வெள்ளி, 17 பிப்ரவரி, 2017

திறமைக்கான வரவேற்பு அழைப்பிதழ்..!!


கே.எஸ்.ஆர் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வருகிற 24.02.2017 அன்று வணிகவியல் மற்றும் வணிகக் கணினிப்பயன்பாட்டியல் துறை இணைந்து நடத்த இருக்கும் சாணக்கியா என்ற தலைப்பில் வினாடி வினாப் போட்டி நடைபெறவுள்ளது.வணிகவியல் துறையைச் சார்ந்த இளங்கலை மூன்றாமாண்டு பயிலும் மாணவிகள் மட்டுமே இப்போட்டியில் பங்கேற்கலாம்.போட்டியின் இறுதியில் பரிசுத் தொகையும், சான்றிதழும்  வழங்கப்படும்.

போட்டிகளுக்கான குறிப்பு; மாணவிகளுக்கு மட்டுமே அனுமதி உண்டு.தேநீர் வழங்கப்படும்.

முன்பதிவிற்கான கடைசி தேதி ; 21.02.2017


அனுமதி இலவசம்..   

                                         

வியாழன், 16 பிப்ரவரி, 2017

டாக்டர் பாஸ்டஸ்

 டாக்டர் பாஸ்டஸ்
                                          -கிருஸ்டோபர் மார்லோவ்

டாக்டர் பாஸ்டஸ் என்று நான் படித்த கதை எனக்குள் இருக்கும் பல குணங்களை வெளிக்கொனர உதவியது.இக்கதையில் ஜான் பாஸ்டஸ் என்பவர் ``விட்டன்பர்க்’’ என்ற நகரத்தில் பிறந்த மாபெறும் பல்துறை சார்ந்த மேதை.உலகில் இருக்கும் அனைத்து துறைகளையும் படித்து பின்னர் ``நீக்ரோமான்சீ’’ என்று சொல்லப்படும் கடவுளுக்கு எதிரான மாயக்கலையை கற்க முடிவு செய்தார்.தன் நன்பர்களின் உதவியால் அந்த கலையையும் அவர் கற்றார்.பின்பு அந்த மாயக்கலையை வைத்து கடவுளுக்கு எதிராக செயல்படும் ``லுசீஃபர்’’ என்ற பாதாலஉலக தலைவனுடன் 24வருடங்களுக்கு தன் ஆவியை அடமானம் வைத்தார்.அந்த ஒப்பந்தத்தின்படி 24வருடங்களுக்கு இவர் நினைத்தது போல வாழ்வின் அனைத்து இன்பங்களையும் அனுபவிக்களாம்.ஆனால் 24வருடங்களுக்கு பிறகு தன் உயிரை லுசீபரிடம் ஒப்படைக்க வேண்டும்.நாட்கள் உருண்டோடின, ஃபாஸ்டசும் தனக்கு பிடித்த செயல்களை செய்தார்.பின்பு, நாட்கள் வாழ்வின் எல்லையை நோக்கி நகரும்போது அவருக்கு வாழ ஆசை பிறந்தது.ஆனால்,இருதிநாளன்று அவரது உயிர் பேய்களால் கவரப்பட்டது.
            இந்த கதையை சிறிது வேறு வழியில் சிந்தித்துப் பாருங்கள், நமக்கு இப்படி ஒரு அர்ய வாய்ப்பு கிடைத்தால் நாம் என்ன செய்வோம்?.நான் என்ன செய்வேன் என்றால், ஃபாஸ்டசுக்கு மெபிஸ்டோபிலிஸ் என்ற கோய் உதவியால் பல காரியங்கள் அவர் மனமகிழ்ச்சிக்காக நிகழ்த்தினார்.எனக்கு அந்த வாய்பு கிட்டினால் மெபிஸ்டோபில்ஸ் உதவியுடன் அழிந்து போன அரிய தமிழ் புத்தகங்களை கண்டு எடுத்திருப்பேன்.இங்கிலிஸ் படிச்சாலும் தமிழச்சி!!!                
                                          (தரவு)
டைனி டாட் பெட் டைம் ஸ்டோரீஸ்

***என்ற தொகுப்பிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டதுதான் எனது படைப்பு.இதனை படித்ததன் தாக்கம் இந்த மொழிபெயர்பு.நன்றி

ஃப்ரூட்ஸ் ஆப் லோபர்

    ஃப்ரூட்ஸ் ஆப் லோபர்
மீன் பிடிக்கும் குழூ ஒன்று கடலுக்குல் சென்றனர்.அந்த குழுவின் தலைவர் வயதில்,அறிவில் மற்றும் புத்தியுடையவரும் ஆவார்.எப்போழுதுமே அவர்களை நல்வழியிலேயே செலுத்துவார்.கடலில் தன்னுடைய பரந்து விரிந்த வலையை விரித்தனர்.அதனை வெளியே எடுக்கும்போது அவர்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை.இது போன்று இரண்டு முதல் மூன்று முறை வலையை வீசினர்.அப்போழுதும் இவ்வாறே வெறும் வலை கிடைத்தது.ஆனாலும் அந்த குழுத் தலைவர் திரும்பத் திரும்ப முயற்ச்சி செய்ய கூறினார்.இந்த முறை அவர்களுக்கு சின்ன மீன்கள் சிறிதும் கடற்பாசிகளுமே நிறைய கிடைத்தது,அவையும் தூக்க கனமாக இருந்தது.
இருப்பினும் தலைவர் அந்த சிறியளவு மீன்களையும் படகுக்குள் கொட்டிவிட்டு பின் மறு முறை வீசுங்கள் என்று கூறினார்.
      அவர்கள் படகுக்குள் கொட்டும்போது,ஒரு பெட்டி கிடைத்தது.அதில் நிறைய பொற்காசுகளும் மாணிக்கங்களும் பல வகையான முத்துக்களும் இருந்தன.அவற்றை தன் வீரர்களுக்கு சரிசமமாக பிரித்துக்கொடுத்தார் அனைவரும் மகிழ்ச்சியாக வீடு திரும்பினர்.அதன்மூலம் ஒரு வேலையை திருத்தமாக செய்து முடிக்கும் வறையில் அதனை கைவிடக்கூடாது என்று அறிய முடிக்றிது.
                                                                  (தரவு)
டைனி டாட் பெட் டைம் ஸ்டோரீஸ்
***என்ற தொகுப்பிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டதுதான் எனது படைப்பு.இதனை படித்ததன் தாக்கம் இந்த மொழிபெயர்பு.நன்றி


கேரக்டர் ரிமைன்ஸ் ஸ்சேம்

                                             கேரக்டர் ரிமைன்ஸ் ஸ்சேம்
      ஒரு நாள் பூனை அழகான இளம் ஆணை பார்த்தது.பின்பு அவன் மீது அது காதலில் விழுந்தது.அவனை திருமணம் செய்ய ஆசைப்பட்டது.அனால், ஒரு பூனையால் எப்படி ஒரு மனிதனை திருமணம் செய்ய இயலும்.ஆதலால் அந்த பூனை கடவுளிடம்``அந்த பையனை நான் திருமணம் செய்து கொள்ள ஏதாவது வழி புனையுங்கள்’’என்று வேண்டியது.

      உடனடியாக கடவுள் அந்த பூனையை அழகான பெண்னாக மாற்றிவிட்டார்.அந்த பையனும் இந்த பெண்னை பார்த்து காதலில் விழுந்துவிட்டான்.அவளிடம் தன் காதலை சொன்ன பிறகு அவளை திருமணமும் செய்து கொண்டான்.
      எல்லா சடங்கும் நடந்து முடிந்தது.கடவுள் அந்த பெண்ணாகிய பூனையை சோதிக்க முடிவுஉ செய்தார்.ஆதலால், ஒரு எலியை அவர்கள் அரைக்குள் அனுப்பினார்.அந்த பெண்ணும் அந்த எலியின் மனத்தை நுகர்ந்து அதனை விரட்டி பிடித்தாள்.உடனடியாக கடவுள் அந்த பெண்ணை பழைய நிலையாகிய பூனைக்கு மாற்றிவிட்டாள்.கடவுள் ``ஒருவர் உருவத்திலோ, ஆடையிலோ நடந்த மாற்றத்தினால் எப்படி தன் இயல்பையே மாற்றிக்கொள்வர் என்று எண்ணினேன்?’’என தனக்குள் கேட்டுக்கொண்டார்.


கார்ட் அன்ட் மேன்

                                                               கார்ட் அன்ட் மேன்
கடவுள் விலங்கினங்களை படைத்தார்.சில மிருகங்கள் வேகமாக ஓடும்.சில மிருகங்களுக்கு வேருபாடான சக்தியையும் உருவத்தையும் படைத்தார்.சில பறக்கும் உறுவத்தை பட்த்தார் அதனை பறவை என நாம் அழைக்கிறோம். இந்த பறவை ஒரு இடதிலிருந்து மற்றோரு இடத்திற்கு இறையை தேடி பறந்து செல்லும்.இருதியாக கடவுள் மனிதனை படைத்தார்.
அவனையும் அந்த மனிதனை சுற்றி இருக்கும் விலங்கினங்களை பாதுகாகும் திறனை கொடுத்தார்.ஒரு நாள் மனிதன் கடவுளிடம்``கடவுளே,உலகின் அனைத்து உயிரினங்களுக்கும் பல விதமான சக்திகளை கொடுத்துள்ளீர்கள் எனக்கு மட்டும் ஏன் இந்த பாரபட்ச்சம்?’’ என்று வினவினார்.
            கடவுள் சிரித்துக்கொண்டே `` மனிதா உனக்கு நான் கொடுத்த சக்தியானது இவையனைத்தையும் மிக வலிமையானது.அதுதான் உன் பேசும் திறன்’’ என்றார்.இந்த சக்தியை பயண்படுத்திதான் இப்போழுது உன்னுடைய கேள்வியை இப்போது என்னிடம் கேட்கிறார்.வேறு எந்த பட்ப்பிற்க்கும் இப்படி பட்ட அரிய சக்தியை நான் கொடுக்கவில்லை.இன்னும் வேறு என்ன நான் உனக்கு தரவேண்டும் என்று எதிர்ப்பார்க்கிறாய்?.அக்கணத்தில் மனிதன் அவனுக்கு கிடைத்த சக்தியின் வலு அர்ந்தான்.அதிலிருந்து நாம் எப்போழுதும் இருக்கின்றதை வைத்து அனுபவக்கவேண்டும்.இல்லாததை எண்ணி வருந்தக்கூடாது என்று எண்ணினான்.