சனி, 27 ஜூலை, 2019

இணையத்தின் காலம்..!!!!

இணையத்தின் காலம் இது....!!!!!

💐💐💐💐💐💐💐💐💐💐💐

தண்ணீரை விட
உணவை விட
அவசியத்
தேவையாகிவிட்டது
இணைய இணைப்பு...!!!!

கைப்பேசியின் சிறிய சதுரத்திற்குள்
அடங்கிவிட்டது
நம் வாழ்விடம்....!!!

வைஃபையின் தயவில்
மயக்கத்தை
அனுபவமாக்குகிறது
நம் வாழ்வு....!!!!

குறுந்தகவலுக்கேற்ற சொற்களோடு
குறுகிவிட்டது
நம் மொழி....!!!

பீட்சாவும் பர்கரும்
இலவச இணைப்பான
அந்நிய குளிர்பானங்களோடு
வீட்டு வாசலுக்கே வருவதால்
மழை வெயில்
மாறி வருவதைப் பற்றி
நமக்கு
எந்தக் கவலையுமில்லை....!!!!

நிஜத்தில் வாழ்வதை விட
நிழல் உலகான
இணையத்தில்
இனிமை காணப் பழகி விட்டோம்...!!!

நம்மை ஒரு படி தாண்டி
அயல் தேசத் தோழர்களோடு
மெய்நிகர் விளையாட்டில் கலந்துகொண்டு
ஆவேசமாய்
கூச்சலிடுகிறார்கள் நம் குழந்தைகள்.... !!!

கணவன் ஓர் அறையிலும்
மனைவி ஓர் அறையிலும்
மடிக் கணினியில்
உலகின் ஏதேதோ
மூலைகளுக்குப் பயணம்போய்
குடும்ப பாரம் சுமக்கிறோம்...!!!!!!

களைத்துப் போய்
அதிகாலையில் கண்ணயர்கையில்
கிழக்கே உதிப்பது
மெய்நிகர் சூரியன் அல்ல
சுட்டெரிக்கும் சூரியன் என்பதை
உணர்வதில்லை நாம்
குளிர் சாதன வசதியால்...!!!!!!

நம் பருவங்களை உறிஞ்சி
பசுமைகளைக் கருக்கும்
புவியின் வெப்பமோ..
நம் நதிகளைச் சுரண்டி
நவீன நகர்களை எழப்பும்
புதிய பொருளாதாரமோ...
புரிந்துவிடாமல்
விலகா இருளை இழுத்து வந்து
விதைக்கிறது
நம் பகல் தூக்கம்.....!!!!!!!

மீண்டு
கண் விழிக்கையில்
தண்ணீரும் உணவும்
கணிணித்திரையில்
மெய்நிகர் காட்சிகளாக மட்டும் இருக்கும்...!!!!!!!

தீராப் பசியோடும்
முடிவிலாத் தவிப்போடும்
அலைந்து கொண்டிருப்போம் நாம்
பாளம் பாளமாய் வெடித்த
விவசாய நிலங்களை
வெறித்தபடி
தலைமுறை சாபங்களை
சுமந்தபடி....!!!!

💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

2 கருத்துகள்: