரண்டிற்கும்உள்ள வேற்றுமையை புரிந்து கொள்.
5.அறிவுரை கூறுபவர்கள் மீது கோபம் கொள்ளாமல் அதை கேட்க பழகு.
6.கோபம் ஏற்படும் நிலையில் கண்களை மூடி பெருமூச்சு விட்டு பின்பு கண்களை விழித்து புன்னகையுடன் அதை எ திர் கொள்.