புலர்கின்ற பொழுதெல்லாம்
மலர்ந்தாடும் மலர்களென.. !!
மலர்ந்தாடும் மனதினிலே
உலர்ந்தோடும் நினைவுகள்..!!
ஒவ்வொரு நாளும்
ஒவ்வொரு வேடம்..!!
ஒப்பனைகளை மாற்றியே
காலங்கள் ஓடும்..!!
காலங்கள் கொடுக்கும்
கதாபாத்திர மேற்றே..!!
சிலநேரம் கோமாளியாய்
பலநேரம் ஏமாளியாய்..!!!
முகமூடியுடன் சிலநேரம்
முகமூடியற்று பலநேரம்..!!
நடிக்கின்றோமே *உலகமென்ற*
*நாடக மேடையில்..!!*
S.KALADEVI II- Bsc CS KSRCASW
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக