சனி, 9 ஜூலை, 2016

படிப்பு எதற்கு..?? அறிவு எதற்கு..??


Image result for கல்வி உளவியல்

ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப்பு உடைத்து.(398)

இக்குறளில் வள்ளுவர் கூறியப் பொருள் ஒருவன் தனது ஒரு பிறப்பில் கற்ற கல்வியானது அவனது ஏழு பிறப்பிலும் உதவும் தன்மை உடையது என்பது பொருள்.

கல்வி முறை;

இன்றைச் சூழலில் கல்வி என்பது மாணவர்களாகிய எங்களை சிந்திக்க வைக்கிறதா என்றால் அது பெரிய கேள்வி குறியாக இருக்கிறது.இன்றைய பாடத்திட்டம் என்பது நேற்றைய பிணங்களைப் பற்றி அறிவதாக இருக்கிறது.நேற்றைய வரலாறு முக்கியம்.ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை கல்வித் திட்டங்கள் மாற்றப்பட வேண்டும்.ஆனால் இதனை எத்தனை பள்ளி மற்றும் கல்லூரிகள் கடைப்பிடிக்கின்றது..??


கல்வி முறையில் மாற்றம்;

நேற்றைய வரலாற்றை தெரிந்துக் கொள்ள வேண்டும்.ஆனால் நாளைய வரலாற்றை உருவாக்கும் வழிமுறைகள் அடைக்கப்பட்டுள்ளது.மாணவர்களை சுயமாக சிந்திக்கும் திறனை வளர்க்கும் கல்வி முறை வேண்டும்.மதிப்பெண் என்பது முக்கியமல்ல.கல்வியால்  தான் பெற்ற அறிவு என்ன என்பது தான் முக்கியம்.முதல் மதிப்பெண் எடுக்கும் மாணவர்கள் எல்லாம் அறிவாளிகள் அல்ல.கடைசி மதிப்பெண் எடுப்பவர்கள் எல்லாம் முட்டாள்கள் அல்ல என்பதை உணர்த்தும் கல்வியை தான் மாணவர்களாகிய நாங்கள் விரும்புகிறோம்.

படிப்பும் வேலை வாய்ப்பும்;

இன்றைய கல்வி முறை மாணவர்களை தொலைநோக்கோடு செயல்பட செய்ய வேண்டும்.மதிப்பெண் என்ற பேராசையால் பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளின் எதிர்காலத்தை புதைத்து விடுக்கின்றனர்.கல்வி நிறுவனங்கள் தங்களின் தரத்தை உயர்த்திக் கொள்ள அப்பாவி மாணவர்களை தவிக்கவிடுகிறார்கள்.சரி இவ்வளவு செய்யும் நிறுவனங்கள் மற்றும் பெற்றோர்கள் தனது பிள்ளைகள் படிக்கும் துறைக்கேற்ற வேலை வாய்ப்பு கிடைக்கிறதா என்று பார்த்தால் அதுவும் இல்லை.


அரசுப் பள்ளி மற்றம் தனியார் பள்ளி;

அரசு கல்வி வேண்டாம்,அரசு மருத்துவம் வேண்டாம்,அரசு பேருந்து வேண்டாம் ஆனால் அரசு வேலை மட்டும் வேண்டும்.என்று எண்ணும் தலைமுறை இருக்கையில் யாரை குறைச் சொல்வது..??தனியார் நடத்த வேண்டியதை அரசும்,அரசு நடத்த வேண்டியதை தனியாரும் நடத்துகையில் எப்படி மாற்றம் கொண்டு வர முடியும்.

நம் நாட்டிற்கும் அயல்நாட்டிற்கு உள்ள வேறுபாடு;

நம் இந்தியாவில் ஏற்கனவே நான் கூறியபடி நேற்றைய பிணங்களை வைத்துக் கொண்டு ஆராய்ச்சி செய்துக் கொண்டு இருக்கிறோம்.குழந்தைகளை அவர்கள் போக்கில் முடிவு எடுக்க விடுவதில்லை.காரணம் பாதை மாறிவிடுவார்கள் என்பது.அவர்களின் கருத்து உண்மையே.ஆனால் இக்கருத்தை உருவாக்கியது யார் என்றால் சமூகமாகிய நாம் அனைவரும் தான்.ஆனால் அயல்நாடுகளில் ஒரு குறிப்பிட்ட வயதுக்கு மேல் குழந்தைகள் அவரவரின் முடிவுகளை,அவர்களின் திறமைகளை அவர்களே தெரிந்துக் கொண்டும் வளர்த்துக் கொள்ளவும் உதவுகிறது.நமது நாட்டில் படித்துவிட்டு வெளிநாடுகளில் வேலை செய்வதால் சம்பளம் அதிகம் என்று வெளிநாடுகளில் வேலைக்கு செல்பவர்களை பார்த்திருக்கலாம்.அதற்கு காரணம் வெளிநாடுகளில் வேலை நேரம் என்பது ஆறு மணி நேரம் தான்.ஆனால் நம் இந்தியாவில் மக்கள் பணம் எவ்வளவு கிடைத்தாலும் வேலை நேரத்தை உயர்த்திக் கொண்டு உழைப்பார்கள்.ஆனால் அங்கே இருப்பவர்களால் அப்படி உழைக்க முடியாது.எனவே தான் நம் மக்கள் அங்கே வேலைக்கு சென்றால் அதிக நேரம் உழைப்பும் அதன் பயனாக ஊதியமும் பெற முடிகிறது.

முடிவு;

ஒரு மாணவன் தான் கற்ற கல்வியில் முதல் மதிப்பெண் எடுக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு படிக்கக் கூடாது.அந்த கல்வியால் தான் எவ்வளவு அறிவை முதலாக பெற்றோம் என்ற எண்ணத்தோடு படிக்க வேண்டும்.கல்வியே ஒரு நாட்டின் வளம்.அதனை தரமாக நுட்பமாக தர வேண்டும்.கல்வியின் உண்மை நிலையை அறிந்துக் கொண்டு படிக்க வேண்டும்.முக்கியமாக மாணவர்களின் திறமை வெளிப்படும் விதமாகவும் அமைய வேண்டும்.மேலும் அவர்களின் கற்பனை திறன் வெளிப்படுத்தும் ஒரு சூழலை உருவாக்குவதே ஒரு கல்வியின் சிறந்த சேவை.
ஏதோ எனது மனதில் எழுந்தவற்றை எழுதிவிட்டேன்.


2 கருத்துகள்:

  1. உண்மைதான்... இப்போதெல்லாம் பள்ளிகளில் கூட முதல் மதிப்பெண்ணுக்காகத்தான் மாணவர்கள் தயார் செய்யப்படுகிறார்களே தவிர, அந்தப் படிப்பால் அவர்கள் அறிவில் ஏற்றிக் கொண்டது என்ன என்பதைப் பற்றி கவலைப்படுவதில்லை...
    சிறப்பான பகிர்வு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் ஐயா.உண்மையே இன்றைய சூழலில் கல்வி முறை என்பது சிந்திக்க வைப்பதில்லை ஐயா.அதுவே எனது வருத்தம் ஐயா.நன்றி தங்களின் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி ஐயா.

      நீக்கு