செவ்வாய், 5 ஜூலை, 2016

ஆல் தி வால்ட்ஸ் எ ஸ்டேஜ்

ஆல் தி வால்ட்ஸ் எ ஸ்டேஜ்
                                    --வில்லியம் ஷேக்ஸ்பியர்
வில்லியம் ஷேக்ஸ்பியர்(1564-1616)சிறந்த நாடக மற்றும் கவிதை எழுத்தாளர். இவரது படைப்புகள் பலவற்றை பல மெழிகளில் மெழிபெயர்க்கப்பட்டுள்ளன. இவரது சில சிறந்த நாடகங்களான ஹாம்லட்,ஒதல்லோ,மாக்பேத்,கிங் லியர், தி மிட் சம்மர் நைட் டிரீம்,தி மெர்சன்ட் ஆப் வினைஸ் மற்றும் தி டேம்பஸ்ட் என்பனவாம்.

      ஷேக்ஸ்பியரது`ஆல் தி வால்ட்ஸ் எ ஸ்டேஜ்` என்ற பகுதி`அஸ் யூ லைக் இட்` என்ற நாடகத்திலிருந்து ஆக்ட்III சீன் 7 பகுதியை இங்கு குறிப்பிடுகிறார்.இதில் வரும் சோகக் கதாப்பாத்திரமான ஜாகுவஸ் கூறும் வாழ்கைத் தத்துவமே இப்பகுதி.அவரைப் பொறுத்த வரை மனித வாழ்வு ஏழு பருவங்களைக் கொண்டது.அவை குழந்தை,பள்ளிச் சிறுவன்,காதலர்,சிப்பாய், வளர்ந்த வருவம்(adult hood),முதுமை பருவம் மற்றும் இரண்டாம் குழந்தை பருவம், என்று கூறுவர்.
      இதில் முதலாம் பருவமான தாய் அரவனைப்பில் உள்ள குந்தை பருவத்தில் எதை சாப்பிடக் கொடுத்தாலும் கக்கிக்கொண்டும்,அழுதுகொண்டும் இருப்பான்.இரண்டாம் பருவத்தில் விருப்மில்லாமல் பள்ளிக்கு செல்வான் பொழுதும் பகார் செய்து கொண்டே இருப்பான்.3ஆம் பருவமான காதலர் பருவத்தில் தன் காதலியை ஆளமாக காதல் செய்வான்,அவளது கண்கள் புருவம் முதலியனவற்றை ஆளமாக வருணித்து பாடுவான்.
பின்னர், 4ஆவர் பருவமான சிப்பாய் பருவத்தில் பல சத்தியங்களை எடுத்துக்கொள்வான்.தனது பெருமை மீது பொறாமை கொள்வான் அதனை காப்பாற்ற வேண்டும் என்று நினைப்பான்.
      ஐந்தாம் பருவத்தில் சிறு தொப்பை கொண்டு தனக்கு பிடித்த உணவுகளை உட்கொண்டு பழமொழிகளை தன் வாழ்கை ஆனுபவத்துடன் எடுத்துக் கூறுவர்.6ஆம் பருவமான முதுமையில் மெளிந்து,தளர்ந்து போயிருப்பர்.தனது பார்வைக் குறையால் மூக்கின் மீது கண்ணாடி போட்டுக் கொண்டும்,வெற்றிலை போட்டும் சிறிது பணத்தை தனது கப்பையில் வைத்துக் கொண்டு பெரிய சட்டைகளையெல்லாம் அனிந்து கொண்டிருப்பார். கடைசி பருவமான இரண்டாம் குழந்தை பருவத்தில், மனிதன் முழூ குழந்தையாகவே மாருகின்றார்.பெரும்பாலும் அனைத்தையும் இவ்வயதில் மறந்திருப்பர்.இவரது நினைவாற்றல் குறைந்தே இருக்கும். பற்கள், பார்வை ,சுவை அனைத்தும் தளர்ந்தே இருக்கும்.பின்னர் இந்த நாடகத்தை நிறுத்திவிட்டு உலகம் என்னும் மேடையை விட்டு வெளியேரிவிடுவான் என்கிறார்.


2 கருத்துகள்: