செவ்வாய், 23 ஜூலை, 2019

கள்ளி செடியின் கதறல்

            கள்ளி செடியின் கதறல்

கள்ளிச் செடி ஓரம்
சிறு சிறு கல்லறையில்
கண்ணீரை காணும் போதெல்லாம்
கண்ணீர் வடிக்கும் கள்ளிச்செடி....

சிறுச் செடியாக இருந்த போதே
கிள்ளி எறிந்திருந்தால்
என் அருகில்
இத்தனை பாடைகள்            இருந்திருக்காது....!!!!!!!

பட்டாடையில் படுக்க வேண்டிய குழந்தைகளுக்கு....
ஏன் ...பால் கொடுத்து பாடையில்
படுக்க வைத்தனர்....!!!

கொஞ்சி விளையாடும் குழந்தைகளை..
பூமாலைச் சூடி...
புதைக் குழியில் படுக்க வைத்து
பாமாலைப் பாடி ...
பொன்னுஞ்சல் ஆடி...
புதைத்து விட்டனர்...!!!

பிறந்ததைத் தவிர வேறு யாதும்
தவறு செய்யாத பிஞ்சு
உயிரை  வேரோடு
அழிப்பது
ஏணோ..!!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக