சிந்திப்போம்... லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சிந்திப்போம்... லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 6 ஏப்ரல், 2017

பெண் குழந்தை வேண்டாம்.




என் சின்னஞ்சிறு கண்மணிக்கு,

உன்னை எவ்வாறு நான் பாதுகாப்பேன்.. உன்னை நான் எதை கொண்டு
மறைப்பேன் ..,எந்த ஆடை உடுத்தி அழகு பார்பேன்..உன்னை நான் எங்கு
விளையாட விடுவேன்..,எந்த பள்ளிகூடம் பாதுகாப்பானது என்று அனுப்புவேன்..,உன்னை மாமன், நண்பன் என்று யாரை நம்பி அனுப்புவேன்..,
இந்த பொல்லா உலகில் உன்னை எவ்வாறு பாதுகாப்பேன்?

ஆண்மகனே ( சில) எப்படி இவ்வாறு மாறி போனாய்? உன்னை எளிதில்
வந்தடையும் சீர்கெட்ட ஊடகங்களா..?

தாயாக கலங்குகிறேன் உன்னை எவ்வாறு பாதுகாப்பேன் என்று..?

கடவுளே மகள் வேண்டாம் என்றால், எனக்கு குழந்தையே வேண்டாம்.

விவசாயி





சுவையான குடிநீர்




''சுமார் 100 ரூபாய்க்குள் ஆரோக்கியமான, சுவையான குடிநீரைப் பெற முடியும். மூன்று மண் பானைகளை வாங்குங்கள். ஆனால், அவற்றை ஸ்பெஷலாக வடிவமைக்கச் சொல்லிக் கேட்டு வாங்குங்கள்.

மண் பானையைச் செய்யும்போதே இரண்டு பானைகளில் தலைமுடி அளவுக்கு நுண்ணிய துளையை ஏற்படுத்தித் தரச் சொல்லுங்கள். பானையைத் தயாரித்த பின்பு அப்படித் துளையிட முடியாது. உடைந்துவிடும். மூன்றாவது பானையில் குழாய் இணைப்பு வைக்கச் சொல்லுங்கள். குழாய் இணைப்பு வைத்த பானையின் மேல் துளையிடப்பட்ட இரண்டு பானைகளையும் அடுக்கிவையுங்கள். நடுப் பானையில் தேங்காய் சிரட்டையை எரியவைத்துப் பொடித்தோ அல்லது கரித் துண்டுகளாகவோ சுமார் ஒன்றரை கப் அளவுக்கு நிரப்பிக்கொள்ளுங்கள். மேல் பானையில் சுமார் 20 கூழாங்கற்களை நிரப்புங்கள். இப்போது, மேல் பானையில் கொதிக்கவைத்து ஆறவைத்த தண்ணீரை மெதுவாக ஊற்றி நிரப்புங்கள். இரவில் தண்ணீர் ஊற்றினால், விடிந்த பின்பு அடிப்பானையில் குடிநீர் சேகரமாகிவிடும். ப்ளோரைடு உள்ளிட்ட நச்சுக் கனிமங்களை அகற்றி சுமார் 250 டி.டி.எஸ்ஸுக்குக் கீழே இருக்கும் கிரிஸ்டல் கிளியர் குடிநீர் இது. குடிக்கும்போது ஏதாவது ஒரு ஃப்ளேவர் வேண்டும் என்பவர்கள், தேங்காய் சிரட்டைக்குப் பதில் எலுமிச்சை அல்லது ஆரஞ்சுப் பழத் தோல்களைக் காயவைத்து எரித்து அந்தக் கரித்தூளை நிரப்பலாம். கரித்தூளையும் கூழாங்கற்களையும் 15 நாட்களுக்கு ஒருமுறை மாற்றுவது அவசியம்.

தர்மபுரி உள்ளிட்ட பல மாவட்டங்களில் ஃப்ளோரைடு தன்மை அதிகம் இருக்கும் தண்ணீரைக்கூட இந்த முறையில் சுத்தமான குடிநீராக மாற்றிக் குடிக்கிறார்கள். ஆனால், கடல் நீர் ஊடுருவிய நிலத்தடி நீர் மற்றும் தொழிற்சாலை ரசாயனக் கழிவுகள் கலந்த நீரை இந்த முறையில் சுத்தம் செய்ய முடியாது.

உருவத்தை பார்த்து யாரையும் எடை போடக்கூடாது...!!





இங்கிலாந்தின் பிரபல கம்பெனி ஒன்றிற்கு, பெரியதோர் இயந்திரம் ஜப்பானில் இருந்து வரவழைக்கப் பட்டது.

கோடிக்கணக்கில் விலை. அந்த இயந்திரத்தை இன்ஸ்டால் செய்ய ஜப்பானில் இருந்து ஒரு குழு வந்திருந்தது.

அதில் ஒரு 20 வயது மதிக்கத்தக்க ஒருவன். துறுதுறுவென்று எல்லாரிடமும், பேசிக்கொண்டும் சிரித்துக் கொண்டுமிருக்கிறான்.

இங்கிலாந்து கம்பெனியின் நிர்வாகிக்கு அந்தச் சிறுவனைக் கண்டதுமே ஏனோ பிடிக்கவில்லை. இரண்டொரு நாளில் இன்ஸ்டலேஷன் பணிகள் துவங்க இருக்க, ஜப்பான் நிறுவனத்திற்கு மின்னஞ்சல் அனுப்புகிறார்.

“ஏப்பா.. அவ்ளோ துட்டுப் போட்டு வாங்கிருக்கோம். சர்வீஸ் டீம்ல சின்னப்பையனைலாம் சேர்த்தி அனுப்பிருக்கீங்க? என்ன டூர் வந்திருக்காங்களா? ஏர்போர்ட்ல இருந்து ரூமுக்கு அனுப்ச்சாச்சு.

நாளைன்னைக்கு இன்ஸ்டால் பண்றப்ப அந்தப் பையன் மிஷின்ல கைய வைக்கக்கூடாது ஆமா. அதென்ன சின்னப்புள்ளைக சமாச்சாரமா?” - இதுதான் அவர் அனுப்பிய மின்னஞ்சலின் சாராம்சம்.

உடனடியாக பதில் அஞ்சல் வந்தது. “மன்னிக்க வேண்டும். தவறுதான். நாங்கள், அந்தச் சிறுவனுக்கு பதில் கொஞ்சம் சீனியரை டீமுக்கு அனுப்புகிறோம். அந்தச் சிறுவன் அங்கே இருப்பான். ஆனால் கருவியைக் கையாள மாட்டான்” என்று பதில் வருகிறது.

சொன்னபடியே கொஞ்சம் வயதில் மூத்தவர் வருகிறார். குழுவுடன் இணைந்து பணியாற்றுகிறார். அந்தச் சிறுவனும் அவர்களுடன்தான் இருக்கிறான். ஆனால் அந்த மிஷின் வேலை செய்யும் இடத்திலிருந்து கொஞ்சம் தள்ளியே அமர்ந்திருக்கிறான்.

இந்தக் குழுவினார் டீ ப்ரேக், லஞ்ச் ப்ரேக்கெல்லாம் ஒன்றாக அமர்ந்து பேசிக் கொண்டிருந்து, இரண்டு நாட்களில் இயந்திரத்தை நிறுவிவிடுகிறார்கள். வேலை வெற்றிகரமாக முடிந்துவிடுகிறது.

வழியனுப்பும்போது, இந்த இங்கிலாந்து கம்பெனி நிர்வாகிக்கு சின்னதாக ஒரு குற்ற உணர்வு. என்ன இருந்தாலும் அவ்வளவு கடுமையாக மின்னஞ்சல் அனுப்பியிருக்கக்கூடாது என்று தோன்றுகிறது.

அந்தச் சிறுவன் அவன் பாட்டுக்கு சிரித்த முகத்துடனேயே வளைய வருகிறான். அவனிடம் இதைச் சொல்லிவிட்டால் மனது லேசாகிவிடும் என்று உணர்கிறார். குழுவினர் எல்லாரும் இருக்க, சொல்கிறார்....

“ஸாரி.. ஆக்சுவலி பலகோடி ரூபாய் ப்ராஜக்ட். இன்ஸ்டால் பண்றப்ப எதும் சிக்கல் வந்தா அப்பறம், பணம் நேரம்னு பெரிய நஷ்டமாகிடும். அதான் கொஞ்சம் சீனியர் வேணும்னு கேட்டேன்.

மத்தபடி ஐ லைக் த பாய். துறுதுறுன்னு இருக்கான். ஆனா இந்த டீம்ல இப்படி ஒரு சின்னப்பையன் வந்தது எனக்கு சரின்னு படலை. அதான்..” என்று பாலிஷாகச் சொல்கிறார்.

அந்தச் சிறுவன் அதே புன்னகையுடனே இருக்க, புதிதாக வந்தவர் சொல்கிறார். “இட்ஸ் ஓகே சார்.

நாங்க வாடிக்கையாளர் கருத்துக்கு ரொம்ப முக்கியத்துவம் கொடுப்போம். நீங்க சொன்னதுமே என்னை அனுப்பி வெச்சாங்க. இப்ப மிஷின் நல்லபடியா இன்ஸ்டால் செஞ்சு, ஓடிட்டிருக்கு. ஆனா ஒரு விஷயம்..” தயங்குகிறார்.

”பரவால்ல.. எதாருந்தாலும் சொல்லுங்க”

“நான் அந்தக் கம்பெனில அக்கவுண்ட்ஸ்ல வொர்க் பண்ற ஆளுதான். எனக்கு இந்த மிஷின் பத்தி ஏபிசிடிகூட தெரியாது”

நிர்வாகி அதிர்ச்சியாகிறார். “அப்பறம் இன்ஸ்டலேஷனப்ப வேலை செஞ்சுட்டிருந்தீங்க?”

“இந்தப் பையன்கிட்ட போய்ப் போய்க் கேட்டு அவன் சொல்றத மட்டும் பண்ணினேன் அவ்ளதான்”

“அந்தப் பையன் எப்படி மிஷின் பக்கமே வராம, உங்களுக்கு இன்ஸ்ட்ரக்‌ஷன்ஸ் குடுத்திருக்கமுடியும்?”

“முடியும். ஏன்னா, இந்த மிஷினைக் கண்டுபிடிச்சதே அவன்தான்”

நீதி:

உருவத்தை பார்த்து யாரையும் எடை போடக்கூடாது...!!

கவனம் தேவை




ஒரு எளிமையான கதை அதே சமயத்தில் ஆழமான சிந்தனை 

தற்போது நல்ல நிலையிலிருக்கும் சில மூத்த மாணவர்கள் ஒன்றாக சேர்ந்து தாங்கள் படித்தப் பல்கலைக் கழகத்தின் பேராசிரியரை சந்திக்க சென்றனர். சந்திப்பின் போது சுவாரஸ்யமாக சென்றுக்கொண்டிருந்த உரையாடல் திடீரென்று வேலை மற்றும் வாழ்க்கையில் ஏற்படும் மன அழுத்தம் பற்றிய விவாதமாக மாறியது.

வந்தவர்களுக்கு காபி கொடுக்க சமையலறைக்கு சென்ற பேராசிரியர் திரும்ப வரும்போது ஒரு பெரிய கூஜாவில் காப்பியையும் பலவிதமான கோப்பைகளையும் எடுத்து வந்தார். அவை பீங்கான், பிளாஸ்டிக், வெள்ளி, எவர்சில்வர், கண்ணாடி கோப்பையென சில விலை உயர்ந்தவைகளாகவும், வேலைப்பாடுகளுடனும் சில சாதாரணமாகவும் பலவிதங்களில் இருந்தன. பேரசிரியர் அவற்றை மேஜை மீது வைத்துவிட்டு, எல்லோரையும் சூடான காப்பியை தாங்களாகவே ஊற்றி குடிக்க சொன்னார்.

எல்லோரும் ஆளுக்கொரு கோப்பையில் காப்பியை ஊற்றி அருந்த தொடங்கும்போது பேராசிரியர் சொன்னார், நண்பர்களே கவனியுங்கள்
"நீங்க எல்லோரும் விலை உயர்ந்த, அழகான கோப்பைகளில் காப்பியை எடுத்திருக்கிறீர்கள். மேஜையில் மீதி இருப்பது மிக சாதாரணமான, விலை மதிப்பற்ற கோப்பைகள். உங்கள் அனைவருக்கும் மிகச் சிறந்த பொருட்கள்தான் தேவைப்படுகின்றன. அதைத்தான் எதிர்ப்பார்க்கிறீர்கள். அது தான் உங்கள் பிரச்சினனகளுக்கும் மன அழுத்தத்திற்கும் காரணம்."

"உண்மையில் நம் அனைவருக்கும் வேண்டியது காப்பி, கோப்பையல்ல. ஆனால் நீங்கள் எல்லோரும் நல்ல விலையுயர்ந்த கோப்பையை தான் எடுக்க முயற்சித்தீர்கள், மேலும் அடுத்தவர் எப்படிப்பட்ட கோப்பையை எடுத்திருக்கிறார் என்பதையும் நோட்டமிட்டீர்கள்."

"இப்பொழுது வாழ்க்கை என்பதை காப்பி என்று வைத்துக்கொண்டால் வேலை, பணம், சமூகத்தில் நமக்குள்ள பொறுப்பு, அந்தஸ்து ஆகியவை கோப்பைகள். இவையெல்லாம் வாழ்க்கையை வாழ்வதற்காக நம்மால் பயன்படுத்தப்படும் கருவிகள். இவற்றால் எல்லாம் வாழ்க்கையின் தரம் மாறாது."

"பொதுவாக நாம் கோப்பையின் மீதே கவனம் வைப்பதால் காப்பியின் சுவையை அனுபவிக்காமல் போய்விடுகிறோம்."

"ஆகவே நண்பர்களே கோப்பையில் உங்கள் கவனத்தை சிதறவிடாமல் காப்பியின் சுவையை அனுபவியுங்கள்."

கல்வி

         




இன்றைய  காலக்கட்டத்தில்  கல்வி  என்பது  வியாபாரமாக  உள்ளது. கல்வி  என்பது  விலை  மதிக்கமுடியாதது. ஆனால்  விலை  கொடுத்து  வாங்க வேண்டிய  சூழ்நிலை. கல்வியை  எப்படி  கற்க  வேண்டுமென்றால்,

               ”கற்க  கசடற  கற்பவை  கற்றப்பின்
                 நிற்க  அதற்கு  தக”

கல்வியை  கசடு  இல்லாமல்  கற்க  வேண்டும். கசடு இல்லாமல்  கற்றால்  மட்டுமே  அது  மனதில்  அழுத்தமாய்  பதியும். எனவே, தவறில்லாமல்  கல்வியை  கற்போம்.  அறிவை  பெருக்குவோம்.


சமூக ஊடகங்கள்

                        Image result for social web pages    


            சமூக  ஊடகங்களான வாட்ஸ்அப், பேஸ்புக், டிவிட்டர் போன்ற  ஊடகங்கள் தகவல் பரிமாற்றத்திற்காக மட்டுமல்ல தேடலின் முயற்சியில் ஈடுபடுவதற்காகவும் தான். சமூக ஊடகங்களில் வரும் எந்த ஒரு செய்தியையும்  அப்படியே நம்பாமல் அந்த செய்தி உண்மையா? இல்லையா? என்பதைத் தெரிந்துக்கொள்வதற்காக தேடலின் முயற்சியில் ஈடுபட வேண்டும். தேடலின் முயற்சியில் ஈடுபடுவது தான்  சமூக  ஊடகங்களின் நோக்கம். தேடலில் ஈடுபடும் போது நம்மால் பல விஷயங்களை தெரிந்துக்கொள்ள முடியும். எனவே, தேடலில் ஈடுபடுங்கள்! அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள்!.

சொல்லின் வலிமை...


                 
     நாம் பேசக்கூடிய சொல் பிறரை மகிழ்விக்கவில்லை என்றாலும் காயப்படுத்தாமல் இருக்க வேண்டும். ஏனென்றால் ஒரு சொல் வெல்லும்,  ஒரு சொல் கொல்லும்.

திங்கள், 20 மார்ச், 2017

நல்லதை செய் நல்லதே நடக்கும்


                               
  ஒரு வகுப்பில் முத்து, கண்ணன் என்னும் சிறுவர்கள் இருந்தார்கள்.அதில் முத்து என்பவன் நாய், பூனை, அணில், ஓணான் போன்ற வாயில்லா பிராணிகளை கண்டால் கல்லால் அடித்து மகிழ்வான். அவனுடைய பெற்றோர் எவ்வளவோ அறிவுரை கூறியும் அவன் திருந்தவில்லை. ஒரு நாள் அவன் தன் வீட்டின் முன் உட்காந்து வாழைப்பழம் சாப்பிட்டான். சாப்பிட்டு விட்டு அத்தோலை தெருவில் வீசினான். ஒருவர் அதில் வழுக்கி விழுவதைக்கண்டு அவன் சிரித்து மகிழ்ந்தான். மீண்டும் ஒரு வாழைப்பழத்தை சாப்பிட்டு விட்டு தோலை தெருவில் வீசினான் வழியே வந்த ஒருவர் அதில் வழுக்கி விழுவதைக் கண்ட முத்து மிகவும் மனம் வருந்தி அழுதான் காரணம் அது அவனுடைய ”தந்தை”.

          கண்ணன் என்பவன் அனைவரிடமும் அன்பாக பழகுவான். ஒருவருக்கு உதவி செய்ய எந்த நிலையிலும் தயங்க மாட்டான். ஒருமுறை அவனுடைய நண்பன் ஒருவன் மதிய உணவு கொண்டு வரவில்லை. அவன் மிகவும் பசியினால் வாடினான். அதையறிந்த கண்ணன் தன்னுடைய உணவை நண்பனிடம்  கொடுத்தான். இருப்பினும் அவனுக்கு பசி இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த ஒரு மாணவன் கண்ணனை அழைத்து அவனுடைய உணவை இருவரும் பகிர்ந்து உண்டார்கள். இதனால் அவனுடைய பசியும் அடங்கியது.

மையக்கருத்து: நாம் செய்கின்ற செயல் நல்லதாக இருந்தாலும் தீயதாக இருந்தாலும் அது நமக்கே திரும்பும்.

புதன், 15 மார்ச், 2017

முயற்சி

                                             
                               
                            

மாணவப்பருவத்தில் இருக்கும் நாம் அனைவரும் ஏதேனும் ஒரு செயலில் வெற்றி பெற நினைத்தால் அதற்கு தகுந்த பறிற்சி மட்டும் எடுத்தால் போதாது. அதற்கு முறையான பயிற்சியுடன் கூடிய முயற்சியும் எடுக்க வேண்டும். நீங்கள் ஒரு பாடத்தை படிக்கிறீர்கள் என்றால் அதில் பயிற்சியுடன் முயற்சி எடுக்க வேண்டும். நீங்கள் ஒரு விளையாட்டு வீராங்கனையாக இருந்தால் அதில் வெற்றிக் கோப்பையை வெல்ல பயிற்சியுடன் முயற்சி எடுக்க வேண்டும். நாம் அனைவரும் கற்றது கையளவு கல்லாதது உலக அளவு. ஒரு வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவியை பார்த்தீர்கள் என்றால் அவள் பயிற்சியுடன் கூடிய முயற்சி எடுத்திருப்பாள். காந்தியடிகளின் முயற்சிக்கு பின்பு தான் உலகில் ”அகிம்சை கிடைத்தது”, அன்னை தெரசாவின் முயற்சிக்கு பின்பு தான் உலகில் “அன்பு நிலவியது”, காமராசரின் முயற்சிக்கு பின்பு தான் உலகில் உள்ள ஏழை மக்களுக்கு “கல்வி கிடைத்தது”. ஆகையால் மாணவர்களே நாம் செய்கின்ற அனைத்து செயலிலும் பயிற்சிக்கு அதிகமான முயற்சியை எடுத்து வாழ்வில் வெற்றி பெற வேண்டும்..  

திங்கள், 6 ஜூன், 2016

நாம் எல்லோரும் மே டின் இந்தியாவா?


Image result for made in india logo

நாம் தினமும் உபயோகப்படுத்தும் பொருட்களில் பெரும்பாலானவை வெளிநாட்டுத் தயாரிப்புக்களாகவே உள்ளன. அதை நாம் பெரிதும் கண்டுக்கொள்வதில்லை. உதாரணமாக இந்தியாவில் பெரும்பாலானோர் பயன்படுத்தும் பொருட்களையும் அவற்றை உற்பத்தி செய்யும் நாடுகளையும் பார்ப்போம்.
சோப்பு;
லக்ஸ் – ஐக்கிய இராஞ்சியம் (UK)
டவ் – ஐக்கிய இராஞ்சியம் (UK)
பியர்ஸ் – இங்கிலாந்த்
டெட்டால் – ஐக்கிய இராஞ்சியம் (UK)
லைபாய் – அமெரிக்கா
கைபேசி;
சாம்சங் – தென் கொரியா
நோக்கியா – பின்லாந்த்
மைக்ரோ சாப்ட் – அமெரிக்கா
பிலாக் பெரி – ஹங்கேரி
சோனி – ஜப்பான்
மடி கணினி;
ஹச்பி – ஐக்கிய இராஞ்சியம் (UK)
டெல் – ஐக்கிய இராஞ்சியம் (UK)
ஆப்பிள் – கலிபோர்னியா
வையோ – ஜப்பான்
லெனோவா – சீனா
தொலைக்காட்சி;
சோனி – ஜப்பான்
எல்ஜி – தென் கொரியா
பிலிப்ஸ் – நெதர்லாந்த்
ஹிடாச்சி – ஜப்பான்
சாம்ப்;
சன் சில்க் – ஐக்கிய இராஞ்சியம் (UK)
பேண்டீன் – சுஜர்லாந்து
ஹெட் அண்ட் சோல்ஜர்ஸ் – அமெரிக்கா
இப்படி நாம் உபயோகப்படுத்தும் பெரும்பாலான பொருட்கள் வெளிநாட்டின் தயாரிப்புகளாகவே உள்ளன. ஆனால் பெரும்பாலான வளர்ந்த மற்றும் வளர்ந்து வரும் நாடுகள் தங்கள் நாட்டின் தயாரிப்புகளுக்கே முக்கியத்துவம் தருகின்றன. உதாரணமாக சீன மக்கள் சீன நாட்டின் தயாரிப்புகளுக்கே அதிக முக்கியத்துவம் தருகின்றன. அது போல ஒரு இந்தியராக இருந்து கொண்டு இந்தியாவின் தயாரிப்புகளுக்கு முக்கியத்துவம் தரவேண்டியது நமது கடமை. ஆனால் அவ்வாறு நாம் செய்வது இல்லை. இந்தியாவின் தயாரிப்புகளுக்கு இந்தியாவிலேயே முக்கியத்துவம் இல்லாத போது உலக அளவில் எவ்வாறு முக்கியத்துவம் பெறும்.
நாம் ஒரு பொருளை வாங்கும் போது அது எந்த நாட்டின் தயாரிப்பு என்று பார்ப்பதே இல்லை என்பதே இதற்கு முக்கியமான காரணம் ஆகும். இனிமேலாவது இந்தியாவின் தயாரிப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க முயற்சிப்போம்.