சில நேரங்களில்
உங்களின் பேஸ்புக் கணக்கு வேறு ஒருவரால் ஹாக்
செய்யப்படும் அனுபவம் உங்களுக்கு நேரிட்டிருக்கலாம்.இதுவரை ஏற்படவில்லை என்றாலும் வருமுன்
காப்பதற்கு சில நடைமுறைகளை இங்கே பார்க்கலாம்.இவை அனைத்தும் பேஸ்புக் நிறுவனத்தாலேயே
அறிவுறுத்தப்படும் விஷயங்கள் ஆகும்.
1.பாஸ்வேர்டு
பாதுகாப்பு….;
பேஸ்புக்கில்
பயன்படுத்தும் பாஸ்வேர்டு கடினமானதாகவும் வேறு தளங்களில் பயன்படுத்தாததாகவும் இருக்க
வேண்டும்.நம்பர் மற்றும் ஸ்டிரிங்கையும் பயன்படுத்தி உருவாக்குவதே சிறந்தது.குறைந்தது
6 எழுத்துகள் வருமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.
2.பிரைவேட்
பிரவுசிங்..;
பேஸ்புக்கை
பயன்படுத்திய பின்னர் ’லாக் அவுட்’ செய்து எப்போதும் பிரவுசரை பூட்டி விடுங்கள்.முடிந்தால்
கணினியை அணைத்துவிடுங்கள்.இன்டர்நெட் சென்டராக
இருந்தால் இது ரொம்பவும் முக்கியம்..”Remember Me”-ஐ எப்போதும் செக் செய்யக்கூடாது.
3.மின்னஞ்சல்
பாதுகாப்பு..;
பேஸ்புக்குடன்
தொடர்புடைய மின்னஞ்சல் கணக்கையும் எப்போதும் பாதுகாப்பாக வைத்திருங்கள்.ஏனெனில் தொடர்புடைய
மின்னஞ்சல் கணக்கைப் பயன்படுத்த முடிந்தால் பேஸ்புக்கிலும் எளிதாக நுழைந்துவிடலாம்.இரண்டுக்கும்
எப்போதும் வேறு பாஸ்வேர்டை தருவதே நல்லது.
4.பாதுகாப்பு
கேள்விகள்..;
பேஸ்புக் கணக்கைத்
தொடங்கும்போது சில பாதுகாப்புக் கேள்விகள் கேட்பார்கள்.அவை,பாஸ்வேர்டை மறந்துவிட்டால்
கணக்கை மீண்டும் பயன்படுத்த உதவும்.எனினும் இவற்றில் எப்போதும் கடினமான கேள்வி-பதில்களை தேர்வு செய்யுங்கள்.அவ்வாறு செய்யும்போது
மற்றவர்கள் அவற்றை ஊகிக்க முடியாது.இதுவரை கேள்வி-பதில்களை செட் செய்யவில்லை என்றால்
Account settings page சென்று அவற்றை உருவாக்கிக் கொள்வது நல்லது.
5.லாகின் செய்யும்போது..;
எப்போதும்
Facebook.com சென்ற பின்னரே லாகின் செய்யுங்கள்.மின்னஞ்சலில் வரும் தெரியாத இணைப்புகளில்
லாகின் செய்ய வேண்டாம்.
நல்ல பயனுள்ள பதிவு வைசாலி சகோ...
பதிலளிநீக்குதங்களின் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றிகள் ஐயா.
நீக்குநல்ல அறிவுரைகள்.... நன்றி.
பதிலளிநீக்குதங்களின் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றிகள் ஐயா.
நீக்குஅருமையான தகவல் தோழியே…
பதிலளிநீக்குஇது போன்ற பல முக்கியமான தகவல்களை உலகிற்கு அறிமுகப்படுத்த என் அன்பு வாழ்த்துகள் தோழியே…
நன்றிடா எனக்கு சிலவற்றை அனைவரும் அறிந்துக்கொள்ள செய்வேன் டா.நன்றி
நீக்குநல்ல யோசனைகள் நன்றி
பதிலளிநீக்குவருக ஐயா.மறுமொழிக்கு நன்றிகள் ஐயா.
நீக்கு