சனி, 9 ஜூலை, 2016

மார்பிங் என்றால் என்ன..??



மார்பிங் செய்யப்பட்ட புகைப்படத்தை அழிப்பது எப்படி? என்பது பற்றிய தகவல்கள் பேஸ்புக்கில் கணக்கு வைத்திருக்கும் பல பெண்களுக்கு இன்னமும் சரியாக தெரிவதில்லை.

ஒரு பெண்ணின் புகைப்படத்திலுள்ள தலையை அகற்றி அதை இன்னொரு பெண்ணின் புகைப்படத்தில் பொருத்தி அந்த படத்தை சமூக விரோதிகள் பேஸ்புக்கில் வெளியிடுகிறார்கள். இந்த முறைக்கு ‘‘மார்பிங்” என்று ஆங்கிலத்தில் பெயர். இந்த ‘‘மார்பிங்” வகை குற்றங்கள் உலகம் முழுவதும் மிக அதிக அளவில் நடந்து வருகிறது.

தங்களுடைய பேஸ்புக் பக்கங்களில் பதிவு செய்து வைத்திருக்கும் பெண்களின் புகைப்படங்களை, அவர்களுடைய பேஸ்புக் பக்கங்களுக்குள் சமூக விரோதிகள் நுழைந்து அந்த புகைப்படங்களை திருடி எடுத்து இவ்வாறு ‘‘மார்பிங்” செய்து விடுகிறார்கள்.

சில பெண்கள் தங்கள் புகைப்படங்களை மொபைல் போனில் பதிவு செய்து வைத்திருப்பதுண்டு. அவர்கள் மொபைல் போன் தொலைந்து அது குற்றவாளிகள் கையில் கிடைக்கும் போது அந்த பெண்களின் புகைப்படங்களை எடுத்து ‘‘மார்பிங்” செய்து பேஸ்புக் மற்றும் இணைய தளத்தில் வெளியிடுகிறார்கள்.

பொதுவாக இதுபோன்ற குற்றங்களில் பெண்களின் வருங்கால வாழ்க்கையை மனதில் கொண்டு பெற்றோர்களும் காவல் துறையிடம் புகார் கொடுக்க தயங்குகிறார்கள்.

இது போன்ற தங்களது சித்தரிக்கப்பட்ட ஆபாச படங்கள் பேஸ்புக்கிலோ அல்லது இணைய தளத்திலோ வந்தால் அவற்றை எப்படி? உடனடியாக நீக்க வேண்டும் என்ற யுக்தியை பெண்களும் மற்றும் பெற்றோர்களும் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.

பெண்கள் தங்களது ஆபாச படத்தை பேஸ்புக்கில் பார்த்தால் உடனடியாக அந்த படத்தின் மேல் வலது பக்கத்திலுள்ள அம்புக் குறியை அழுத்தினால் ‘‘ரிப்போர்ட் போட்டோ” என்ற ஒரு ஆப்சன் வரும். அதை நீங்கள் கிளிக் செய்துவிட்டால் 72 மணி நேரத்தில் அந்த ஆபாச புகைப்படம் பேஸ்புக்கிலிருந்து நீக்கப்பட்டு விடும். அதே போல் பேஸ்புக்கிலுள்ள ‘‘ஹெல்ப் சென்டர்” உபயோகித்து புகார் செய்தால் அந்த ஆபாச படம் நிச்சயம் நீக்கப்பட்டு விடும்.

ஒரு வேளை பேஸ்புக்கை தவிர வேறு வெப் சைட்டில் உங்கள் ஆபாச புகைப்படம் வந்தால் ‘‘கான்டெக்ட் யூஸ்” என்ற ஆப்சனுக்கு நீங்கள் புகார் செய்தால் அந்த ஆபாச படம் அல்லது வீடியோ உடனே நீக்கப்பட்டு விடும். இந்த முயற்சிகள் அனைத்தும் பலனளிக்காத பட்சத்தில் நீங்கள் காவல்துறையிடம் தயங்காமல் புகார் அளிக்க வேண்டும். அப்போது தான் குற்றவாளிகளை தப்பிக்க விடாமல் வேறு யாருக்காவது கெடுதலை செய்வதற்கு முன் உடனடியாக கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்று கொடுக்க முடியும்.

பேஸ்புக்கில் ‘‘பிரைவெட் செட்டிங்ஸ்” என்ற ஒரு வசதி உள்ளது. அதை நீங்கள் ஏற்படுத்திக் கொள்ளும் பட்சத்தில் உங்களுடைய நெருங்கிய நண்பர்களை தவிர வேறு யாரும் உங்கள் புகைப்படங்களை பார்க்க இயலாது. இணைய தளத்தில் உங்கள் புகைப்படத்தை பகிர்வு செய்யும் போது மிகவும் எச்சரிக்கையுடன் பகிர்வு செய்ய வேண்டும். மிகவும் நம்பிக்கையானவர்களிடம் மட்டுமே உங்கள் புகைப்படத்தை பகிர வேண்டும்.

பேஸ்புக்கில் பெண்கள் தனியாக இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்யக்கூடாது. உங்கள் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்திருக்கும் புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவேண்டும். காரணம் இப்படிப்பட்ட புகைப்படத்திலிருந்து ‘‘மார்பிங்” செய்வது மிகவும் கடினம். யாராவது பெண்களை புகைப்படம் எடுத்தால் அதை தடுத்து நிறுத்துங்கள். இந்த புகைப்படங்கள் ஆபாச புகைப்படங்களாக மார்பிங் செய்யப்படலாம்.

இந்த கணினி உலகத்தில் போலிகளை உருவாக்குவது மிகவும் எளிது. எனவே ஆபாச காட்சிகள் பெரும்பாலும் போலியானவையே. இந்த போலி ஆபாச படங்களால் பெண்கள் பலியாவதை தடுத்து நிறுத்த, அந்த சமயங்களில் பெற்றோர்கள், கணவர்கள் மற்றும் உறவினர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும்.

அந்த ஆபத்தான கட்டத்தில் பாதிப்புக்கு உள்ளான அந்த பெண்களுக்கு உறுதுணையாக இருந்து அந்த பெண்களை மீட்க முயல வேண்டுமே யொழிய, சந்தேக கண்களை அந்த பெண்கள் மீது பாய்ச்சி அந்த பெண்களின் உயிரை மாய்த்துக் கொள்ள பெற்றோர்களும் மற்றும் சம்பந்தப்பட்டவர்களும் காரணமாகி விடக்கூடாது. இது நம் அனைவருக்கும் தெரிவிக்கும் செய்தியாகும்.

6 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றிகள் ஐயா.

      நீக்கு
  2. நல்லதொரு விழிப்புணர்வு பதிவு அதற்குமுன் எனது கருத்து தரங்கெட்ட மனிதர்களை திருத்துவது என்பது நடவாத காரியம் என்ற நிலையாகி விட்டது முன்னெச்சரிக்கையாக பெண்கள் தனது புகைப்படத்தை முகநூலில் பகிர்வதை தவிர்கலாம் என்பதே எனது கருத்து அதிகபட்சம் தனது திருமணம் வரையாவது.... பிறகு கணவர் பாதுகாவலனாகி விடுவார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றிகள் ஐயா.உண்மையை தான் கூறியுள்ளீர்கள்.பெண்கள் குறைந்த பட்சமோ அதிக பட்சமோ தங்களின் புகைப்படங்கள் வெளியிடுவதை தவிர்க்க வேண்டிய ஒன்று தான் ஐயா.ஆரம்பத்தில் நானும் எனது முகநூல் பக்கத்தில் எனது புகைப்படத்தையும் போட்டுவிட்டேன்.பிறகு சரி செய்துக் கொண்டேன்.நன்றி ஐயா.

      நீக்கு
  3. அனைவருக்கும் பயனுள்ள கட்டுரை.

    பதிலளிநீக்கு